ஏஐ தேடியந்திர யுகத்தில், ஆஸ்க்ஜீவ்ஸ் சேவையை முன்னோடி தேடியந்திரம் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் தேவை இருக்கிறது. ஏனெனில், கேள்வி பதில் அடிப்படையில் தேட வழி செய்த முதல் என்.எல்.பி., தேடியந்திரம் என்பது தவிர, பின்னாளில் ஆஸ்க்.காமாக மாறிய ஆஸ்க் ஜீவ்ஸ் பல முன்னோடி தேடல் வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.
உதாரணத்திற்கு, ஆஸ்க் ஜீவ்ஸ் அறிமுகம் செய்த ஸ்மார்ட் ஆன்சர் (Smart Answers ) வசதியை இப்போது திரும்பி பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது.
பயனாளிகள் தேடி வரும் பொருள் தொடர்பான நேரடி தகவலை அளிக்கும் வகையில் இந்த வசதி அமைந்திருந்தது. ஆனால், பயனாளிகள் குறிப்பிட்ட தகவலை தான் தேடுகின்றனர் என எப்படி தீர்மானிக்க முடியும்? ஒவ்வொருவருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும் அல்லவா? இந்த சிக்கல்லுக்கு தீர்வு காணும் வகையில், ஆஸ்க் ஜீவ்ஸ், தேடப்படும் குறிச்சொல்லுக்கு ஏற்ப பொருத்தமான நேரடி பதிலை ஸ்மார்ட் ஆன்சராக சுட்டிக்காட்டுகிறது.
தேடல் முடிவுக்கு மேல் எட்டிப்பார்க்கும் இந்த புத்திசாலி பதில்கள், பயனாளிகள் தேடுவதை உணர்ந்து அதற்கு பொருத்தமான நேரடி தகவல் மற்றும் தொடர்புடைய இணைப்புகளை சுட்டிக்காட்டுவதாக இது தொடர்பாக ஆஸ்க்ஜீவ்ஸ் விளக்கம் அளித்திருந்தது.
இந்த நேரடி பதில் சேவைக்கான அருமையான உதாரணமாக, கூடைப்பந்து நட்சந்த்திரம் மைக்கேல் ஜோர்டன் தொடர்பான தேடல் பக்கம் அமைகிறது. (https://web.archive.org/web/20060918095909/http://www.ask.com/web?q=michael+jordan )
இந்த தேடல் பக்கத்தில், மைக்கேல் ஜோர்டனுக்கான தேடலில் ஜோர்டன் தொடர்பான முக்கிய தகவல்கள் சுருக்கமாக முதலில் முன் வைக்கப்படுகிறது. ஜோர்டன் அறிமுகத்துடன் அவரது அதிகாரப்பூர்வ இணையதளம், களஞ்சியம் பக்கம், புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. தொடர்புடைய தேடல் அருகே இடம்பெற வழக்கமான தேடல் இணைப்புகள் கீழே வரிசையாக இடம்பெற்றிருந்தன.
அறிமுகமான காலத்தில் இந்த சேவை புதுமையானதாக இருந்தது. அதோடு இந்த காலத்தில், கூகுள் தேடல் முடிவுகள், இத்தகைய சுட்டிக்காட்டுதல் இல்லாமல் வழக்கமானதாக மட்டுமே அமைந்திருந்தன.
தேடி வரும் பயனாளிகள் மனதில் உள்ளதை யூகித்து அதற்கேற்ற நேரடி பதில் அளிப்பது போல அமைந்திருந்த இந்த சேவை, ஆஸ்க் ஜீவ்ஸின் கேள்வி பதில் சேவைக்கு சரியான துணை சேவையாக அமைந்திருந்தது.
கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் அளவுக்கு அந்த கால கட்டத்தில் என்.எப்.பி நுட்பம் வளர்ச்சி பெற்றிராத நிலையில், பொதுவாக பொருந்தக்கூடிய முடிவுகளுக்கு இவ்விதம் நேரடி பதில் அளிக்க முயற்சித்த சேவையை முன்னோடி வசதி என்றே கருத வேண்டும்.
அநேகமாக இன்று ஏஐ யுகத்தில் அளிக்கப்படும் தகவல் சுருக்க சேவைகளை போல ஜீவ்ஸ் நேரடி பதில் இருப்பதாகவும் கருதலாம். மேலும், இதே வடிவிலான நாலெட்ஜ் கிராப் வசதியையும் இங்கு பொருத்திப்பார்க்கலாம்.
நிற்க, கூகுள் பின்னாளில் இதே போன்ற வசதியை ஒன் பாக்ஸ் (OneBox) எனும் பெயரில் வழங்கியது. https://searchengineland.com/google-20-google-universal-search-11232
ஆக, ஏஐ தேடியந்திரங்கள் மத்தியில் ஆஸ்க்ஜீவஸ் சேவை வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
–
பி.கு: இப்போது இருக்கும் ஆஸ்க்.காம் இணையதளத்திற்கும் பழைய ஆஸ்க் ஜீவ்ஸிற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆஸ்க் ஜீவ்ஸ் பழைய வடிவத்தை இணைய காப்பகத்தில் அணுகலாம்.- https://web.archive.org/web/20051210031805/http://sp.ask.com/docs/about/aj/sitefeatures.htm#text6