எழுதுவதற்கோ, தகவல்களை தேடுவதற்கோ நான் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை. வேறு எந்த ஏஐ சேவையையும் தான். ஆனால், தேவைப்படும் போது பரிசோதனை நோக்கில் சாட்ஜிபிடியை பயன்பத்திப்பார்த்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் சாட்பாட்கள் நுட்பத்தில் உள்ள வரம்புகளையும், போதாமைகளையும் சுட்டிக்காட்டி வருகிறேன்.
சாட்ஜிபிடி முழுமுதலான சேவை அல்ல என்பதை பயனாளிகளுகளுக்கு நினைவுபடுத்துவதே, இப்படி சாட்ஜிபிடியை பரிசோதித்துப்பார்த்து எழுதும் பதிவுகளாக கருதுகிறேன்.
ஆனால், சாட்ஜிபிடி சரியாக பதில் அளிக்கும் தருணங்களும் அநேகம். அதன் பதில் வியப்பதாக இருந்தாலும், அதிலும் சிக்கல்கள் இருப்பதை உணர்த்தும் தருணங்களில் ஒன்றாக அண்மையில் மேற்கொண்ட சாட்ஜிபிடி சோதனை அமைந்தது. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், மறைந்த கண்டுபிடிப்பாளர் நிக்கோலே டெஸ்லா நினைவாக பகிர்ந்து கொண்ட தகவல் தொடர்பான பரிசோதனையாக இது அமைந்திருந்தது.
எலான் மஸ்க், டிவிட்டரை கையகப்படுத்தி அதை எக்ஸ் என மாற்றிய பிறகு, அதன் ஆதார அம்சங்களை பாதிக்கும் வகையில் பலவற்றை செய்து வருவதோடு, ஒரு விஷயத்தை சீராக செய்து வருகிறார். அது எக்ஸ் தளத்தில் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்டு வருவது தான். எப்போது பார்த்தாலும் டைம்லைனில் எலான் மஸ்க் தான் எட்டிப்பார்க்கிறார்.
இந்த வழக்கப்படி, எலான் மஸ்க் அண்மையில் நிக்கோலே டெஸ்லாவின் மேதைமையை பாராட்டி ஒரு குறும்பதிவை வெளியிட்டிருந்தார். அந்த குறும்பதிவில், அறிவியல் உலகிற்கு டெஸ்லாவில் பங்களிப்பை சுட்டிக்காட்ட, எக்ஸ் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட்டான கிராக்கை (Grok AI ) பயன்படுத்தியிருந்தார்.
டெஸ்லாவை நினைவு கூறும் வாய்ப்பை பயன்படுத்தி, கிராக் சேவையை முன்னிறுத்தும் உத்தியாக இது தோன்றினாலும், டெஸ்லா பற்றிய கிராக்கின் குறிப்புகள் ஆர்வத்தை ஏற்படுத்தவே செய்தன.
உலகின் மகத்தான பொறியாளர்களில் ஒருவரான நிக்கோலே டெஸ்லா நினைவாக அவரது பெயரை டெஸ்லா நிறுவனத்திற்கு வைத்தோம் என குறிப்பிட்டு மஸ்க், கிராக் பதிலை பகிர்ந்து கொண்டிருந்தார்.
டிசைன் டாக்ஸி, (https://community.designtaxi.com/topic/7312-elon-musk-pays-tribute-to-teslas-namesake-muse-nikola-tesla-using-grok-ai/ ) இது தொடர்பாக வெளியிட்டிருந்த செய்தியில் டெஸ்லாவின் சாதனையை விரிவாக வாசிக்க முடிந்ததோடு, அந்த செய்திக்கான பின்னூட்டத்தில் வாசகர் ஒருவர் தெரிவித்திருந்த கருத்து யோசிக்க வைத்தது.
’ டெஸ்லாவுக்கு பெயரிட்டோம் (We named Tesla…”) என எலான மஸ்க் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அந்த வாசகர், எலான் மஸ்க் ஒன்றும், டெஸ்லா கார்களுக்கு பெயரிடவில்லை, ஏனெனில் அவர் நிறுவனத்தின் மூல இணை நிறுவனர்களில் ஒருவர் கிடையாது என தெரிவித்து, Martin Eberhard and Marc Tarpenningas ஆகியோர் 2003 ல் உருவாக்கிய நிறுவனத்தில் எலான் மஸ்க் பின்னர் இணைந்து ஒரு கட்டத்தில் சி.இ.ஓவாக ஆனார் என தெரிவித்திருந்தார்.
டெஸ்லாவின் முகமாக எலான் மஸ்க் அறியப்பட்டாலும் அவர் மூல நிறுவனர் அல்ல என்பது வரலாற்று தகவல். இதை தான் அந்த வாசகர் சுட்டிக்காட்டியிருந்தார். டெஸ்லாவின் முன்கதையை அறியாதவர்களுக்கு இந்த தகவல் புதிதாகவும், வியப்பாகவும் இருக்கலாம்.
இப்படி தவறுகள் அல்லது விடுபட்ட தகவல்களை சுட்டிக்காட்டும் வாசகர்கள் தான், இணைய பின்னூட்டத்தின் முக்கிய பலம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது தான், ஏஐ சாட்பாட்கள், இந்த நுட்பமான விவரங்களை சொல்லுமா, கோட்டை விடுமா எனும் கேள்வியும் எழுந்தது.
இந்த கேள்வியோடு சாட்ஜிபிடியை பரிசோதித்துப்பார்த்த போது, ( டெஸ்லா நிறுவனர் யார்?) எலான் மஸ்க் டெஸ்லாவின் அடையாளமாக அறியப்பட்டாலும், டெஸ்லா அவரால் துவக்கப்படவில்லை, 2003 ல் துவக்கப்பட்ட நிறுவனத்தில் அவர், 2004 ல் முதலீட்டாளராக இணைகிறார் என்பது போல பதில் அளிக்கப்படுகிறது.
ஆனால் இதே கேள்வியை மீண்டும் கேட்கும் போது பதில் மாறிவிடுகிறது. 2003 ல் துவங்கிய நிறுவனத்தில் 2004 ல் முதலீட்டாளராக இணையும் தகவல் இருந்தாலும், முதல் வரியே டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் என்கிறது.
தவறான தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்பது மட்டும் அல்ல, ஒரு கேள்விக்கு ஒரே பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறை மாறுபட்ட பதில் அளிப்பதும் சாட்ஜிபிடி தன்மையாக இருக்கிறது. இதை உணர்ந்தே சாட்ஜிபிடியை பயன்படுத்த வேண்டும்.