ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை சொல்லும் என்பதற்கு ஏற்ப, சொல்லாத பல செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கும் ஆகச்சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக இந்த படத்தை கருதலாம். ’ஆரம்ப கால ஐபிஎம் கம்ப்யூட்டரை கம்பிகளால் இணைக்கும் பெண் பொறியாளர்” எனும் தலைப்பிலான இந்த படத்தை இணையத்தில் பல இடங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஆகச்சிறந்த வரலாற்று நினைவு சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இந்த படம், கம்ப்யூட்டர் வளர்ச்சியின் கடந்த கால சாட்சியாக விளங்குவதோடு இந்த வரலாற்றில் பரவலாக கண்டு கொள்ளாமல் விடப்படும் பெண்களின் பங்களிப்பை சுட்டிக்காட்டுவதாகவும் அமைகிறது.
இந்த படத்தில் காணப்படுவது பழைய கால ஐபிஎம் கம்ப்யூட்டர் என் அறியப்படுவது. அந்த கம்ப்யூட்டரை இயக்குவதற்கு அடிப்படையான க்மபி அமைப்புகளை தான் அந்த பெண் பொறியாளர் இணைத்துக்கொண்டிருக்கிறார். சிக்கலான அந்த கம்பி அமைப்புகளை பார்த்தாலே அதை இணைப்பதற்கு எந்த அளவு பொறியியல் நுட்பம் தேவைப்படும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அந்த கால ஐபிஎம் கம்ப்யூட்டரை இயக்கத் தேவையான அடிப்படை கட்டமைப்பை ஒரு பெண் பொறியாளர் உருவாக்கி கொண்டிருப்பது தான் இந்த படம் உணர்த்தும் செய்தி. ஆனால் இது ஏதோ விதிவிலக்கும் அல்ல: கம்ப்யூட்டர்களின் ஆரம்ப கால வளர்ச்சியிலும் வரலாற்றிலும் பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். முக்கியமாக ஆரம்ப கால புரோகிராமர்களில் பலர் பெண்கள். உண்மையில், படத்தில் உள்ள இந்த பெண் பொறியாளர் கூட அந்த இயந்திரத்தை இயக்கத் தேவையான புரோகிராமை இவ்விதம் உருவாக்கியிருக்கலாம்.
இந்த காரணங்களினால் இந்த படம் ஆகச்சிறந்த வரலாற்று ஆவணங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த படத்தை எடுத்தவர், புகைப்படக் கலை முன்னோடிகளின் ஒருவராக கருதப்படும் பெர்னைஸ் அப்பாட் (Berenice Abbott ). அமெரிக்க புகைப்படக்கலைஞரான அப்பாட், நியூயார்க் நகரத்தை நாடித்துடிப்பை காட்சிகளாக்கியவராக கருதப்படுகிறது. அப்போது வளர்ந்து கொண்டிருந்த அறிவியல் துறையையும் அவர் புகைப்படங்கள் மூலம் ஆவணமாக்கியிருக்கிறார்.
அப்பாட் அறிவியல் வளர்ச்சியை ஆவணமாக்கிய புகைப்படங்கள் புத்தகத்தில் இடம்பெறும் ஒரு படம் தான், இந்த வரலாற்று சிறப்பு மிக்க படம். புகைப்பட குறிப்பும் அவருடையது தான். ஆனால், அதற்கு மேல் அந்த படத்தில் காணப்படும் பெண் பொறியாளர் பற்றி அதிக தகவல்கள் இல்லை. எத்தனை பெரிய இழப்பு இது?
இந்த படத்தை இப்போது நோக்கும் எவரும், அதில் உள்ள பெண் பொறியாளரின் முன்னோடி பங்களிப்பை அறிய வாய்ப்பில்லை. மாறாக, அவர்கள் பிழை எண்ணம் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சாதனையாளர்களாக அறியப்படும் எனியாக் பெண்களுக்கு அப்படி தான் நிகழ்ந்தன. ஆரம்பத்தில் அவர்கள் எனியாக் கம்ப்யூட்டர் முன் போஸ் கொடுக்கும் பெண்கள் என தவறாக கருதப்பட்டனர். ஆனால், எனியாக் கம்ப்யூட்டரை இயக்கும் சக்தியாக அவர்கள் விளங்கினர் என்பது மீட்டெடுக்கப்பட்ட வரலாறு.
கம்ப்யூட்டர் மற்றும் இணைய வரலாற்றில் பெண்களின் பங்கு இவ்விதம் மீட்டெடுக்கப்பட வேண்டியதாகவே இருக்கிறது.
நிற்க, இந்த வரலாற்று புகைப்படம் பற்றி ஆய்வும் செய்யும் வலைப்பதிவு ஒன்று, இதில் உள்ள ஐபிஎம் இயந்திரம் கம்ப்யூட்டர் அல்ல, அதற்கும் முந்தைய டேபிலேட்டிங் இயந்திரம் என தெளிவுபடுத்தி மேலதிக விவரம் அளிக்கிறது. ஆனால் அந்த பெண் பொறியாளர் பற்றி அதிக தகவல்கள் இல்லை என்கிறது.
இந்த புகைப்படம் தொடர்பான ரெட்டிட் விவாதச்சரடு, இந்த முரண் நகையை அழகாக சுட்டிகாட்டுகிறது. இந்த சரட்டின் பின்னூட்டம் ஒன்று, இந்த பெண் பற்றி எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் அந்த இயந்திரம் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது” என குறிப்பிடுகிறது.
- கம்ப்யூட்டர் வரலாற்றிலும் இணைய வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய முன்னோடி பெண்களை அறிமுகம் செய்யும் ’இணைய பெண்கள்’ புத்தகம்.