சமூக ஊடகம் என்று எதை சொல்வீர் தோழர்களே!

சமூக ஊடகம் தான் உங்கள் உலகம் என்று நினைத்துக்கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி- அந்த உலகம் முடிவுக்கு வருகிறது!

சமூக ஊடகம் தொடர்பான வலுவான அதிருப்தியும், கடுமையான விமர்சனங்களும் பலருக்கு இருந்தாலும், சமூக ஊடகம் முடிவுக்கு வருவதாக சொல்வது திகைப்பாகவே இருக்கும். இது உண்மை தானா? என சந்தேகத்துடன் கேட்கத்தோன்றலாம்.

ஒரு சின்ன திருத்தம், நாமறிந்த வகையில் சமூக ஊடகம் முடிவுக்கு வருகிறது. இது உடனே நிகழாது படிப்படியாக நிகழும் என்பதோடு, இதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கிவிட்டன.

அதோடு பரவலாக அறியப்பட்ட விதத்தில் சமூக ஊடகத்தின் உலகம் அல்லது காலம் முடிவுக்கு வருவது ஒரு விதத்தில் நல்ல செய்தி தான். ஏன், எப்படி? என்று விரிவாக பார்க்கலாம்.

சமூக ஊடக அமைதி

சமூக ஊடக உலகில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை நீங்களும் கூட கவனித்திருக்கலாம். அதாவது பலரும் குறிப்பாக, ஜென் சி தலைமுறையினர் பதிவிடுவதை நிறுத்தியிருக்கின்றனர்.

இந்த நவீன தலைமுறையினருக்கு பலவித அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமாக சமூக ஊடக உலகில் பிறந்து சமூக ஊடகத்துடன் வளர்ந்த தலைமுறையினராக இவர்களை கருதலாம். சமூக ஊடக பயன்பாடு என்பது இந்த தலைமுறையினருக்கு மிகவும் இயல்பாக அமைந்திருந்ததோடு, இதில் சிறந்து விளங்கும் தன்மையும் பெற்றிருந்தனர்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகளில் கோலோச்சும் எண்ணற்ற இளம் செல்வார்க்காளர்களே இதற்கு சான்று. முந்தைய தலைமுறை செய்யத்தயங்கியதை எல்லாம் இவர்கள் இரண்டாம் இயல்பாக செய்து சமூக ஊடக பரப்பில் கவனத்தை ஈர்த்தனர்.

தனி வாழ்க்கையை வாழ்க்கை கண்ணாடிகள் இல்லாமல் பகிர்ந்து கொள்வதையும், எதை செய்தாலும் அதை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதையும் இந்த தன்மைக்கான உதாரணங்களாக சொல்லலாம்.

வாழ்வின் தருணங்கள் எல்லாம் சுய படங்களுக்கானவை அல்லது ஸ்டேடஸ் எனும் நிலைத் தகவல்களாக வெளியிடத்தக்கவை என கருதும் இந்த இயல்பை மற்ற பயனாளிகளும் ஓரளவு வரித்துக்கொண்டிருக்கின்றனர்.

பகிர்தல் இனி இல்லை

எதையும் ஒளிவு மறைவின்றி பகிரும் தன்மை வர்த்தக நோக்கில் வருமானத்தை அள்ளிக்கொடுப்பது இளம் செல்வாக்காளர்களை நம் காலத்து முன்னுதாரணமாக பேச வைத்திருக்கிறது. இதன் இன்னொரு பக்கமாக, சமூக ஊடக கவனத்திற்காக மிகை வெளிப்பாடுகளும், இயல்பை மறைக்கும் செயற்கை நேர்த்தியும், போலியாக உருவாக்கப்படும் பிம்பங்களும் அலுப்பை ஊட்டத்துவங்கியிருப்பதை இந்த போக்கின் பக்க விளைவாக கருதலாம்.

குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்றால் கூட, உடன் வந்தவர்களை கவனிக்காமல் உணவு மேஜையில் உள்ள உணவை படம் எடுத்து இன்ஸ்டாவிலோ, டிவிட்டரிலே (இப்போது எக்ஸ்) பகிர்வதை வழக்கமாக கொண்டிருந்த இந்த தீவிர சமூக ஊடக பயனாளிகள் மத்தியில் தான் இப்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

எதையும், எப்போதும் பகிர்வதே இயல்பு மட்டும் அல்ல நவீன வாழ்க்கையின் தேவை என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அமைதியாகி விட்டனர் என்கின்றனர். அதாவது தங்கள் வாழ்க்கையில் நடப்பதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதை நிறுத்திக்கொண்டுள்ளனர்.

