ஒரு மீம் தேடல் உணர்த்திய ஏஐ நுட்பத்தின் போதமை!

பெரிய தவறு இல்லை, சிறு தவறு தான். ஆனால் ஏஐ தொடர்பாக சிந்திக்க செய்யக்கூடியது.

ஒரு மீம் தேடலில் இருந்து தான் இதற்கான பயணம் துவங்கியது.

ஏஐ நுட்பத்தை புரிந்து கொள்ள மீம்கள் எந்த வகையில் உதவியாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காக, ‘ மீம்கள் மூலம் ஏஐ கற்றுக்கொள்ளுதல்’ என தேடிப்பார்த்த போது, ஏஐ தொடர்பான சிறந்த மீம்களின் பட்டியல் வந்து நின்றது. ( இதுவே ஒரு ஏஐ தோல்வி தான்).

அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான மீம்கள் ஏஐ நுட்பத்தை ஏதோ ஒரு கோணத்தில் சிறப்பாக படம் பிடித்து காட்டுவதாக அமைந்திருந்த நிலையில், ஏஐ நுட்பத்தின் வளர்ச்சி, மனித தன்மை என்றால் என்ன என தத்துவவாதிகளை கேட்க வைத்திருக்கிறது எனும் குறிப்புடன் முன் வைக்கப்பட்ட, வரி வடிவ மீம் கவனத்தை ஈர்த்தது.

வரி வடிவ மீம்

மற்ற மீம்கள் எல்லாம் படம் மற்றும் வரிகளோடு கவர்ந்திழுக்க, வெறும் எழுத்து வடிவிலான இந்த மீம் கவனத்தை ஈர்க்க காரணமாக அமைந்தது, அதன் உள்ளடக்கம் தான்:

” அன்பு காட்டும் நம்முடைய ஆற்றல் தான் நம்மை மனிதர்கள் ஆக்குகிறது என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், படகு கொண்டிருக்கும் ஒவ்வொரு படத்தையும் கண்டறியும் திறமையாகவே அது அமைகிறது என தெரிய வருகிறது”.

படகு கொண்டிருக்கும் படம் தொடர்பான சொற்கள் மட்டும் தடித்த எழுத்துகளில் இடம்பெறும் இந்த வாசகங்கள், உடனடியாக புன்னகைக்க வைத்து, கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கிறது அல்லவா?

மீம் இலக்கணம்

ஒரு வெற்றிகரமான மீமுக்கான எல்லா முக்கிய அம்சமும் இதில் இருக்கிறது!

கேலி கலந்த நகைச்சுவையுடன், இணையத்தில் நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் கேப்ட்சா புதிர்களை தான் இந்த மீம் குறிப்பிடுகிறது.

கேப்ட்சா புதிர்கள் உண்மையில், இணையத்தில் பாட்களை கண்டறிந்து தடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்றாலும், ”நீங்கள் மனிதர் தானா?’ என கேட்கும் வகையில் அமைந்திருப்பதும், பயனாளிகள் இந்த புதிர்களை விடுவித்து தாங்கள் மனிதர் எனும் அங்கீகாரம் பெறும் வகையில் அமைந்திருப்பதும், அதிருப்தியை மட்டும் அல்ல, விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதோடு நம் காலத்திற்கான இருத்தலியில் கேள்விகளையும் எழுப்புகிறது.

இணையத்தில் பாட்கள் அதிகரிக்கும் நிலையில் ( வாழ்க, இறந்த இணைய கோட்பாடு ), பயனாளிகளை மனிதர்கள் தான் என உறுதி செய்து கொள்வது அவசியமாகிறது. ஆனால் இதற்காக மனிதர்களுக்கு சோதனை வைத்தால் எப்படி? ( உண்மையில் கேப்ட்சா பாட்களுக்கான சோதனை. அவற்றால் கேப்ட்சா புதிர்களை விடுவிக்க முடியாது என கருதப்படுகிறது.)

மனித சந்தேகம்

இந்த கேள்விகளை எல்லாம், இந்த ஏஐ மீம் அழகாக சுட்டிக்காட்டி, மனித தன்மை என்றால் கேப்ட்சா புதிரை விடுப்பது தான் போல, என படகு படம் கண்டுபிடிக்கும் ஆற்றலை குறிப்பிட்டு கேலி செய்கிறது.

ஏஐ திறன்கள் வியப்பையும், மனித குல எதிர்காலம் தொடர்பான கேள்விகளையும் எழுப்பி வரும் நிலையிம், மனித தன்மையின் ஆதார அம்சங்கள் தொடர்பான மைய கேள்விகள் முன்னிலை பெற்று வருவதையும், உளவியலும், தத்துவமும் முக்கியத்துவதும் பெறுவதையும் இந்த மீம் உணர்த்துகிறது.

இந்த மீம் பற்றி இன்னும் பேசிக்கொண்டே போகலாம்.

ஏஐ கால தன்மையை கச்சிதமாக படம் பிடித்துக் காட்டும் இந்த மீமை உருவாக்கியவர் தொடர்பாக மேலும் அறிவதற்காக, அதை பகிர்ந்து கொண்டிருந்த kendra fortmeyer பற்றி தேடிப்பார்த்த போது, அவர் ஒரு தொழில்முறை பத்திரிகையாளர், எழுத்தாளர் என தெரிய வந்தது.

ஏஐ மீம் எழுத்தாளர்

ஏஐ மற்றும் மீம்கள் இணைப்பு புள்ளி பற்றி அவர் மேலும் எழுதியிருக்கிறாரா? என தேடிய போது, (kendra fortmeyer+meme+AI ), இந்த பேஸ்புக் பக்கம் கண்ணில் பட்டது.

இதே மீமை பகிர்ந்து கொண்டிருந்த ஒரு பேஸ்புக் பக்கமும், அதன் கீழ் ’ஏன் பதிவுகளில் ஏன் திடிரென ஏஐ எட்டிப்பார்க்கிறது’, எனும் கேள்வி கொண்ட இன்னொரு பேஸ்புக் பக்கத்தையும் பார்க்க முடிந்தது.

இந்த இரண்டு பக்கங்களுக்கும் சென்று பார்த்த போது, ஏஐ நுட்பத்தை நினைத்து புன்னகை உண்டானது. ( ஏஐ புகழ்பாடுபவர்களையும் நினைத்து தான்.)

ஏஐ மீமை, ஜே.ஓ.எஸ்.எஸ் ( ) எனும் பேஸ்புக் பக்கம் பகிர்ந்திருந்தது. இந்த பக்கத்தில் ஏஐ தொடர்பான இன்னொரு அருமையான மீமும் பகிரப்பட்டிருந்தது.

ஏஐ கடற்கரை

இரண்டாவது பக்கத்தில் தான், ஏஐ தொடர்பான கேள்வி இடம்பெற்றிருந்தது.

அந்த பேஸ்புக் பக்கத்தின் பெயரை பார்த்த போது தான் விஷயம் புரிந்தது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள போர்ட் மெயர்ஸ் பீச் கடற்கரைக்கான பக்கம் அது. (https://www.facebook.com/groups/ilovefortmyersbeach/posts/9206234252830732/)

போர்ட் மெயர்ஸ் கடற்கரையை விரும்புகிறேன் என பொருள் கொண்ட பக்கம்.

மேலே பார்த்த ஏஐ மீமை உருவாக்கியவர் பெயர்: kendra fortmeyer

இவரது பெயர் தான், கடற்கரைக்கான பெயராகவும் இருப்பதாலும், இவர் உருவாக்கிய ஏஐ மீம் பகிரப்பட்டதாலும், இந்த பக்கத்தில் உள்ள பதிவுகளில் பேஸ்புக் அல்கோரிதம் ஏஐ தொடர்பான பதிவுகளை காண்பித்திருக்கிறது. கடற்கரைக்கும், ஏஐக்கும் என்ன தொடர்பு என்று புரியாமல் தான், அந்த பக்கத்தில் திடிரென ஏஐ குறிப்புகள் தோன்ற என்ன காரணம் என கேட்கப்பட்டிருந்தது. இதற்கான பதில் அதன் பின்னூட்டங்களில் காணப்படவில்லை.  ( ஏஐ சுருக்கமாக இந்த கேள்வி இந்த பதிவுக்கு மேலும் இடம் பெற்றிருந்தது).

அல்கோரிதம் பிழை

ஏஐ திறன் கொண்ட பேஸ்புக் அல்கோரிதம் புத்திசாலித்தனமானது, பல நேரங்களில் ஊடுருவும் தன்மை கொண்டது, சில நேரங்களில் கோட்டைவிடவும் செய்யும். இப்படி தான், கேண்டார் போர்ட்மேயர் ஏஐ மீமையும், போர்ட் மேயர்ஸ் கடற்கரையையும் குழப்பிக்கொண்டு ஏஐ பரிந்துரை செய்திருக்கிறது. பயனாளிகளும் இது புரியாமல் குழம்பித்தவித்திருக்கின்றனர்.

இது போல, ஏஐ கோட்டை விட்டு தவறாக வழங்கிய பரிந்துரைகள் பெரிய அளவில் வில்லங்கமாகி கவனத்தை ஈர்த்த நிகழ்வுகளும் உண்டு. ஆனால், இந்த சிறு பிழை கண்டறியப்படவும் இல்லை, கவனத்தை ஈர்க்கவும் இல்லை. ஏஐ மீம்கள் தேடிய போது தற்செயலாக தெரிய வந்தது.

விஷயம் அது தான், மீமுக்கான இந்த தேடலைப் போல, இணைய தேடலில் பல சின்ன சின்ன அற்புதங்களும், கண்டறிதலும் நிகழும். அவற்றுக்கு கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும். மாறாக, எல்லா கேள்விகளுக்கும் சாட்பாட்கள் நேரடி பதில் சொல்லிவிடும் எனும் நம்பிக்கையில் சாட்ஜிபிடி அல்லது ஜெமினியிடம் கேட்டுக்கொண்டிருந்தால் அவற்றின் பதில்கள் பிழையாக இருக்கலாம் என்பது மட்டும் அல்ல, இணைய தேடல் பயணத்தையும், அதன் மூலம் கிடைக்கும் புரிதலையும் தவற விட நேரும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *