சார்லெஸ் பாபேஜ் கம்ப்யூட்டர்களின் தந்தை என கருதப்படலாம். ஆனால் அவரது சகாவான அடா லவ்லேஸ் உலகின் முதல் புரோகிராமாக கருதப்படுகிறார். பாபேஜ் உருவாக்க உத்தேசித்த அனல்டிகல் இஞ்சின் எனப்படும் முன்னோட்ட கம்ப்யூட்டர் இயந்திரத்தின் மூலம் செயல்படுத்தக்கூடிய முதல் அல்கோரிதமை எழுதியவர் என்பதே அடா லவ்லேசின் சிறப்பு.
அந்த வகையில் அடா லவ்லேஸ் முன்னோடி கம்ப்யூட்டர் பெண்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். கோடிங் உலகில் பெண்களுக்கான ஊக்கமாகவும், முன்னுதாரணமாகவும் கருதப்படுகிறார்.
கம்ப்யூட்டர் உலகில் அடா லவ்லேஸ் பங்களிப்பை நினைவு கூறும் வகையிலும், அதைவிட முக்கியமாக இளம் பெண்களுக்கு கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் ஊக்கம் அளிக்கும் வகையில் அடா லவ்லேஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
அடா லவ்லேஸ் வழியில் பெண்களை கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டுள்ள நாங்கள் தொழில்நுட்ப பெண்கள் எனும் வீ ஆர் டெக்வுமன் (https://wearetechwomen.com/inspirational-quotes-ada-lovelace-the-first-computer-programmer/) இணையதளத்தில் அடா லவ்லேஸின் மிக சுருக்கமான அறிமுகத்துடன் அவரது மேற்கோள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

’ எனக்கு மதம் தான் என்றால் அறிவியல், அறிவியல் தான் மதம் (“Religion to me is science and science is religion.”) எனும் மேற்கோள் ஏறக்குறைய அறிவியல் முழக்கமாகவே அமைகிறது.
எனக்கு கவிதையை கொடுக்க முடியவில்லை எனில், கவித்துவமான அறிவியவலையாவது கொடுங்கள்” என இன்னொரு மேற்கோள் அமைகிறது.
அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து சிறந்த, அறிவார்ந்த புகலிடம் அறிவியல் தான் என இன்னொரு மேற்கோள் அமைகிறது.
அடா லவ்லேஸ் அசர வைக்கிறார் அல்லவா!
–
பி.கு; தொழில்நுட்ப உலகில் முன்னோடியாக விளங்கும் பெண்களை அறிமுகம் செய்யும் ’கம்ப்யூட்டர் பெண்கள்’ நூல் அடா லவ்லேஸ் பற்றிய கட்டுரையில் இருந்து தான் துவங்குகிறது.