ஆர்ச்சிபிளக்ஸ் எனும் ஆதி தேடியந்திர வசதி

கூகுள்பிளக்ஸ் தெரிந்திருக்கும், ஆர்ச்சிபிளக்ஸ் தெரியுமா? கூகுளின் தலைமையகம் ‘கூகுள்பிளஸ்’ என அழைக்கப்படுகிறது. ஆர்ச்சிபிளக்ஸ், (ArchiePlex ) தேடல் பரப்பில் கூகுளுக்கு முன்னோடியான, இணைய உலகின் முதல் தேடியந்திரமான் ஆர்ச்சியை எல்லோரும் எளிதாக பயன்படுத்த உருவாக்கப்பட்ட இணைய இடைமுகத்தை குறிக்கிறது.

வெப் எனப்படும் வைய விரிவு வலைக்கு முன்னதாகவே உருவான ஆர்ச்சி, இணையத்தில் எப்டிபி கோப்பு வடிவில் மறைந்திருந்த தகவல்களை தேடி எடுக்க வழி செய்தது. ஆலன் எம்டேஜ் ஆர்ச்சியை உருவாக்கினார்.

ஆர்ச்சியை பயன்படுத்துவது சற்று கடினமானது என்பதால், அதன் தேடல் வசதியை எல்லோரும் எளிதாக பயன்படுத்தும் வகையில், ஆர்ச்சியில் தேடுவதற்கான இடைமுகமாக ஆர்ச்சிபிளக்ஸ் தளத்தை மார்ட்டீன் காஸ்ட்னர் (Martijn Koster) 1990 களின் துவக்கத்தில் உருவாக்கினார்.

காஸ்டனுரும் இணைய வரலாற்றில் முக்கிய ஆளுமை தான். இவர் உருவாக்கிய அலிவெப், வலைக்கான முதல் தேடியந்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும், தேடியந்திரங்களில் தகவல்களை சமர்பிக்க இவர் உருவாக்கிய ரோபோடெக்ஸ் எனும் வழிமுறை தான், இன்றளவும் இணையத்தில் பின்பற்றப்படுகிறது.

ஆர்ச்சிபிளக்ஸ், தேடலுக்கான இணைய படிவம், நேரடி இடைமுகம் மற்றும் எளிய இடைமுகம் என மூன்று வசதிகளை கொண்டிருந்தது. இணையத் தேடல் எப்படி இருந்தது என்பதை அறிய ஆர்ச்சியையும் ஆர்ச்சிபிளக்ஸையும் அறிந்து கொள்வது அவசியம்.

ஆர்ச்சிபிளஸ் இப்போது இல்லை என்றாலும், இணைய காப்பகத்தில் அதன் பழைய வடிவத்தை காணலாம்.- http://web.archive.org/web/19970516093914/http://lerc.nasa.gov/archieplex/archieplex.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *