நான் ஏன் சாட்ஜிபிடியை நம்புவதில்லை!

கூகுளில் தகவல்களை தேடும் போது பெரும்பாலான நேரங்களில் முதல் பக்கத்தில் விளம்பர நோக்கிலான தளம் ஒன்று துருத்திக்கொண்டு நிற்கும். சில நேரங்களில் விளம்பர நோக்கிலான தளமே அதிகாரப்பூர்வாக வர வேண்டிய தளத்தை விட முன்னிலை பெறுவதும் உண்டு.

இப்படி தான், கூகுளின் ஏஐ உருவாக்க கண்காணிப்பு சேவையான சின்த்ஐடி (synthid) தொடர்பான தேடலில் சின்த்ஐடி.நெட் (https://synthid.net/) இணையதளம் முன்னிலை பெறுவது பெரும் முரண்நகையாக அமைந்திருப்பதாக தோன்றுகிறது.

ஜென் ஏஐ நுட்பத்தின் ஆக்கத்திறனின் இன்னொரு பக்கமாக, பொய்யான போலியான படங்களையும், காணொலிகளையும் உருவாக்கி உலாவ விடமுடிகிறது. நிஜம் போலவே தோன்றக்கூடிய இந்த பொய் படங்கள் இணையத்தில் காட்சிப்பிழையை உண்டாக்கி, ஏற்கனவே உள்ள பொய்ச்செய்தி பிரச்சனையை மேலும் தீவிரமாக்குகிறது.

ஏஐ உருவாக்கும் பொய்யான படங்களிடம் ஏமாறாமல் இருப்பதும் சவால், அவற்றை கண்டறிவதும் இன்னும் பெரிய சவால். இந்த இடத்தில் தான் கூகுள் டீப்மைண்ட் உருவாக்கமான சிந்த் ஐடி வருகிறது. இந்த நுட்பம் ஏஐ உருவாக்கங்களில் கண்ணுக்குத்தெரியாத டிஜிட்டல் நீர்குறி அடையாளங்களை பொறிக்கிறது. இதன் அடிப்படையில் ஏஐ உருவாக்க படங்களை கண்டறியலாம் என்று கூகுள் சொல்கிறது.

திறவு மூல அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நுட்பம் கூகுளின் ஆக்கத்திறன் ஏஐ மாதிரிகளில் செயல்படுகிறது.

ஏஐ உருவாக்கங்களை அடையாளம் காணும் அம்சங்கள் அவை உருவாக்கப்படும் நிலையிலேயே இடம்பெற செய்ய வேண்டும் எனும் கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த பின்னணியில் கூகுளின் ஏஐ ஆக்கம் அடையாளம் காணும் சேவை ஒரு முக்கிய படி தான்.

கூகுளின் இந்த ஏஐ கண்டறியும் வசதி, இப்போது சராசரி பயனாளிகளும் அணுக கூடியதாக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியான நிலையில், இந்த நுட்பம் குறித்து கூகுளில் தகவல்களை தேடிய போது தான், சிந்த் ஐடி.நெட் எனும் தளம் கண்ணில் பட்டது.

இந்த தேடலுக்கான முதல் மூன்று முடிவுகள் கூகுளின் அதிகாரப்பூர்வ பக்கங்களாக உள்ள நிலையில் நான்காவதாக அமையும் சிந்த் ஐடி.நெட் இணையதளம் கவனிக்கத்தக்கதாக அமைகிறது.

இந்த தளத்திற்குள் சென்று பார்த்தால், சிந்த் ஐடி என்பது கூகுள் டீப்மைண்டின் ஏஐ உருவாக்கத்திற்கான புரட்சிகரமான வாட்டர்மார்க் மற்றும் அடையாளம் காணும் சேவை என குறிப்பிடப்பட்டு, இந்த சேவை தொடர்பான சுருக்கமான அறிமுகம் இடம்பெறுகிறது. அதன் கீழ் இந்த சேவையின் முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டு, இது செயல்படும் விதமும் விளக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய கேள்விகளுக்கான விளக்கத்துடன், இதற்கான மூல ஆய்வு கட்டுரை மற்றும் திறவுமூல நிரல் தொகுப்பு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

சின்த் ஐடி தொடர்பாக தேவையான அறிமுகத்தை எளிமையான முறையில் அளிக்கும் இந்த தளம் வியக்க வைப்பதாகவே இருக்கிறது. ஆனால், இந்த தளம் கூகுளின் அதிகாரப்பூர்வ தளமாக தோன்றவில்லை. மூன்றாம் தரப்பு தளம் போல தெரிகிறது.

கூகுளின் டீப்மைண்ட் அதிகாரப்பூர்வ தளத்தில் இந்த நுட்பம் தொடர்பான விளக்கம் உள்ளது. கூகுளின் கீவேர்டு வலைப்பதிவிலும் விரிவான விளக்கம் உள்ளது. இந்த முடிவுகளோடு, இந்த மூன்றாம் தரப்பு தளமும் முன்னிலை பெற்றிருப்பது வியக்க வைக்கிறது.

குறிப்பிட்ட தலைப்புகளில் தேடப்படும் போது கூகுள் தேடலில் முன்னிலை பெறுவதற்காக அமைக்கப்படும் இத்தகைய தளங்கள் இயல்பாகவே உள்ளன. இவற்றில் பல விளம்பர நோக்கில் அமைந்திருக்கும். இத்தகைய விளம்பர தளங்கள் கூகுளில் முன்னிலை பெறுவது அதன் போதாமையாகவே கருதுகிறேன்.

கூகுள் நுட்பம் தொடர்பான தேடலிலேயே அதன் அதிகாரப்பூர்வ பக்கங்களுக்கு இணையாக ஒரு மூன்றாம் தரப்பு தளம் வந்து நிற்பது விநோதமாகவே இருக்கிறது. ( கூகுள் அல்கோரிதமின் அலங்கோலம் என்றும் இதை கருதலாம். தேடல் நடுநிலை என்றும் சிலர் வாதிடலாம்).

நிற்க, சின்த் ஐடி.நெட் தளம் மூன்றாம் தரப்பு தளம் தானா என்பதை உறுதி செய்து கொள்ள அதன் அறிமுக பகுதியை பார்த்தால் குழப்பமாகவே இருக்கிறது. இந்த தளம் கூகுளுடன் தொடர்புடையது அல்ல என தெளிவாக குறிப்பிடப்படவில்லை. கூகுளின் டீப்மைண்ட் நுட்பம் தொடர்பான கல்வி நோக்கிலான தகவல் தரும் தளம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கூகுளுக்கு சொந்தமான தளம் என்பதற்கான அடையாளமும் இல்லை. இந்த தளத்தின் உண்மையான நோக்கத்தையும் அறிய முடியவில்லை.

சரி, இந்த தளம் நம்பகமானதாக என கூகுளில் தேடிப்பார்த்தால், கூகுள் ஏஐ சுருக்கச்சேவை, ஆம் நம்பகமானதே, கூகுள் டீப்மைண்ட் நுட்பம் பற்றி கல்வி நோக்கில் தகவல் அளிக்கும் தளம் என பதில் சொல்கிறது. கூகுளுக்கு சொந்தமானதா என கேட்டால் ஏஐ பதில் இல்லை. பெர்பலெக்சிட்டி தளத்திடம் கேட்டால், யாருக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்து கொள்ள முடியவில்லை என பதில் சொல்கிறது.

ஏஐ உருவாக்கத்தை கண்டறிய உருவாக்கப்பட்ட கூகுளின் ஏஐ நுட்பம் தொடர்பான தேடலுக்கே ஏஐ இப்படி குழப்பமான பதிலை அளிப்பது நகை முரண் அன்றி வேறு என்ன?

ஒரு இணையதளம் பொய்யனதா, அதன் நோக்கம்? என்பதை எல்லாம் கண்டறிய ஏஐ நுட்பத்தை நம்பி பயனில்லை என்றே நினைக்கிறேன்.

நீங்களும் கூட கூகுளில் தேடிப்பார்த்து, கேட்டுப்பார்த்து சொல்லுங்கள்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *