ஏஐ பிரவுசராக மாற மாட்டோம்- மனிதர்கள் பக்கம் நிற்கும் விவால்டி பிரவுசர்

விவால்டி சி.இ.ஓ.டெஷ்னருக்கு ஒரு கைகுலுக்கலும், சிறு பூங்கொத்தும். அப்படியே மனம் நிறைந்த பாராட்டுகளும்.

கூகுள் குரோம் உள்ளிட்ட பெரும்பாலான பிரவுசர்கள் போட்டி போட்டிக்கொண்டு, ஏஐ திறனை பிரவுசருக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், டெஷ்னர் துணிச்சலாக, விவால்டி பிரவுசரில் ஏஐ சேவைகளுக்கும் இடமில்லை என அறிவித்திருக்கிறார்.

’நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோம், மிகை பரபரப்பிற்கு பதிலாக மனிதர்கள் பக்கம் நிற்கிறோம், கண்டறிதல் அனுபவத்தை வேடிக்கை பார்க்கும் அனுபவமாக மாற்ற மாட்டோம்’ என அவர் விவால்டி வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

விவால்டி பிரவுசரில் ஏஐ திறனை ஒருங்கிணைக்க மாட்டோம் என்பதையும் அவர் உறுதி அளித்திருக்கிறார்.

அண்மையில், சாட்ஜிபிடி தன் பங்கிற்கு அட்லஸ் ஏஐ திறன் பிரவுசர் அறிவித்தது. ஏற்கனவே கூகுள் குரோமில் ஜெமினி ஏஐ சேவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் எட்ஜில், கோ-பைலட் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதை எல்லாம் பெர்ப்ளக்சிட்டியின் காமெட் ஏஐ பிரவுசர் துவக்கி வைத்தது. இப்போது பார்த்தால், ஒட்டு மொத்த பிரவுசர் அனுபவத்தையும் ஏஐ சாட்பாட்கள் கடத்தி சென்று விட்டது போல தோன்றுகிறது.

பயனாளிகள் சார்பில் பிரவுசரே டிக்கெட் பதிவு செய்யும், செய்திகளை சுருக்கித்தரும், இன்னும் என்ன எல்லாமே செய்யும் என ஏஐ நிறுவனங்கள் ஆசை காட்டுகின்றன. எல்லாமே தேவை இல்லாத ஆணிகள்.

ஏஐ சேவை எனில் தனியே பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ள போகின்றனர். அப்படி இருக்க, பிரவுசரையே ஏஐ மயமாக மாற்றுவதன் தேவை என்ன?

இந்த பரபரப்பி அலையை பின் தொடர்வதற்கு பதில் விவால்டி பிரவுசர் அதை எதிர்த்து நிற்கிறது.

பயனாளிகள் தனியுரிமையை மதிக்கிறோம், அவர்கள் இணைய கண்டறிதலுக்கு ஏஐ சேவைகளை இடையூறாக கொண்டு வர மாட்டோம் என அதன் சி.இ.ஓ அறிவித்திருக்கிறார். திறந்த தன்மை கொண்டிருப்பதே வலையின் சிறப்பு அதற்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

ஏஐ சேவைகள் ஏற்கனவே, இணையம் முழுவதும் பிழை தகவல்களை நிறைத்திருப்பது போதும் என்றும் கூறியிருக்கிறார்.

தனியுரிமை காக்கும், தேடியந்திரமான டக்டக்கோ கூட, ஏஐ ஒருங்கிணைப்பு, தனக்கான சாட்பாட் என ஏஐ பரபரப்பு ஜோதியில் ஐக்கிமாகி உள்ள நிலையில்,தனியுரிமைக்கு மதிப்பு அளிக்கும் விவால்டி பிரவுசர் ஏஐ பரபரப்பை விட மனிதர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதற்காக பாராட்டுகள். நன்றியும் தான்.

விவால்டி சி.இ.ஓ அறிவிப்பு: https://vivaldi.com/blog/keep-exploring/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *