தமிழில் இப்படி ஒரு இணையதளம் இல்லையே என்று நினைக்க வைக்க கூடியதாக அல்லது தமிழில் இப்படி ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்? என சில இணையதளங்கள் நினைக்க வைக்கும்.
’டீச் வித் மூவிஸ்.ஆர்க்’ (https://teachwithmovies.org/) தளம் இப்படி தான் நினைக்க வைக்கிறது.
திரைப்படங்கள் தொடர்பாக பலவிதமான இணையதளங்கள் இருக்கின்றன. இவற்றில் பரவலாக நன்கறியப்பட்ட திரைப்பட களஞ்சியமான ’ஐஎம்டிபி’ துவங்கி, திரைப்படசெய்தி தளங்கள், ’ராட்டன் டமேடோஸ்’ போன்ற விமர்சன தளங்கள் என எண்ணற்றவை இருக்கின்றன.
ஆனால், நாம் பார்க்க இருக்கும் இந்த தளம் மிகவும் வேறுபட்டது.
பெயரில் இருந்து புரிந்து கொள்ளக்கூடியது போலவே இந்த தளம், திரைப்படங்களை கொண்டு பாடம் நடத்த வழிகாட்டுகிறது. அந்த வகையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக அமைகிறது. அதோடு மற்றவர்களையும் ஈர்க்க கூடியதாகவே இருக்கிறது.
திரைப்படங்களை கலையாக அணுகலாம். பொழுதுபோக்காக அணுகலாம். கற்றுத்தரும் கருவியாகவும் அணுகலாம் என்று உணர்த்துவதோடு அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது இந்த தளம்.
வகுப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பலவிதமான உத்திகளை கையாள வேண்டும். கதை வடிவம் அவற்றில் பிரபலமானது. இன்னும் சில நேரங்களில் இசை, காட்சி விளக்கம் போன்றவற்றையும் ஆசிரியர்கள் பயன்படுத்துவதுண்டு.
டிஜிட்டல் யுகத்தில் வகுப்பறையில் கற்றலை மேலும் ஆர்வம் கொள்ள வைப்பதற்காக என்றே இணைய சேவைகளும் பல இருக்கின்றன.
இவ்வளவு ஏன், திரைப்படங்களும் கூட மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்கான கருவியாக அமையும். (நல்லத்திரைப்படங்கள்).
சில திரைப்படங்கள் ஊக்கம் அளிக்கும் வகையில் அமையலாம். வரலாற்று நோக்கிலான அல்லது வாழ்க்கை வரலாறு சார்ந்த படங்கள் வரலாற்றில் ஆர்வம் கொள்ள வைக்கலாம். சமூக அக்கறை சார்ந்த படங்கள், பெண் விடுதலை போற்றும் படங்கள், போராட்ட குணத்தை அளிக்கும் படங்கள் என அடுக்கி கொண்டே போகலாம்.
இத்தகைய திரைப்படங்களை கொண்டு மாணவர்களுக்கும் சமூகம் சார்ந்த விஷயங்களை எளிதாக உணர்த்தலாம். திரைப்படம் மூலம் கற்பதை மாணவர்களும் விரும்புவர்கள் என்பதோடு, பாடப்புத்தகங்களை கடந்த வாழ்க்கை விஷயங்களை அவர்களுக்கு கற்றுத்தரவும் இந்த வழி ஏற்றதாக இருக்கும்.
ஆனால், எந்த திரைப்படங்களை தேர்வு செய்வது? அவற்றை கொண்டு எப்படி கற்றுத்தருவது? இதற்கெல்லாம் வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது டீச்வித்மூவிஸ்.
லைட், காமிரா, ஆக்ஷன் என்பது போல, இந்த தளம், லைட், காமிரா, லேர்ன் என்கிறது.
ஒரு திரைப்படத்தை விமர்சன நோக்கில் ஆக்கு வேறு ஆணி வேறாக அலசுவதுபோல, இந்த தளம், ஒரு திரைப்படத்தை கொண்டு மாணவர்களுக்கு என்ன எல்லாம் கற்றுத்தரலாம் என்பதை விரிவாக விளக்குகிறது.
திரைப்படம் எது தொடர்பானது, என்ன கற்றுத்தரக்கூடியது, எந்த வயது மாணவர்களுக்கு ஏற்றது போன்ற தகவல்களைம் சுருக்கமாக முன்வைத்து விட்டு, அதன் பிறகு அந்த படம் மாணவர்களுக்கு அளிக்க கூடிய பலன்கள், படத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்,பெற்றோர் நோக்கில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், சமூக மற்றும் தார்மீக கற்றல் அம்சங்கள் உள்ளிட்டவை தனித்தனி துணை தலைப்புகளில் இடம்பெறுகின்றன.
இவைத்தவிர படம் தொடர்பான உரையாடலுக்கான கேள்விகள், வீட்டுப்பாடங்களுக்கான குறிப்புகள், மேலும் வாசிப்பதற்கான வளங்கள் மற்றும் இணைய இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆக, திரைப்படத்தை கொண்டு பாடம் நடத்த தேவையான விரிவான பாடத்திட்டமாக இந்த வழிகாட்டுதல் அமைகிறது.
உதாரணமாக, கொரில்லாஸ் இன் தி மிஸ்ட் (GORILLAS IN THE MIST ) திரைப்படம், அறிவியல், சுற்றுச்சூழல் வகையைச் சேர்ந்தது, வன விலங்கு பாதுகாப்பின் அவசியம், துணிவு, மனித உரிமைகள் ஆகியவற்றை உணர்த்தும் படம் எனும் சுருக்கமான அறிமுகத்தோடு, படம் தொடர்பான வழிகாட்டுதல்கள் வெகு விரிவாக இடம்பெற்றுள்ளன.
இந்த தளத்தின் ஆகச்சிறந்த படங்கள்+ பாடம் பட்டியலில் இந்த படம் இடம்பெறுகிறது. மேலும் பல திரைப்பட வழிகாட்டிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. திரைப்படங்களை அவற்றின் ரகங்களுக்கு ஏற்ப தேடலாம்.
கட்டுரைகளும் தனியே இடம் பெற்றுள்ளன.
இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள பாடங்கள் எல்லாமே ஹாலிவுட் படங்கள் சார்ந்தவை. எனவே தமிழிலும் இதே போன்ற தளம் தேவை எனும் தோன்றுவதை உணரலாம்.
இப்போது பராசக்தி பற்றி ஏன் தலைப்பில் வருகிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். மொழி போராட்டத்தை அடிப்படையாக இந்த படம், தாய் மொழியின் முக்கியத்துவத்தையும், மொழி உரிமையின் அருமையையும் உணர்த்தும் கதையம்சம் கொண்டது என்பதால், மொழி மற்றும் மொழி போராட்டம் தொடர்பான பல விஷயங்களை கற்றுத்தர இந்த படத்தை பயன்படுத்தலாம்.
பராசக்தி படமும், மொழி உணர்வும், திரைப்பாடம் நடத்தும் இணையதளமும்!
–