கிளவுட்பேர் சேவை ஒரு அறிமுகம்

கிளவுட்பேர் (cloudfare ) முடக்கத்தில் இருந்து இணையம் மீண்டு வந்திருக்கிறது. ஆனால், இந்த முடக்கம் ஏற்படுத்திய தாக்கம் பயனாளிகள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் என்றேத் தோன்றுகிறது. இணையம் எப்படி ஒரு சில பெரும் நிறுவனங்களின் கைகளில் சிக்கியிருக்கிறது என்பதற்கான இன்னொரு உதாரணமாகவும் இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

கிளவுட்பேர் முடக்கத்திற்கான தொழில்நுட்ப காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, அமேசான் கிளவுட் சேவை முடக்கத்தை அடுத்து, கிளவுட்பேர் முடக்கமும் நிகழ்ந்ததால், இணைய கட்டமைப்பு இத்தகைய எதிர்பாரா முடக்கத்திற்கு காத்திருப்பதை உணர்த்துவதாக கருதப்படுகிறது.

கிளவுட்பேர் நிறுவனம், அதன் தொழில்நுட்பம் தொடர்பாக விரிவாக எழுத வேண்டும் என்றாலும், கிளவுட்பேர் சேவையை, செய்தி நோக்கில் அறிந்திருக்க வேண்டிய முக்கிய நுட்பங்களில் ஒன்றாக ’இணைய செய்தி கையேட்டில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இதழாளர்களுக்கும், செய்தி அறிதலில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் வழிகாட்டும் வகையில், செய்தி நோக்கில் அறிந்திருக்க வேண்டிய முக்கிய இணையதளங்களை பத்து பிரிவுகளில் பட்டியலிட்டு அறிமுகம் செய்யும் வகையில், நியூஸ் கைடு எனும் இணைய செய்தி கையேடு அமைகிறது.

செய்தி தளங்கள், செய்தி வளங்கள், செய்தி ஆதாரங்கள் என அமையும் இந்த கையேட்டில், தொழில்நுட்பம் எனும் பிரிவில் இடம்பெறும் பத்து இணையதளங்களில் கிளவுட்பேர் இடம்பெறுகிறது.

உள்ளடக்க வழங்கல் சேவை என கிளவுட்பேர் குறிப்பிடப்பட்டு அதன் பயன்பாடும் விளக்கப்பட்டுள்ளது. இப்போது பார்க்கையில் இதன் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் பற்றி இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்றுத் தோன்றுகிறது.

கிளவுட்பேர் தொடர்பான செய்தி கையேடு அறிமுகம்:

தொழில்நுட்பங்கள் – Web technologies

நவீன செய்தியாளர்களும் சரி, செய்திகளில் ஆர்வம் உள்ளவர்களும் சரி, சிறந்த செய்தி தளங்களையும், வழிகளையும் மட்டும் அறிந்திருந்தால் போதாது. இணையம் மீது தாக்கம் செலுத்தும் நவீன தொழில்நுட்பங்களையும் அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில், இணைய யுகத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய தொழில்நுட்பங்கள் சார்ந்த இணையதளங்கள்:

Cloudflare- கிளவுட்பிளேர் – https://www.cloudflare.com/

உள்ளடக்க வழங்கல் வலைப்பின்னல் சேவை என குறிப்பிடப்பபடும் வசதியை அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக கிளவுட்பிளேர் விளங்குகிறது. இணையதளத்தை அமைக்க, வடிவமைப்பாளர், சர்வர் இன்னும் பிற அம்சங்கள் தேவை. இப்படி கோடிக்கணக்கான தளங்கள் இருக்கின்றன. இந்த தளங்களின் செயல்பாடும், வேகமும் பல அம்சங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும், இவை தாக்காளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயமும் இருக்கிறது. இந்த பின்னணியில், இணையதளங்கள் பயனாளிகள் வேகமாக அணுக கூடிய வகையில் செயல்படவும், தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு அளிக்கும் சேவையாகவும், உள்ளடக்க வழங்கல் வலைப்பின்னல் நுட்பம் அமைகிறது. இந்த சேவையை வழங்கும் நிறுவனங்கள் உலகம் முழுவதும் சர்வர்கள் அமைத்து, பயனாளிகளுக்கு அவர்கள் அருகாமை பகுதி சர்வரில் இருந்து அணுகல் வசதியை அளிப்பதன் மூலம் வேகமான சேவையை அளிக்கிறது. அதே போல பலவகை தாக்காளர்களுக்கு எதிரான பாதுகாப்பும் அளிக்கிறது. இணையத்திற்குள் ஒரு இணையம் என்றும் இந்த சேவையை புரிந்து கொள்ளலாம்.

ஏன்?  நவீன இணைய உள்கட்டமைப்பின் முக்கிய நுட்பங்களில் ஒன்று.

மாற்று: பல இருக்கின்றன.

செய்தி கையேட்டிற்கான இணைப்பு:

  •  

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *