இணையத்தில் பின்பற்ற வேண்டிய பொன் விதிகளை விளக்கும் வீடியோ

இணையம் பரவலாக பயன்பாட்டிற்கு வரத்துவங்கிய காலத்தில், நெடிக்கட் (Netiquette ) எனும் பெயரில் இணைய பயன்பாட்டிற்கான பொன் விதிகள் முன் வைக்கப்பட்டன. எடிக்கட் என குறிப்பிடப்படும், சமூகத்தில் நடந்து கொள்வதற்கான நெறிமுறைகளை ஒட்டி, இணையம் எனும் வலைப்பின்னல் பயன்பாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டும் வகையில் முன் வைக்கப்பட்ட நடத்தை நன்னெறிகள் நெடிக்கட் என குறிப்பிடப்பட்டன.

மனிதர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் எனத்துவங்கும் இந்த நெறிமுறைகளை இணைய பயன்பாட்டிற்கான பொன்விதிகளாக கருதலாம். விர்ஜினியா ஷியா எனும் எழுத்தாளர் இந்த விதிகளுக்காக பிரதானமாக அறியப்படுகிறார். இதே தலைப்பில் அவர் புத்தகமும் எழுதியிருக்கிறார். 

இணையத்தில் மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னியுங்கள் என முடியும் இந்த இணைய பத்து கட்டளைகளில் எனக்கு மிகவும் பிடித்தது, “ உங்கள் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்” என்பதாகும்.

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எனும் கேள்வியில் துவங்கி, இணையத்தில் அதிகம் காணப்படும் வீண் மோதல்களை தவிர்க்கவும் இந்த விதி உதவும்.

இந்த விதிகள் இணையத்தின் ஆரம்ப காலத்தில் பேசப்பட்ட அளவுக்கு அதன்பின் கண்டுக் கொள்ளப்படவில்லை.

ஆனால் இன்றைய இணையத்திலும் இந்த விதிகள் பொருத்தமானவை என்பதோடு அவசியமானவை. இணைய பொன்விதிகள் பற்றி இந்த வீடியோவில் பேசியிருக்கிறேன்: https://youtube.com/watch?v=a2x2bzW02-A

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *