ஜென் ஏஐ என்றால் என்ன? – ஒரு புது விளக்கம்

இப்போது ஏஐ பற்றி பேசப்படும் போது பெரும்பாலும் ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் ஆக்கத்திறன் ஏஐ சேவைகளையே பலரும் மனதில் கொண்டுள்ளனர். இந்த ஜென் ஏஐக்கும், பொதுவாக ஏஐக்கும் ஆறு வித்தியாசங்களுக்கு மேல் இருக்கின்றன என்பதால், ஜென் ஏஐயை மட்டும் கவனத்தில் கொண்டு ஏஐ நுட்பத்தின் சாதக, பாதகங்களை, நன்மை தீமைகளை அலசி விவாதிக்க முடியாது.

ஏஐ என்பது பரந்து விரிந்தது என்பதையும், ஜென் ஏஐ அதன் ஒரு அங்கம் மட்டுமே என்பதையும் புரிந்து கொள்வது அவசியம். அதோடு முக்கியமாக ஜென் ஏஐ என்றால் என்ன என்றும் புரிந்து கொள்வது அவசியம்.

மனிதர்கள் உருவாக்க கூடியது போலவே பல வகையான மூல உள்ளடக்கத்தை உருவாக்கித்தரக்கூடிய திறன் கொண்ட ஏஐ சேவைகள் ஜெனரேட்டிவ் ஏஐ என கொள்ளப்படுகின்றன. அதாவது, கதை, கவிதை, கட்டுரைகள், காணொலிகள் உள்ளிட்ட இன்னும் பலவற்றை மனிதர்கள் கேட்பதற்கு ஏற்ப உடனடியாக உருவாக்கித்தரும் ஆற்றலை கம்ப்யூட்டர்களுக்கு சாத்தியமாக்கியுள்ள ஏஐ நுட்பம் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இதற்கு உதாரணம், சாட்ஜிபிட், கூகுள் ஜெமினி, கிளாடு.

ஆனால், ஜென் ஏஐ நுட்பத்தை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த புரிதலை ஜென் ஏஐக்கான விளக்கம் அல்லது வரையறையில் இருந்தே துவங்கலாம். அந்த வகையில் ஜென் ஏஐ வரையறையில் பல்வேறு நுணுக்கங்களும், விடுபடல்களும் இருப்பதை உணரலாம்.

ஜென் ஏஐ தொடர்பான பல்வேறு வரையறைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய சொற்கள் ஒவ்வொன்றுக்கும் அடிக்குறிப்புகளும் விளக்கமும் தேவை.

ஜென் ஏஐ தொடர்பான எண்ணற்ற வரையறைகளில், எம்.ஐ.டி.நியூஸ் தளத்தில், இடம்பெறும் ’ஜென் ஏஐ விளக்கம்’ எனும் கட்டுரையில் வரும் வரையறை அதன் நீள அகலங்களை நன்கு உணர்த்தக்கூடியதாக இருக்கிறது.

“ஜென் ஏஐயை, குறிப்பிட்ட தரவு தொகுப்பு அடிப்படையிலான கணிப்பை அளிப்பதற்கு பதிலாக, புதிய தரவை உருவாக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட இயந்திர கற்றல் மாதிரி என கருதலாம்”.

இந்த புதிய தரவு தான் உள்ளடக்கமாக கொள்ளப்படுகிறது. இயந்திர கற்றல் மாதிரி என்பது இதில் முக்கியம். ஜென் ஏஐ என்பது அடிப்படையில் இயந்திர கற்றல் மாதிரி.

’ஒரு ஜென் ஏஐ அமைப்பு தனக்கு பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகள் போலவே மேலும் பொருட்களை உருவாக்க கற்றுக்கொள்ளும் ஏஐ அமைப்பு” என்றும் இந்த வரையறை நீள்கிறது.

இங்கு பொருட்கள் (objects) என்பதும் உள்ளடக்கம் தான். ஆனால், இந்த பயிற்சி குறித்து இன்னும் தகவல்கள் தேவை.

”ஜென் ஏஐக்கு அடிப்படையாக அமையும் இயந்திர அமைப்பு மற்றும் பிற ஏஐகளுக்கு அடிப்படையாக அமையும் இயந்திர அமைப்பு என்று வரும் போது, எல்லாம் ஒரே கலங்கலாக இருக்கிறது” என்றும் இந்த கட்டுரை குறிப்பிடுகிறது.

ஜென் ஏஐ நுட்பத்தை புரிந்து கொள்ள உதவும் கட்டுரை.

சைபர்சிம்மன், ’சாட்ஜிபிடி சரிதம்’ நூலாசிரியர்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *