வெப் 2.0 என குறிப்பிடப்படும் வலை 2.0 இணைய வளர்ச்சியில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்த காலகட்டத்தில் உருவான இணையதளங்களை குறிக்கின்றன. வலை 2.0 என்பது உண்மையில் ஒரு கருத்தாக்கம் தான். புத்தாயிரமாண்டு வாக்கில் உருவாகத் துவங்கிய புதிய வகை இணையதளங்களை அதற்கு முன் இருந்த இணையதளங்களின் தன்மையில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்காக வலை 2.0 எனும் கருத்தாக்கம் முன் வைக்கப்பட்டது.
அதே நேரத்தில் வலை 1.0 மற்றும் வலை 2.0 இணையதளங்களுக்கு இடையே தொழில்நுட்ப நோக்கிலும், வடிவமைப்பு நோக்கிலும் முக்கிய வேறுபாடுகள் இருந்தன. முதல் அலை தளங்கள் நிலைத் தன்மை கொண்டவை என்றால், இரண்டால் அலை தளங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் துடிப்பான தன்மை கொண்டவை.
இன்னும் எண்ணற்ற வேறுபாடுகள் உண்டென்றாலும், பங்கேற்புத்தன்மையை அதி முக்கிய அம்சமாக கொள்ளலாம். இரண்டாம் அலை தளங்கள் பயனர்கள் பங்கேற்கும் வாய்ப்பை அளித்தன.
சமூக ஊடகம் என அறியப்படும் பெரும்பாலான இணைய சேவைகள் வலை 2.0 அலையின் அங்கமாக உருவாகியவை. இப்போது மூன்றாம் வலை எனும் வலை 3.0 தளங்கள் உருவாகி வருவதாக கருதப்படுகிறது.
மூன்று வலையையும் விளக்கும் வகையிலும், இந்த போக்கின் முக்கிய அடையாளங்களாக கருதப்படும் இணையதளங்களை உதாரணம் காட்டும் வகையில் தனி இணையதளத்தை அமைத்துள்ளேன்.
வலையின் வளர்ச்சி போக்கை உணர்த்தும் இந்த இணையதளம், ஏற்கனவே உருவாக்கிய இணைய செய்தி கையேட்டின் நீட்டிக்கப்பட்ட அம்சமாக அமைகிறது. செய்தி நோக்கில் அறிந்து கொள்ள வேண்டிய இணையதளங்களை விரிவாக சுட்டிக்காட்டும் இந்த கையேட்டின் கூடுதல் அம்சமாக, செய்தியாளர்களும், செய்தி அறிதலில் ஆர்வம் கொண்டவர்களும் அறிந்திருக்க வேண்டிய மூன்று வலையின் போக்குகளை குறிக்கும் இணையதளங்களை பட்டியலிடும் முயற்சியின் விளைவாக இதுவே தனி தளமானது.
மூன்று வலையின் ஆதார அம்சங்களை உணர்த்தும், இணையதளங்கள், சேவைகள் உள்ளிட்டவற்றை இந்த பட்டியலில் உணரலாம். இதன் தொடர்ச்சியாக இந்திய அளவில் மற்றும் தமிழ் அளவில் மூன்று வலையின் அம்சங்களை பிரதிபலிக்கும் இணையதளங்கள் உதாரணம் காட்ட விரும்புகிறேன்.
அந்த வகையில் தமிழில் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை தளங்கள் என கருதக்கூடியவை எவை? கீற்று.காம், இன்தாம், தமிழ் இணைய நூலகம், மின்னம்பலம் உள்ளிட்டவற்றை முதல் அலை தளங்களாக கருதலாம்.
தமிழிஷ், தமிழ்மணம் உள்ளிட்டவை வலை 3.0 தளத்திற்கான உதாரணங்கள். திரள்.காம் தளத்தை மூன்றாம் அலை தளம் என கருதலாம்.
இந்த பட்டியலில் இடம்பெறக்கூடிய வலை 1.0, வலை 2.0 மற்றும், வலை 3.0 இணையதளங்களை பரிந்திரைக்கவும்.
வலையின் போக்கை உணர்த்தும் இணையதளம்: https://web-story.super.site/