பனிக்கட்டி மிதக்கும் அறிவியலை விளக்கும் இணையதளம்  

மிதக்கும் பனிப்பாறை வடிவங்களை நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம். இப்போது உங்கள் நினைவாற்றலை கொண்டு கடலில் மிதக்கும் பனிப்பாறை ஒன்றை வரையுங்கள் பார்க்கலாம்.

அநேகமாக நீங்கள் வரைந்ததில் ஒரு பிழை இருக்கலாம். காட்சி பிழை அல்ல- அறிவியல் பிழை!

அப்படி என்ன பிழை என்பதை தெரிந்து கொள்ள ஐஸ்பர்ஜர் (https://joshdata.me/iceberger.html ) இணையத்தில் சென்று மீண்டும் ஒரு முறை பனிப்பாறை அல்லது பனிக்கட்டி உருவத்தை வரைந்து பார்க்கவும். இப்போது சின்னதாக ஒரு மாயம் நிகழ்வதை நீங்கள் பார்க்கலாம்.

செவ்வக வடிவில் இருக்கும் இந்த அனிமேஷன் கடலில், மேற்பரப்பு கோட்டை ஒட்டி நீங்கள் வரையும் பனிப்பாறை வடிவம் அதன் தன்மைக்கு ஏற்ப மாற்றம் அடைந்து இறுதியில் ஒருவிதமாக நிலைத்து நிற்பதை பார்க்கலாம். எத்தனை முறை மாற்றி வரைந்தாலும், அந்த நிலையில் இருந்து மாறி பாறையின் அமைப்பிற்கு ஏற்ப இறுதி வடிவம் உருவாவதை பார்க்கலாம்.

இந்த மாற்றத்திற்கு பின்னே இருப்பது பனிப்பாறை மிதக்கும் அறிவியல்.

பனிப்பாறைகள் எப்போதும் தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டவை. தண்ணீரைவிட பனிக்கட்டியின் அடர்த்தி குறைவு என்பதே இதற்கு காரணம். ஆக, கடலிலோ, தொட்டியிலோ பனிக்கட்டி மிதக்கும். அது மட்டும் அல்ல, எப்போதும் அதன் 90 சதவீத பரப்பு நீருக்கடியில் மறைந்திருக்க, 10 சதவீதம் மட்டுமே வெளியே தென்படும்.

இப்ப்போது மீண்டும் மிதக்கும் பனிப்பாறை படங்களுக்கு வருவோம். பனிப்பாறை படங்களில், இப்படி 90 சதவீதம் நீருக்கடியிலும், பத்து சதவீதம் வெளியேவும் காட்சி தருவதை பார்க்கலாம். இதில் உள்ள ஒரே சிக்கல் என்னவெனில், பெரும்பலான படங்களில் பனிப்பாறை மிதக்கும் பகுதி எவ்விதம் அமைந்திருக்கிறது என்பது தான்.

பனிப்பாறையின் பத்து சதவீதமே தண்ணீருக்கு வெளியே தெரியும் என்றாலும், வரையப்பட்ட படங்களில் பார்ப்பது போல, பனிப்பாறைகள் செங்குத்தாக, மகுடம் மட்டும் வெளியே தெரியும் வகையில் இயற்கை சூழலில் காட்சி அளிக்காது. மாறாக பனிப்பாறையின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் ஏதே ஒரு பகுதி 10 சதவீதம் மேலே இருக்கும், மற்ற பகுதிகள் நீருக்கடியில் இருக்கும்.

இதுவே பனிப்பாறை பின் இருக்கும் அறிவியல். இந்த அறிவியலை எளிதாக உணர்த்தும் வகையில், இந்த தளத்தில் உள்ள அனிமேஷன் கடல் அமைந்துள்ளது. இதில் பனிபாறையை நாம் எந்த வடிவில் வரைந்தாலும், அதன் தன்மைக்கேற்ப இயற்கை சூழலில் எப்படி தண்ணீரில் மிதக்குமோ, அதே வடிவில் மாற்றிக்கொள்ளும் வகையில், இதன் பின்னே உள்ள நிரல் எழுதப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் பனிப்பாறைகளை வரைந்து பார்த்துவிட்டு, அதன் பிறகு பனிபாறை படங்களை இணையத்தில் தேடிப்பார்த்து தெளிவு பெறலாம்.

*

அட அசத்தலாக இருக்கிறதே, அறிவியல் உண்மையை எளிதாக புரிய வைக்கிறதே என நினைத்தால், இந்த பனிப்பாறை அனிமேஷனை உருவாக்கிய ஜோஷ்வா டவுபெரருக்கு (Joshua Tauberer) வாழ்த்து சொல்லுங்கள். அப்படியே, ஆய்வாளர் மேகன் தாம்சனுக்கும் வாழ்த்து சொல்லுங்கள்.

மென்பொருள் வல்லுனரான ஜோஷ்வா, தரவுகளை கொண்டு பல்வேறு வகையான டிஜிட்டல் ஆக்கங்களையும், கலைப்படைப்புகளையும் உருவாக்குவதில் வல்லவர். கடல் சார் ஆய்வில் ஈடுபட்டுள்ள மேகன் தாம்சனின் குறும்பதிவு ஒன்றை பார்த்த பின் தான், ஜோஷ்வா பனிப்பாறை அறிவியலை விளக்கும் இந்த இணைய பக்கத்தை அமைக்க ஊக்கம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இளம் ஆய்வாளரான மேகன், சில ஆண்டுகளுக்கு முன், தனது டிவிட்டர் ( எக்ஸ்) பக்கத்தில் தொடர்ச்சியாக நான்கு குறும்பதிவுகளை வெளியிட்டார்.

பனிப்பாறைகளை அவற்றின் நிலையான இயற்கை தோற்றத்தில் வரையுமாறு விஞ்ஞானிகளுக்கு கோரிக்கை வைக்கவே இந்த பதிவு என குறிப்பிட்டிருந்தவர், உதாரணமாக ஒரு பனிப்பாறையை வரைந்து காட்டியிருந்தார். அடுத்த பதிவில் பனிப்பாறை அறிவியலை விளக்கியவர், செங்குத்தான பனிப்பாறை வடிவங்களையே பல இடங்களில் பார்க்க முடிந்தாலும், அவை இயற்கையில் தோன்றக்கூடிய வடிவங்களை கவனத்தில் கொள்வது அவசியம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவுகளோடு, பனிப்பாறை அறிவியலை விளக்கும் ஆய்வுக்கட்டுரைகளையும் இணைத்திருந்தார்.

அறிவியல் பூர்வமான பார்வை என்பது எல்லா மட்டங்களிலும் இருக்க வேண்டும், இதில் சமரசமே கூடாது என வலியுறுத்தும் வகையிலான இந்த குறும்பதிவுகளை பார்த்து ஊக்கம் பெற்ற ஜோஷ்வா, செயல் வடிவில் விளக்கம் அளிப்பதற்காக தனது புரோகிராமிங் ஆற்றலை பயன்படுத்தியிருக்கிறார்.

A fun website with a scientific purpose – அறிவியல் பேசும் பனிக்கட்டி ’வெப்சைட்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *