இணையம் என்பது ரெயில் நிலையம் தெரியுமா?     #இணையம், #சொற்கள்

புரோசோவிஸ்கியின் பெயரையும், புரவுசரையும் இணைத்து கேலி செய்தால் நிச்சயம், அவர் அதை புன்னகையுடன் ஏற்றுக்கொள்வார் என்றே நினைக்கிறேன். ஏனெனில், மொழியியல் அறிஞரான எரிகா புரோசோவிஸ்கி, ஆங்கில சொற்களின் வரலாற்றிலும், அவற்றின் புதுயுக பயன்பாட்டில் ஆர்வமும், நிபுணத்துவமும் உள்ளவர். டாக்டர் எரிகா புரோசோவிஸ்கி என்றே குறிப்பிடப்படுபவர், அமெரிக்காவின் பிபிஎஸ் தொலைக்காட்சியில் அதர் வேர்ட்ஸ் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

நேயர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்நிகழ்ச்சியில் புரோசோவிஸ்கியிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை, லாபிங் ஸ்குவிட் இணையதளம் அழகாக சுட்டிக்காட்டுகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில எழுத்துக்களின் ஒலி பிராண்ட் பெயர்களில் பயன்படுத்தப்படும் போது வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவதை அவர் விவரிக்கும் இந்த பகுதியை குறிப்பிடலாம்.

மொழியியலை சுவாரஸ்மாக முன்வைப்பவராக அறியப்படும் எரிகா புரோசோவிஸ்கி பயர்பாக்ஸ் பிரவுசரின் மொசில்லா வலைப்பதிவில் இணையம் மற்றும் வலை சார்ந்த சொற்கள் உருவான விதம் பற்றி இன்னும் சுவாரஸ்யமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.

புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆகும் போது, மொழியியல் இடைவெளியை நிரப்ப நாம், புதிய சொற்களை உருவாக்கி கொள்கிறோம் அல்லது பழைய சொல்லை மேம்படுத்திக்கொள்கிறோம் என குறிப்பிடுபவர், தொழில் புரட்சி காலத்தில், தொடர் வண்டியை குறிக்க ஏற்கனவே இருந்த டிரைன் எனும் சொல் பயன்படுத்திக்கொள்ளப்பட்டதை உதாரணமாக சொல்கிறார்.

டிரைனுக்கு பிறகு, நீராவி இயந்திரங்கள் இழுக்கும் வண்டிகளுக்கு புதிய சொல் தேவைப்பட்ட போது லோகோமோட்டிவ் எனும் சொல் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறுபவர், டிரைனும், லோகோமோட்டிவும் ஒன்று தான் என பலரும் தவறாக நினைப்பதாக சொல்கிறார்.

இணையமும், வலையும் ஒன்று என தவறாக நினைப்பது போலவே என குறிப்பிட்டு விட்டு, போக்குவரத்து உதாரணத்தின்படியே பார்த்தால், இணையம் என்பது ரெயில் நிலையம் என்றால், அதில் நிகழும் பரிமாற்றங்கள் ரெயில் வண்டிகள் மற்றும் வைய விரிவு வலை என்பது ரெயில் பயணத்தில் நாம் காணும் காட்சிகள் மற்றும் சென்று பார்க்கும் இடங்கள் என்கிறார்.

அடடா என்ன ஒரு அற்புத உதாரணம். இணையம் மற்றும் வலைக்கான வேறுபாட்டை உணர்த்தும் எத்தனையோ விளக்கங்களும் வரையறைகளும் உள்ளன. என்றாலும் இந்த உதாரணம் வண்ணமயமாக இருக்கிறது.

இதே பதிவில் பிரவுசர் எனும் சொல் வந்த விதத்தையும் விவரிக்கிறார்.

முழு பதிவை வாசிக்க: https://blog.mozilla.org/en/internet-culture/history-of-internet-terms/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *