சிறு தரவு பெரும் வெள்ளம்

சிறு துளி பெருவெள்ளம் என்பதை தரவுகளோடு பொருத்திப்பார்க்க அதிக வாய்ப்பில்லை. ஆனால், தனிப்பட்ட முறையை விட, கூட்டாக தரவுகள் அதிக தகவல்களை வெளிப்படுத்தக்கூடியது என்கின்றனர். அந்த வகையில் சிறு தரவு பெரும் வெள்ளம் தான்.

செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஆழமான கட்டுரைகளை எழுதி வரும் ஆஸ்திரேலிய ஆய்வறிஞர் ரச்சேல் தாமஸ், கண்காணிப்பு தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு அம்சங்கள் எனும் கட்டுரையில், தரவுகள் சார்ந்த தனியுரிமை பொது நலன் நோக்கிலானது எனும் கருத்தை வலியுறுத்தும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார்.

தூய காற்று, சுத்தமான குடிநீரைப்போல தரவு தனியுரிமையும் பொது நலன் சார்ந்தது என்பவர், கூட்டாக தரவுகள் அதிகம் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை என குறிப்பிடுகிறார். இதற்கு அடிப்படையாக, பேராசிரியர் டுபேகி (Tufekci) இது தொடர்பாக எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டுகிறார். அந்த கட்டுரையில், தரவு தனியுரிமை என்பது நுகர்வோர் பொருள் போன்றது அல்ல, அது தூய காற்று அல்லது பாதுகாப்பான சுத்தமான குடிநீர் போன்றது என குறிப்பிடுபதையும் சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கு உதாரணமாக, ஸ்ட்ராவா எனும் உடல் தகுதி செயலியில் தனிநபர்களின் தரவுகள் கூட்டாக நோக்கும் போது அமெரிக்க ராணுவ தளங்களை அடையாளம் காண உதவுவதை குறிப்பிட்டுள்ளார். இதே போல அமேசான் விற்பனை செய்யும், நவீன வசதி கொண்ட அழைப்பு மணிகள் தெரிவிக்கும் தரவுகள் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் மட்டும் அல்ல, லட்சக்கணக்கானோரது தரவுகள் சேரும் போதும் பெரும் சிக்கலாக கூடியவை என்கிறார்.

தனியுரிமை பற்றி எல்லாம் நாம் இன்னமும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இந்த எண்ணத்தை இக்கட்டுரை மாற்ற உதவக்கூடும்.

இந்த கட்டுரையின் உந்துதலால், தரவு தனியிரிமை பொது நலன் நோக்கிலானது என கூகுளில் தேடிப்பார்த்தால், பல முக்கிய கட்டுரைகள் தென்பட்டாலும், இந்த ஊடகங்களின் பதிவுகள் எதுவும் வரவில்லை. அதே நேரத்தில் டிஜிட்டல் பொதுப் பொருட்கள் எனும் கருத்தாக்கத்தையும் எதிர்கொள்ள முடிகிறது.

பப்ளிக் குட் என்பதை பொது நலன் என்ற வகையிலேயே அணுகி வந்த நிலையில், பொதுப் பொருட்கள் என்பதும், தரவுகளை அதே விதத்தில் அணுகுவதும் புதிய கண் திறப்பாக அமைந்தது.

கட்டுரை இணைப்பு:   https://www.fast.ai/posts/2019-08-07-surveillance.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *