பொதுவாக இணையதள வடிவமைப்பாளர்கள் புதிய இணையதளங்களை வடிவமைப்பதில் தான் ஆர்வம் காட்டுவார்கள். தேவை எனில், பழைய தளங்களை புதுப்பதிலும் ஈடுபாடு காட்டுவார்கள். ஆனால், உலகப்புகழ் பெற்ற இணையதள வடிவமைப்பாளர் ஒருவர் பழைய இணையதளம் ஒன்றை கற்பனையில் மீட்டெடுக்க முயன்றிருப்பதை அறிந்த போது வியப்பாகவே இருந்தது.
அதாவது, அரசியல் கட்சி ஒன்றின் இணையதளம் கடந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து பார்த்து அதன் பழைய தளத்தை உருவாக்கியிருக்கிறார்.
பிரிட்டனில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், தொழிலாளர் கட்சியின் பழைய வடிவமைப்பை ஆண்டி கிளார்க் எனும் அந்த வடிவமைப்பு கலைஞர் மீட்டெடுத்திருக்கிறார்.
பிரிட்டன் தேர்தல் முடிந்த பல மாதங்கள் ஆகிவிட்டன என்ற போதிலும், கிளார்க்கின் இந்த முயற்சி கவனிக்க வேண்டியதாகவே இருக்கிறது. காரணம், வரலாற்று நோக்கில் இணையதளங்கள் பல விதங்களில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனையை இது மையமாக கொண்டிருப்பது தான்.
2024 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரிட்டனில் தேர்தல் ஜுரம் உச்சத்தில் இருந்த சூழலில், கிளார்க் தனது இணையதளத்தில் தேர்தல் தொடர்பான பதிவு ஒன்றை எழுதியிருந்தார். தேர்தல் கால பதிவு என்றாலும், தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்பதையும், 1997 ல் கிடைத்த வெற்றியை விட தொழிலாளர் கட்சி இம்முறை பெரிய வெற்றி பெறும் வாய்ப்புள்ளதையும் கருத்துக்கணிப்புகள் உணர்த்துவதாக தெரிவிக்கப்படுவதை தவிர, இந்த பதிவில் அரசியல் கருத்துக்கள் எதுவும் இல்லை.
கிளார்க்கும் தொழிலாளர் கட்சி ஆதரவாளர் என்றாலும், கட்சியின் தொலைநோக்கில் தனக்கு பழைய உற்சாகம் இல்லை என குறிப்பிடுபவர், 1997 தேர்தல் பிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்ட தொழிலாளர் கட்சியின் பழைய இணையதள வடிவத்தை இப்போது காண முடியவில்லை என்பதை குறிப்பிடுகிறார். இதுவே அவரது முக்கிய கவலையாகவும் இருக்கிறது.
1997 தேர்தலில் டோனி பிளேர் துடிப்பான தலைமை மூலம் கட்சிக்கு வெற்றியை தேடித்தந்தார். அப்போது அவரது தேர்தல் பிரச்சாரத்திற்காக labourwin97.org.uk எனும் இணையதளம் தொழிலாளர் கட்சி சார்பில் அமைக்கப்பட்டு ஆதரவு திரட்டப்பட்டது.
தேர்தல் என்றாலே பிரச்சாரமும் அதன் வடிவங்களும் தானே முக்கியம். இப்போது பிரச்சார வியூகத்தில் சமூக ஊடக உத்திகள் ஆதிக்கம் செலுத்துவது போல, அந்த காலத்தில், இணையதளங்களை அமைப்பது முக்கிய உத்திகளில் ஒன்றாக இருந்தது. திரைப்படங்களும் கூட இந்த உத்தியை பின்பற்றியுள்ளன.
இப்படி தான், டோனி பிளேர் பிரச்சார தளமும் அமைக்கப்பட்டது. தொழிலாளர் கட்சி மீண்டும் எழுச்சி பெறுவதாக கருதப்பட்ட நிலையில் இந்த தளத்தை திரும்பி பார்ப்பதில் ஆர்வம் ஏற்படுவது இயல்பானது தானே. ஆனால் பிரச்சனை என்னவெனில், இந்த பழைய பிரச்சார தளத்தை அணுகிய போது, கிளார்க்கிற்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
ஏனெனில், அந்த முகவரியில் டோனி பிளேர் பிரச்சார தளத்தை அணுக முடியவில்லை. தேர்தல் முடிந்துவிட்டதால், தளம் முடிந்துவிட்டது, மேலும் தகவல்கள் தேவை எனில் கட்சி இணையதளத்தை அணுகவும் எனும் அறிவிப்பு மட்டுமே காணப்பட்டது.
பொதுவாக, இப்படி மூடப்படும் அல்லது காணாமல் போகும் தளங்களின் பழைய வடிவங்கள் இணைய காப்பகம் (Wayback Machine) தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால், பிளேர் பிரச்சார தளத்தின் பழைய வடிவம் இணைய காப்பகத்திலும் காணப்படவில்லை.
தேர்தல் வரலாற்றின் ஆவணமாக திகழக்கூடிய ஒரு இணையதளம் இருந்த சுவடுகூட தெரியவில்லை என்பது இழப்பு தானே.
இணையதள வடிவமைப்பாளர் என்பதால், கிளார்க் இந்த ஏமாற்றத்தை அப்படியே விட்டுவிடவில்லை. மாறாக, 1997 ம் ஆண்டின் டோனி பிளேர் பிரச்சார் தளம் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து பார்த்து அதனடிப்படையில் பழைய தளத்தை வடிவமைத்தார்.
சும்மாயில்லை, 1997 ம் ஆண்டு இணையதளங்கள் எப்படி எல்லாம் இருந்துள்ளன என்பதை, டெப் டிசைன் மியூசியம், வெப் டிசைன் டிபோட் போன்ற இணைய ஆவணமாக்கல் தளங்களில் சேமிக்கப்பட்ட அந்த கால இணையதளங்களின் தோற்றம் மற்றும் உள்ளடக்கத்தை துணையாக வைத்துக்கொண்டு பலவிதங்களில் டோனி பிளேர் தளத்தின் பழைய தோற்றத்தை உருவாக்கி பகிர்ந்து கொண்டிருந்தார்.
கிளார்க்கின் இந்த செயல் சுவாரஸ்யமானது மட்டும் அல்ல, வடிவமைப்பு நோக்கில் அவர் விவரிக்கும் செயல்களில் இருந்து இணையதள வடிவமைப்பின் வரலாற்றையும், பரிணாம வளர்ச்சியையும் திரும்பி பார்க்க முடிகிறது. அதோடு, பழைய இணையதளங்கள் காணாமல் போவது எத்தனை இயல்பாக இருக்கிறது என்பதையும்,. அவற்றை பராமரிப்பதில் கவனம் தேவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
பொதுவாக ஆவணமாக்கலில் கவனம் செலுத்தும் மேலை நாடுகளிலேயே இது தான் நிலைமை என்றால், ஆவணமாக்கலை பெயரளவில் கடந்து செல்லும் நம் நாட்டு நிலையை சொல்லவே வேண்டாம். உதாரணத்திற்கு, நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி இணையதளத்தின் பழைய வடிவமைப்பை அறிய வழி உண்டா என முயன்று பார்க்கவும். அப்படியே காங்கிரஸ் கட்சியின் இணையதளம் எப்போது அமைக்கப்பட்டது எனும் கேள்விக்கும் கூகுளில் விடைத்தேடி பார்க்கவும். இல்லை என்றால் இப்போது பரபரப்பாக பேசப்படும் சாட்ஜிபிடியிடம் கேட்டுப்பார்க்கவும்.
–
கிளார்க்கின் பதிவு: https://stuffandnonsense.co.uk/blog/imagining-labours-lost-1997-election-website