டிஜிட்டல் நலம் பாதிப்பு

ஏற்கனவே சமூக ஊடக மிகை பழக்கம் பயனாளிகள் டிஜிட்டல் நலத்தை தீவிரமாக பாதிப்பது தொடர்பாக பல நிலைகளில் விவாதிக்கப்பட்டு, இது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. சமூக ஊடகம் சாமானியர்களுக்கு எளிதாக புகழ் வெளிச்சத்தை உண்டாக்கி, இதுவரை திறக்காக பல கதவுகளை திறந்துவிடுவதாக கருதப்பட்டாலும், இன்னொரு பக்கம் சமூக ஊடகத்தின் தாக்கம் பல தீய விளைவுகளை ஏற்படுத்தி வருவதும் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப் பகிர்வுகளும், இன்ஸ்டா ரீல்களும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இளம் தலைமுறையினரும், பதின் பருவத்தினரும் தவறான தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். ரீல்களில் முன்னிறுத்தப்படும் திருத்தி வெட்டப்பட்ட இணக்கமான தோற்றத்தை பலரும் நிஜம் என நம்பி, தங்கள் வாழ்க்கையிலும் அவற்றை பின்பற்ற விரும்பி அவதிக்குள்ளாகின்றனர்.

உடல் தோற்றத்தையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். கொடியிடை, நிலவு முகம் என்பதெல்லாம் காலம் காலமாக இருக்கும் வர்ணனைகள் தான் என்றாலும், இன்ஸ்டா செல்வாக்காளர்கள் முன்னிறுத்தும் பளபளப்பான அளந்தெடுத்த உடல் வாகை பார்க்கும் பதின் பருவத்து பெண்கள் இத்தகைய உடல் வாகையே வாழ்க்கை லட்சியம் போல நினைத்து, தவறான உணவு கட்டுப்பாட்டு பழக்கத்தை பின் பற்ற முயல்வதும், உடலை வறுத்திக்கொள்வதும் நிகழ்வதை பலரும், கவனித்திருக்கலாம்.

பல மேலை நாடுகளில் பள்ளி பெண்கள், பூஜ்ஜியம் உடல் அளவை வேண்டி, முறையான உணவு பழக்கத்தை கைவிட்டு உணவு கோளாறால் பாதிக்கப்படுவது பெற்றோர்களையும், வல்லுனர்களையும் பதற வைத்திருக்கிறது.

சமூக ஊடக பரப்புல் பிழைச் செய்திகள் ஆதிக்கம் செலுத்துதையும், திறந்த மனம் கொண்ட உரையாடல்கள் பின்னுக்குத்தள்ளப்பட்டு வெறுப்பும், துவேஷமும் விவாதம் எனும் பெயரில் முன்னிறுத்தப்படுவதையும் நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

சமூக ஊடக விலகல்

இத்தகைய பாதிப்புகளை குறைக்க, சமூக ஊடக பயன்பாட்டை குறைத்துக்கொள்வது அல்லது வாய்ப்பிருந்தால் சமூக ஊடகத்தில் இருந்து இடைவெளி எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படும் சூழலில், இப்போது ’ போஸ்டிங் ஜீரோ ’ எனப்படும் பூஜ்ஜியம் பதிவிடுதல் புதிய போக்காக உருவாகியிருப்பதை அறிய முடிகிறது.

கெயில் சைகா (Kyle Chayka ) எனும் எழுத்தாளர் தான் இந்த போக்கை முதலில் அடையாளம் காட்டினார். அமெரிக்காவின் புகழ் பெற்ற நியூயார்க்கர் பத்திரிகையில் இது தொடர்பாக எழுதிய நீளமான கட்டுரையில் அவர் பூஜ்ஜியம் பதிவிடுதலை நோக்கி சமூகம் சென்று கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

வழக்கமான சமூக ஊடக பயனாளிகள் தங்கள் வாழ்க்கையை சமூக ஊடக பரப்பில் பகிர்ந்து கொள்வது தேவையற்றது என உணர்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கான காரணங்களையும் விரிவாக அலசியிருந்தார்.

இந்த கட்டுரை இணைய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.சர்வதேச ஊடகமான பிபிசி இணையதளம் ”நம் நண்பர்கள் ஏன் சமூக ஊடகத்தில் பகிர்வதை நிறுத்துக்கொண்டனர்?’ எனும் தலைப்பில் நியூயார்க்கர் கட்டுரையை மையமாக கொண்ட ஒரு அலசல் பதிவை வெளியிட்டது. தொடர்ந்து பல்வேறு ஊடங்களும் இந்த போக்கு தொடர்பான அலசில் ஈடுபட்டன.

ஆய்வும் அலசலும்,

பிபிசி கட்டுரையாளர் தனிப்பட்ட முறையில் இந்த போக்கை உணர்ந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். நண்பர்களின் விடுமுறை பயண படங்கள் அல்லது குழந்தை கொண்டாட்ட படங்கள் ஒன்றிரண்டு வெளியானால், நூற்றுக்கணக்கில் பிராண்ட்கள் மற்றும் செல்வாக்காளர்களின் பதிவுகளாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

நம்முடைய சமூக வாழ்க்கையின் பிரதிபலிப்பாக விளங்கிய சமூக ஊடக பரப்பு இப்போது வெறும் உள்ளடக்க வெளியாக தோன்றுவதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.

மேலும், நியூயார்க்கர் கட்டுரையை எழுதிய எழுத்தாளரை நேர்காணல் செய்து அவரது கருத்துக்களையும் பதிவு செய்திருந்தார். சமூக ஊடகம் என்பது சமுக அம்சம் குறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது எனும் கருத்துடனே அவர தனது பதிலை துவக்கியிருந்தார்.

சமூக ஊடக மேடைகள் மக்களின் வழக்கமான வாழ்க்கை மீதான பிடிப்பை கைவிட்டு வருகின்றன, அதே நேரத்தில் வழக்கமான மக்கள் சமூக ஊடகத்தில் பதிவிடும் ஊக்கத்தை இழந்து வருகின்றனர், எனவே சமூக ஊடகமும் தொலைக்காட்சி போல மாறியிருக்கிறது என்றும் அவர் பதில் அளித்திருந்தார்.

சமூக ஊடகத்தில் மிஞ்சியிருப்பது பிராண்ட் விளம்பரங்களும், பேஷன் விளம்பரங்களும் தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சமூக ஊடக மாற்றம்,

தொலைக்காட்சி எனும் ஒளிபரப்பு வடிவத்திற்கு மாறாக, சாதாரண பயனாளிகளின் பரஸ்பர தகவல் பகிர்வுக்கான மேடையாகவே சமூக ஊடகம் அமையும் நிலையில், இந்த ஊடகம் பழைய தொலைக்காட்சியாக மாறியிருக்கிறது என்பதைவிட சமூக ஊடகத்தின் நிகழ்கால போக்கை வலுவாக விமர்சிக்க முடியாது.

இன்னொரு பக்கம், செயற்கை நுண்ணறிவு துணையோடு உருவாக்கப்படும் தட்டயான உள்ளடக்கமும், மிகை தோற்ற படங்களும் சமூக ஊடகத்தில் உலா வரத்துவங்கி இயந்திர தன்மையை ஏற்படுத்தியுள்ளன.

ஆக, பயனாளிகள் ஏன் சமூக ஊடகத்தில் பகிர்வதை நிறுத்தி கொள்ளத்துவங்கியிருக்கின்றனர் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். சமூக ஊடக மிகை பூச்சில் இருந்து விடுபட்டு அவர்கள் நிஜ உலகின் அர்த்தமுள்ள அனுபவங்களை நாடத்துவங்கியிருக்கின்றனர். அல்லது சமூக ஊடகத்திலேயே சற்று விலகி நின்று, அமைதியாக வேடிக்கை பார்க்கத்துவங்கியுள்ளனர்.

*

சமூக ஊடக பரப்பில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் வரவேற்க தக்கது தான். சமூக ஊடக பயன்பாட்டின் இன்னொரு பக்கம் பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற ஒரு சில மேடைகள் ஆதிக்கம் செலுத்துவதும், இவற்றின் செயல்பாடுகளை பயனாளிகளை பின்னுக்குத்தள்ளி வர்த்தக நோக்கில் அமைந்திருப்பதும் இதற்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன.

