வலைப்பதிவு ஏன்? எனும் தலைப்பில் சக் கிரிம்மட் (Chuck Grimmett. ) என்பவர் தனது வலைப்பதிவில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். வலைப்பதிவு செய்வதன் சாதகமான அம்சங்கள் என நண்பர் ஒருவர் டிவிட்டரில் கேட்ட கேள்விக்கான பதிலாக இந்த பதிவை எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் எண்ணங்கள், கருத்துகள், நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய இணையத்தில் உங்களுக்கு என ஒரு இடம் மற்றும் உலகுடன் தொடர்பு கொள்ளுதலை, அதன் ஞானத்தை அதிகரிப்பது ஆகிய இரண்டும் அம்சங்களை வலைப்பதிவு செய்வதன் இரண்டு முக்கிய சாதகங்களாக குறிப்பிடுகிறார்.
இணைய சேவைகள் வரும் போகும், ஆனால் உங்களுக்கு என ஒரு இடம் இணையத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர், மைஸ்பேஸ் ( பேஸ்புக்கின் முன்னோடி) போன கதையை நினைவூட்டுகிறார்.
சொந்த முகவரி கொண்ட வலைப்பதிவு வடிவிலான சொந்த இணையதளம் அருமையானது என்று கூறுபவர், வலைப்பதிவு செய்வதன் பயன்கள் தொடர்பாக மற்ற பதிவர்களின் கருத்துக்களையும் சுட்டிக்காட்டுகிறார்.
வலைப்பதிவில் எழுத நீங்கள் விமர்சன நோக்கில் யோசித்து செயல்பட வேண்டும், இந்த செயல்முறை உங்களுக்கு தெளிவை அளிக்கும் என்று ஒரு பதிவர் குறிப்பிடுகிறார். இன்னொரு பதிவர் மனதில் அலைமோதும் சிந்தனைகளை சீராக்கும் வழி என குறிப்பிட்டுள்ளார்.
யாருமே படிக்கவில்லை என்றாலும் வலைப்பதிவு எழுதுவது புதுமையாக்கம் மற்றும் தெளிவுக்கான வழி என்று இன்னொருவர் குறிப்பிடுகிறார்.
வலைப்பதிவு மூலம், வாய்ப்புகள் தேடி வந்துள்ளன மற்றும் உலகுடன் பயனுள்ளவற்றை பகிர்ந்து கொள்ள முடிகிறது என்றும் கூறியுள்ளனர். மற்றவர்கள் என்றில்லை பல நேரங்களில் நம்முடைய சிந்தனைகள், குறிப்புகளை நாமே மீண்டும் கண்டெடுக்கவும் வலைப்பதிவு உதவுகிறது என்றும் கூறியுள்ளனர்.
ஆகையினால் மீண்டும் வலைப்பதிவு செய்வீர்!
ஏன் வலைப்பதிவு: https://cagrimmett.com/2022/04/26/why-blog/ –