இணையத்துடன் தொடர்புடைய கார்ட்டூன் எனும் போது, முதலில் நினைவுக்கு வருவது, ‘நீங்கள் நாய் என்பது இணையத்தில் யாருக்கும் தெரியாது” கார்ட்டூனாக தான் இருக்கும்.
இணையத்தின் அனாமதேய தன்மையை உணர்த்தும் இந்த கார்ட்டூன், அது வெளியாகி 30 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் இன்னமும் இணைய வரலாற்றின் அடையாள்ச் சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது.
இணைய நாய் கார்டூனுக்கு நிகராக கொண்டாடப்பட வேண்டிய இன்னொரு இணைய கார்ட்டூன் இருப்பதை அண்மையில் தெரிந்து கொள்ள முடிந்தது. வாசகரை பிடித்து தள்ளிய கார்ட்டூன் தான் அது.
இந்த கார்ட்டூனை பார்ப்பதற்கு முன், தள்ளு (push ) நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியே பாயிண்ட்காஸ்ட் (PointCast ) நிறுவனம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாயிண்ட்காஸ்ட் இணையத்தின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்று. இணையத்தின் நுழைவு வாயில் என 1990 களின் பிற்பகுதியில் கருதப்பட்ட யாஹு துவங்கப்பட்ட காலத்தில் பாயிண்ட்காஸ்டும் அறிமுகமானது. ஆனால் யாஹு அளவுக்கு வளர்ந்து வெற்றி பெற முடியாமல் இரண்டு ஆண்டுகளில் மூடப்பட்டது என்றாலும், அது வழங்கிய சேவை முக்கியமானது.
இணையம் மூலம் பயனாளிகள் செய்திகளை அவர்கள் கம்ப்யூட்டர்களுக்கே நேரடியாக வழங்கும் சேவையை பாயிண்ட்காஸ்ட் வழங்கியது. அதாவது பயனாளிகள் எந்த இணையதளத்திற்கும் சென்று பார்க்காமலே செய்திகள் அவர்களைத் தேடி செய்திகளை அனுப்பி வைத்தது. இதற்காக தள்ளு நுட்பத்தை பயன்படுத்தியது.
இணையம் வாடிக்கையாளர்- சேவையாளர் எனும் முறையில் செயல்படுகிறது. கோரிக்கை வைத்தால் தகவல்கள், சேவைகள் வந்து சேரும். பொதுவாக பயனாளிகள் கிளிக் செய்தால் தான் தகவல்களை பெற முடியும். இதற்கு மாறாக, தகவல்களை பயனாளிகள் கம்ப்யூட்டருக்கு நேரடியாக அனுப்பி வைப்பதாக தள்ளு நுட்பம் அமைந்திருந்தது.
இந்த நுட்பத்தை அடிப்படையாக கொண்டு, 1996 ல், பாயிண்ட்காஸ்ட் பயனாளிகளுக்கு செய்திகளை வழங்கத்துவங்கியது. ஊடக நிறுவனங்களோடு கூட்டு ஏற்படுத்திக்கொண்டு பயனர்களுக்கு பலவித செய்திகள் மற்றும் பங்குச்சந்தை தகவல்களை வழங்கியது. இதற்கான மென்பொருளை நிறுவிக்கொண்டால் போதுமானது.
பாயிண்ட்காஸ்ட் மென்பொருள் பயனாளிகள் கம்ப்யூட்டரில் ஒரு ஸ்கிரீன்சேவர் போல இருக்கும். அதில் தொடர்ச்சியாக செய்திகள் தோன்றும். எந்த வகை செய்திகள் என்பதையும் அவை தோன்றும் அவகாசத்தையும் பயனாளிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.
1996 ல், நாமறிந்த கூகுள் நியூஸ் எல்லாம் அறிமுகமாக நிலையில், கம்ப்யூட்டரில் செய்திகள் தானாக தோன்றும் வசதிய எத்தனை புதுமையாக இருந்திருக்கும் என புரிந்து கொள்ளலாம். புஷ் டெக்னாலஜி எனப்படும் தள்ளு நுட்பம் கொண்டு பாயிண்ட்காஸ்ட் இதை வழங்கியது.
பாயிண்ட்காஸ்ட் தோல்வி அடையாமல் வெற்றி பெற்றிருந்தால், இணையத்தில் செய்தி வழங்கல் எப்படி இருந்திருக்கும் என்பதும் சுவாரஸ்யமான கேள்வி தான்.
இப்போது, தள்ளு நுட்பமும் மறக்கப்பட்டு விட்டது, பாயிண்ட்காஸ்டும் தான்.
இப்போது, தள்ளு கார்ட்டூனுக்கு வருவோம்.
ஆனால், இணைய நாய் கார்ட்டூன் தனியுரிமையின் அவசியத்தையும், இணையத்தின் தன்மையையும் உணர்த்துவது போல, பயனரை தள்ளிவிட்ட கம்ப்யூட்டர் கார்ட்டூனும் அமைகிறது.
மைக் ஸ்டீவன்ஸ் என்பவர் இந்த கார்டூனை வரைந்திருந்தார். கம்ப்யூட்டர் மேஜை முன், ஒருவர் கீழே விழுந்து கிடக்க, அறையை எட்டிப்பார்க்கும் பெண்மணியிடம், ’எனக்கு என்றும் இல்லை… என்ன தள்ளு நுட்பம் கொஞ்சம் அதிகமாகி விட்டது” என பதில் அளிப்பதாக இந்த கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது.
தள்ளு நுட்பம் மூலம் பயனர் கம்ப்யூட்டருக்கு செய்திகள் வழங்கப்படுவதை குறிக்கும் வகையில், அந்த தள்ளு பயனரை பிடித்து தள்ளும் அளவுக்கு இருந்துள்ளது என மிகை கற்பனை செய்யும் இந்த கார்ட்டூன் லேசாக புன்னகை வர வைப்பதோடு, தள்ளு நுட்பத்தையும் புரிய வைக்கிறது அல்லவா!
தள்ளு நுட்பம் தொடர்பான ’கம்ப்யூட்டர் லாங்குவேஜ்’ அகராதி பக்கத்தில் இந்த கார்ட்டூன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
–