சமூக ஊடக முன்னணி சேவைகள் பயனாளிகளை முதன்மையாக கருதுவதற்கு மாறாக, அவர்களை விளம்பர வலை விரிப்பதற்கான வாய்ப்பாக கருதி செயல்பட்டு வருகின்றன. பயனாளிகள் பகிர்வுகள் வர்த்தக நோக்கில் தரவுகளாக அறுவடை செய்யப்படுவதோடு, எந்த வகை பகிர்வுகள் கவனத்தை ஈர்க்கும் என்பதை அல்கோரிதம்கள் வழிகாட்டுகின்றன.

பயனர் ராஜ்ஜியம்

பயனாளிகள் தரவுகள் வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படுவது தனியுரிமை கவலையை ஏற்படுத்தியதோடு, பேஸ்புக்கை விட்டு வெளியேறுங்கள் போன்ற சிறு இயக்கமாகவும் வெடித்தது. டிவிட்டர் சேவை கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்கால் கையகப்படுத்த பட்ட போது, எக்ஸாக மாறிய டிவிட்டரில் இருந்து வெளியேறுக எனும் கோஷமும் முதன்மை பெற்றது.

பேஸ்புக் போன்ற சேவைகளின் ஆதிக்கம் மற்றும் வர்த்தக சுரண்டால் சமூக ஊடக பரப்பின் முகமே மாறியிருக்கும் சூழலில் தான், சராசரி பயனாளிகள், அதிலும் குறிப்பாக தற்கால தலைமுறையினர் சமூக ஊடக பகிர்வுகளை குறைத்து கொள்ளத் துவங்கியுள்ளனர்.

இந்த போக்கை முன்வைத்து விழிப்புணர்வும், விவாதங்களும் அவசியம் என்றாலும், இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் இருப்பதையும் உணர வேண்டும். இந்த போக்கு சமூக ஊடகத்தின் பிரதிநிதி என கருதப்படும் ஒரு சில முன்னணி சமூக ஊடக சேவைகளின் விளைவே அன்றி, ஒட்டுமொத்த சமூக ஊடகத்தின் மீதான எதிர்வினை அல்ல!

ஆம், சமூக ஊடகத்தின் முகம் மாறியிருக்கிறது. சமூக ஊடக சேவைகள் திசை மாறியிருக்கின்றன. ஆனால், இதற்காக முழு சமூக ஊடகமும் விமர்சனத்திற்கு உரியது அல்ல.

இந்த இடத்தில் சமூகம் ஊடகத்தின் தன்மையை சற்று மனதில் கொள்வது நல்லது. சமூக ஊடகம் என்றதும் பரவலாக அறியப்பட்ட பேஸ்புக்கும்,இன்ஸ்டாகிராமும், டிவிட்டரும் உடனடியாக நினைவுக்கு வந்தாலும், இவை மட்டுமே சமூக ஊடகம் அல்ல.

உண்மை ஊடகம்

உண்மையில் சமூக ஊடகம் என்பது பரந்து விரிந்தது, பல வித சேவைகளை கொண்டது.புதிய ஊடகம் என அறியப்படும் நவீன ஊடகத்தின் அங்கமான சமூக ஊடகம், பயனாளிகளை மையமாக கொண்டது என்பதில் பாரம்பரிய வெகுஜன ஊடகத்தில் இருந்து வேறுபடுகிறது.

மேலும் சமூக ஊடக பரப்பில், பயனாளிகள் வெறும் நுகர்வோராக மட்டும் அல்லாமல் பங்கேற்பாளராகவும் இருக்கிறார். உருவாக்குபவராகவும் திகழ்கிறார். இந்த ஜனநாயகத்தன்மையே சமூக ஊடகத்தை நம் காலத்து ஊடகமாக்கியிருக்கிறது. பயனர் பங்கேற்பு என்பது வெகுமக்கள் கையில் உள்ளட்டக்கத்தை கொண்டு வந்ததோடு, பல நேரங்களில் வெகுமக்கள் ஊடக போதாமையை சுட்டிக்காட்டவும், கேள்வி கேட்கவும் வழி செய்துள்ளது.

பயனர்கள் தங்களுக்குள் கருத்துக்கள், ஆக்கங்கள், செய்திகள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொண்டு தகவல் தொடர்பு கொள்ள வழி செய்யும் தன்மை கொண்ட இணைய சேவைகள் சமூக ஊடகம் எனும் பொதுவாக அறியப்படுகின்றன.

சமூக ஊடக வரலாறு

சமூக ஊடகத்திற்கு நாம் அறிந்ததை விட நீண்ட வரலாறு இருக்கிறது. பரவலாக அறியப்பட்டதை விட பலவித சேவைகள் இந்த பரப்பில் நிறைந்துள்ளன. இவற்றில் வர்த்தக நோக்கில் பெரும் வெற்றி பெற்றவையாக பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட முன்னணி சேவைகள் அமைகின்றன.

இந்த முன்னணி சேவைகள், லாப நோக்கில் வளர்த்தெடுத்த வர்த்தக தன்மையே சமூக ஊடக பரப்பை பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த சேவைகளின் அல்கோரிதம் ஆதிக்கம், பயனாளிகளையும் கைப்பாவையாக்கி சமூக ஊடகத்தின் ஆதார தன்மையை பாதித்துள்ளது.சமூக ஊடகம் வல்லுனர்களில் ஒருவரான காரல் நியூபோர்ட் இந்த வகை சமூக ஊடக சேவைகளை, தேர்வு செய்யப்பட்ட, அல்கோரிதம் வழிநடத்தும் உரையாடல் மேடைகள் என தனித்து குறிப்பிடுகிறார்.

எனவே சமூக ஊடகத்தின் சமகால போக்கை விமர்சிக்கும் போது, ஒட்டு மொத்த சமூக ஊடகத்தையும் விமர்சிக்கும் தவறை செய்யக்கூடாது. வர்த்தக நோக்கினால் திசைமாறிய பேஸ்புக் போன்ற சேவைகளுக்கு எதிரான விமர்சனமாக இதை புரிந்து கொள்ள வேண்டும்.

பயனர்களை மையமாக கொண்ட புதுயுக சேவைகள் எனும் வகையில் சமூக ஊடகத்திற்கான தேவை இன்னமும் தொடர்கிறது. மேலும், முன்னணி சமூக ஊடகத்தின் தவறான போக்கிற்கு எதிரான விமர்சனம், குறிப்பிட்ட சேவைகளுக்கு எதிராக அல்லாமல் பொதுவில் சமூக ஊடகம் மீது முன்வைக்கப்படும் போது, சமூக ஊடகம் சாத்தியமாக்கிய பயனர் ஜனநாயகமும், உரிமையும் கேள்விக்குள்ளாக்கப்படுவதை உணர வேண்டும்.

குட்ரீட்ஸ், ரெட்டிட்

ஆக சமூக ஊடகம் எனும் போது, எந்த சேவைகளை குறிப்பிடுகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். பேஸ்புக் சமூக வலைப்பின்னல் தளங்களின் நன்கறியப்பட்ட உதாரணம் என்றால், புத்தக பிரியர்களுக்கான குட்ரீட்ஸ், லைப்ரரிதிங், திரைப்பட ரசிகர்களுக்கான பிளக்ஸ்டர், படைப்பூக்கம் மிக்கவர்களுக்கான பிஹான்ஸ், சமூக உரையாடலுக்கான ரெட்டிட் உள்ளிட்ட இன்னும் பல சமூக வலைப்பின்னல் தளங்கள் இருக்கின்றன.

இவைத்தவிர, வலைப்பதிவுகள், விக்கி தளங்கள், மெய்நிகர் சமூகங்கள், விவாத குழுக்கள் உள்ளிட்டவையும் சமூக ஊடக பிரிவின் கீழ் தான் வருகின்றன. மேலும், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சேவைகளுக்கான வர்த்தக நோக்கம் இல்லாத திறவு மூலத் தன்மை கொண்ட பிரெண்டிகா, மாஸ்டோடான், புளுஸ்கை போன்ற மாற்று சேவைகளும் இருக்கின்றன.

ஆகவே சமூக ஊடகத்தின் ஆதார அம்சங்களை மனதில் கொள்வோம். அவற்றில் இருந்து விலகும் வர்த்தக மயமான சேவைகளை விலக்குவோம். உண்மையான சமூக ஊடகத்தை கொண்டாடுவோம்.

நன்றி: காக்கைச் சிறகினிலே சிறப்பிதழில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *