எனது புதிய புத்தகமான ’இணைய பெண்கள்’ ஜீரோடிகிரி பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இந்த புத்தகம் ஏற்கனவே வெளியான ’கம்ப்யூட்டர் பெண்கள்’ புத்தகத்தின் தொடர்ச்சி என கருதலாம். “கம்ப்யூட்டர் பெண்கள்” புத்தகம், கம்ப்யூட்டர் பெண் முன்னோடிகளை அறிமுகம் செய்யும் வகையில் அமைந்த புத்தகம்.
உலகின் முதல் புரோகிராமராக கொண்டாடப்படும் அடா லவேஸ் துவங்கி, உலகம் கொண்டாட மறந்த எனியாக் பெண்கள், நிலவுக்கு மனிதரை அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்த மார்கரெட் ஹாமில்டன், கூகுள் தேடலுக்கு முன்னோடியாக அமைந்த பெயின்லர், பில்கேட்சுக்கு முன்னோடியாக கருதக்கூடிய வகையில் பேசிக் புரோகிராம் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னோடிகளை அறிமுகம் செய்யும் வகையில் இந்த புத்தகம் அமைந்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக, இணைய வரலாற்றில் தடம் பதித்த பெண் நிறுவனர்களை அறிமுகம் செய்யும் வகையில் அமைகிறது. ’ஸ்டார்ட் அப் இளவரசிகள்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.
முன்னோடி பெண்கள்
ஸ்டார்ட் அப், இணைய தொழில்முனைவு எனும் போது பெரும்பாலும், எலான் மஸ்க், ஜக்கர்பர்க், ஜேக் டோர்சி போன்றவர்களே அதிகம் பேசப்படும் சூழலில், இணைய வரலாற்றில் மைல்கற்களாக அமையும் முன்னோடி ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்கிய பெண் ஆளுமைகளை அறிமுகம் செய்யும் வகையில் ’இணைய பெண்கள்’ புத்தகம் அமைகிறது.
ஸ்டார்ட் அப் பெண் நிறுவனர்கள் எனும் வகையில், இந்த புத்தகம் ஏற்கனவே வெளியான ‘நம் காலத்து நாயர்கள்’ புத்தகத்தின் தொடர்ச்சியாக அமைகிறது. புதிய தலைமுறை வெளியீடாக வந்த இந்த புத்தகம், புத்தாயிரமாண்டுக்கு பின் துவக்கப்பட்ட முக்கிய இணைய சேவைகளை துவக்கிய ஸ்டார்ட் அப் நாயகர்களை அறிமுகம் செய்கிறது. இப்போது பரவலாக அறியப்படும் ஏஎபிஎன்பி சேவை உள்ளிட்ட தளங்களை துவக்கிய நிறுவனர்களின் வெற்றிக்கதைகள் இதில் இடம்பெற்றன.
நம் காலத்து நாயகர்கள் புத்தகம், பரவலாக கவனிக்கப்படாத முக்கிய ஸ்டார்ட் அப்களையும் அறிமுகம் செய்தாலும், அதன் பட்டியலில் ஒரு பெண் நிறுவனர் கூட இல்லை என்பது பெருங்குறை. அதற்கு ஈடு செய்யும் வகையில், முன்னோடி பெண் நிறுவனர்களை ’இணைய பெண்கள்” புத்தகம் அறிமுகம் செய்கிறது.
சமூக ஊடக மகாராணி
ஸ்டார்ட் அப் வெற்றிக்கதைகளாக மட்டும் அல்லாமல் ஒருவிதத்தில் இணைய வரலாற்று இழையையும் பதிவு செய்யும் வகையில் இந்த புத்தகம் அமைவதை உணரலாம். அந்த வகையில், இ-காமர்ஸ் முன்னோடி துவங்கி சமூக ஊடக மகாராணி வரை பல பெண் சாதனையாளர்களை இந்த புத்தகத்தில் அணுகலாம்.
ஸ்டெம் என சொல்லப்படும், அறிவியல், தொழில்நுட்ப துறைகளில் பெண்களின் ஆர்வமும், பங்கேற்கும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதற்கேற்ப இத்துறையில் தடம் பதிக்கும் பெண்களை பற்றி எழுதுவதும், பதிவு செய்வதும் இன்னும் அவசியமாகிறது. அதுவே நியாயமும் கூட. ’இணைய பெண்கள்’ அவ்விதமான புத்தகமாக அமைகிறது.
இந்த புத்தகத்தை வெளியிட்ட ஜீரோடிகிரி பதிப்பகத்திற்கு மனமார்ந்த நன்றி.
-புதிய தலைமுறை.காம் இணைய இதழில் தொடராக எழுதப்பட்டு, இப்போது ஜீரோடிகிரி பதிப்பகம் மூலம் புத்தக வடிவில்.
வாசித்துப்பார்த்து கருத்து சொல்லவும்.