இருத்தலியல் தத்துவம் சொல்லும் வலை 2.0 கார்ட்டூன்

இணையத்தின் பங்கேற்பு தன்மையை குறிக்கும் வலை 2.0 கருத்தாக்கத்திற்கு பலவிதமான விளக்கங்கள் இருக்கின்றன. தட்டையான தன்மை கொண்ட முதல் தலைமுறை இணையதளங்களில் இருந்து வேறுபட்ட துடிப்பான தன்மை கொண்ட இரண்டாம் தலைமுறை இணையதளங்களை வலை 2.0 உணர்த்துவதாக கருதப்படுகிறது.

வலை 2.0 சமூக ஊடகங்களின் எழுச்சியையும் உள்ளடக்கியது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக வலை 2.0 சர்ச்சைக்குறியது இல்லை என்றாலும் தீவிர விவாதத்திற்கு உரியது.

இப்போது மூன்றாம் தலைமுறை தளங்களின் காலம் என சொல்லப்படும் நிலையில், வலை 2.0 கருத்தாக்கத்தை தொழில்நுட்ப நோக்கில் மட்டும் அணுகுவதற்கில்லை.

இந்த பின்னணியில் ,வலை 2.0 நிகழ்வு தொடர்பான கார்ட்டூன் ஒன்று, இந்த கருத்தாக்கத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றிருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

கே.ஏ.போல்சின் எனும் கார்ட்டூனிஸ்ட் வரைந்த அந்த கார்ட்டூன், கல்லரைகள் கொண்ட இடுகாட்டை குறிக்கிறது. அதில் ஒரு கல்லறையில் இருப்பு 2.0 எனும் வாசகம் எழுதப்பட்டுள்ளது. படித்தவுடன் புன்னகைக்க வைக்கும் இந்த வாசகம், இரண்டாம் வலையை இருத்தலியலுடன் தொடர்பு படுத்தி சிந்திக்க வைக்கிறது.

பொதுவாக, 2.0 என்பது மென்பொருள் உலகில் இரண்டாம் வடிவத்தை குறிக்கிறது. அதனடிப்படையில் தான் இரண்டாம் தலைமுறை தளங்கள் வலை 2.0 என அழைக்கப்படுகிறது. எனில், மனிதர்கள் இறப்புக்கு பிந்தைய நிலையை குறிக்கும் வகையில் கல்லறையில், இருப்பு 2.0 என குறிப்பிடும் வகையிலான இந்த கார்ட்டூன், தொழில்நுட்பத்துடன் தத்துவத்தையும் இணைத்து வியக்க வைக்கிறது அல்லவா!

வலை 2.0 கருத்தாக்கத்தை புரிந்து கொள்ள இணையத்தையும், வலையையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வீடியோ விளக்கம் உதவியாக இருக்கும்:

வலை 2.0 தொடர்பான விளக்கம்: முதல் வலையும், மூன்றாம் வலையும்- ஒரு கையேடு

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *