எழுத்துருக்கள் ஆற்றல் மிக்கவை, எழுத்து வடிவிலான உள்ளடக்கத்தின் செய்தியை மேலும் வலுவாக்க கூடியவை. அதே நேரத்தில் தவறான எழுத்துரு தேர்வு உள்ளடக்கம் சொல்ல வருவதை பாதிக்கவும் செய்யலாம். எனவே தான், பதிப்பு அல்லது வெளியீட்டில் பொருத்தமான எழுத்துரு மிகவும் முக்கியமானது.
எழுத்துருக்களின் இத்தகைய அருமை பெருமைகளை தெரிந்தவர்களுக்கு ஃபாண்ட்ஸ் இன் யூஸ் (https://fontsinuse.com/) இணையதளம் உற்சாகம் அளிக்கும். எனினும் எழுத்துருக்களில் அதிக ஆர்வம் இல்லாதவர்களும் கூட இந்த தளத்தை அறிந்திருப்பது நல்லது. ஏனெனில் உள்ளடக்கத்தில் சொல்லப்படும் செய்தியை நாம் உணர்ந்து கொள்ளும் விதத்தில் எழுத்துருக்கள் தாக்கம் செலுத்துவது தான்.
எழுத்துருக்கள் தாக்கம் செலுத்தும் விதத்தை அறிவதற்கான உதாரணங்களையும் இந்த தளம் கொண்டிருக்கிறது. அடிப்படையில் இந்த தளம் எழுத்துரு வடிவங்களுக்கான ஆவணக்காப்பகமாக விளங்குகிறது. வரைகலையாளர்களுக்கும், வடிவமைப்பாளர்களுக்கும் கைகொடுக்கும் வகையில் ஆயிரக்கணக்கான எழுத்துரு வடிவங்களின் தொகுப்பை கொண்டிருக்கும் இந்த தளம் விதவிதமான எழுத்துரு தொடர்பான தகவல்களை அளிப்பதோடு, எழுத்துரு பயன்பாட்டை விவரிக்கும் வலைப்பதிவு பகுதியையும் கொண்டுள்ளது.
புகழ் பெற்ற விளம்பரங்கள், சுவரொட்டிகள், பொது அறிவிப்புகள், சித்திரங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருவை அடையாளம் காட்டி, அதன் தனிச்சிறப்புகளை குறிப்பிட்டு, அவை எப்படி அந்த உள்ளடக்கத்திற்கு பொருத்தமாக அமைந்தன என்பதை விளக்கும் வகையில் இந்த பதிவுகள் அமைகின்றன.
இந்த பதிவுகளில் ஒன்று, ’கிழக்கு லண்டன் நாய் சமூகம்’ எனும் தலைப்பில் அமைந்துள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள நகரசபை ஒன்றில் பொது பூங்காக்களில் நாய்களுக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்ட கட்டுப்பாடு தொடர்பான நாய் ஆர்வலர்களின் எதிர்வினையை விவரிக்கும் இந்த பதிவு, இந்தியாவில் உச்ச நீதிமன்றம் தெருநாய்கள் தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவின் பின்னணியில் பொருத்தமானதாக அமைகிறது.
நகரசபை உத்தேசித்திருந்த நாய்களுக்கு எதிரான விதிமுறைகளுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதரவு திரட்டும் நோக்கத்துடன், கிழக்கு லண்டன் பகுதி நாய்கள் அமைப்பு, பல்வேறு சுவரொட்டிகளை வெளியிட்டிருந்தது. நாய்கள் தடைக்கு மறுப்பு சொல்வோம் எனும் செய்தியை முக்கியமாக கொண்டிருந்த இந்த சுவரொட்டி வாசகங்களில் பயன்படுத்தப்பட்ட இரண்டு எழுத்துரு வடிவங்களின் குணாதிசயங்கள் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு எப்படி பொருத்தமாக அமைந்தன என்பதை இந்த பதிவு விளக்குகிறது.
நாமும் வாயில்லா ஜீவன்களுக்காக குரல் கொடுப்போம்: https://fontsinuse.com/uses/67918/east-london-dog-community
—
செய்தி நோக்கில் ஆர்வம் உள்ளவர்களும் எழுத்துரு ஆவணகாப்பகமான ஃபாண்ட்ஸ் இன் யூஸ் தளத்தை குறித்து வைத்துக்கொள்வது நல்லது. இணைய செய்தி கையேட்டின் நீட்சியாக இடம் பெற வேண்டிய இணையதளங்களில் இதுவும் ஒன்று. செய்தி நோக்கில் இந்த எழுத்துரு தளம் ஏன் முக்கியமானது என்பதை இந்த வரலாற்று பதிவின் வாயிலாக அறியலாம்.
–