பயனாளிகளை பின் தொடராமல் அவர்கள் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிப்பதாக சொல்லும் மோஜீக் தேடியந்திரத்தை நீங்கள் அவசியம் பயன்படுத்திப்பார்க்க வேண்டும். மோஜீக்கை மகத்தான தேடியந்திரம் என்று சொல்ல முடியாவிட்டாலும், கவனிக்க வேண்டிய மாற்று தேடியந்திரம். அந்த காரணத்தினாலேயே பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.
மோஜீக்கின் தேடல் முடிவுகள் கூகுளில் இருந்து வேறுபட்டிருக்கிறது. இந்த வேறுபாடு எந்த அளவு பயனுள்ளது என்பது ஒரு பக்கம் இருக்க, சில நேரங்களில் மாற்று தேடியந்திரங்களை பயன்படுத்தி பார்ப்பது அவசியம். அதிலும் குறிப்பாக ஒப்பீடு தேவைப்படும் சூழல்களில் கூகுளோடு நின்றுவிடாமல் மாற்று தேடியந்திரங்களை முயன்று பார்க்க வேண்டும்.
நிற்க அண்மையில் மோஜீக்கை பயன்படுத்திப் பார்த்த போது தனிப்பட்ட முறையில் மெல்லிய ஆச்சர்யத்தை அளித்தது.
மோஜீக்கில் தேடல் முடிவுகள் எப்படி அமைகின்றன என பார்த்துக்கொண்டிருந்த போது, வழக்கமாக செய்வது போல, சைபர்சிம்மன் என சுய தேடலில் ஈடுபட்டு பார்த்தேன். சைபர்சிம்மன் தேடலுக்கு கூகுளுக்கு முன் வைக்கும் தேடல் பட்டியலில் இருந்து மாறுபட்டிருந்ததோடு, குறைந்த பக்கங்களை மட்டுமே கொண்டிருந்தது என்றாலும், முற்றிலும் மாறுபட்ட முடிவுகளை முன்னிறுத்தியது.
ஆச்சர்யப்படும் வகையில், முதல் முடிவாக எனது அண்மை புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஜீரோ டிகிரி பதிப்பக இணையதளத்தை, ’இணைய பெண்கள்’ புத்தகம் தொடர்பான குறிப்புடன் முன் வைத்தது.
என் சொந்த தளத்தை கூட முன்னிறுத்தாமல், என் புத்தகங்களை வெளியிடும் ஜீரோ டிகிரி பதிப்பக்கத்தின் இணைய பக்கத்தை முன் வைத்தது எனக்கு வியப்பு மட்டும் அல்ல மகிழ்ச்சி தான்.
ஆக, நீங்களும் கூட மோஜீக் உள்ளிட்ட மாற்று தேடியந்திரங்களில் அவ்வப்போது தேடிப்பாருங்கள். அது கண் திறப்பாகவும் அமையும். கூகுளில் கூட தேடுவதில்லை, சாட்ஜிபிடி தான் என்பவர்கள் என் சாட்ஜிபிடி சரிதம் புத்தகத்தை வாசிக்கவும்.
–
கூகுளுக்கு மாற்று தேடலை எப்போது நாட வேண்டும்?