உங்கள் அம்மாவும் எளிதாக இயக்க கூடிய ஏஐ ஏஜெண்ட் சேவை: பெர்ப்லக்சிட்டி அறிமுகம் !

ஏஐ பதில் இயந்திரம் என வர்ணிக்கப்படும் பெர்ப்லக்சிட்டி, ’கம்ப்யூட்டர்’  (perplexity-computer) எனும் புதிய சேவையை அறிமுகம் செய்து கவனத்தை ஈர்த்துள்ளது.

கிளாடு கோடு, கோடெக்ஸ், ஓபன் கிளா வரிசையில் இதுவும் ஒரு ஏஜெண்டிக் ஏஐ சார்ந்த சேவை. முதல் கட்டமாக இதன் மேக்ஸ் சந்தாதாரர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு அடுத்த கட்டமாக புரோ மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு விரிவாக்கப்பட உள்ளது.

  •  

பெப்லக்சிட்டியின் இந்த ஏஐ ஏஜெண்ட் சேவை பலவிதங்களில் முக்கியமாக அமைகிறது:

  • கிளவுட் வசதி: முதல் அம்சம், இது பயன்படுத்த எளிதானது. ஓபன் கிளா போன்ற சேவையை பயன்படுத்த தனியே பிரத்யேக கம்ப்யூட்டர் தேவை மற்றும், அதில் உள்ள கோப்புகளுக்கு அணுகல் வசதி கொடுக்க வேண்டும். மாறாக, இந்த சேவை கிளவுட்டில் இயங்குவது. எனவே பயனாளிகள் தங்கள் பணிகளை ஏஜெண்ட்களிடம் துணிந்து (!) ஒப்படைக்கலாம்.
  • பயனாளிகள் இதனிடம், எழுதுவது, ஆய்வு செய்வது போன்ற பணிகளை செய்ய கட்டளையிடலாம். மணிக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் இவற்றை ஏஜெண்ட் செய்து முடிக்கும்.
  •  
  • கிளாடு, ஜெமினி… : இந்த சேவை குறிப்பிட்ட ஒரு ஏஐ மாதிரியை சார்ந்திராமல் பல ஏஐ மாதிரிகளை அடிப்படையாக கொண்டது. பயனாளிகள் தங்கள் விருப்பம், பணிகளுக்கு ஏற்ற ஏஐ மாதிரிகளை ( கிளாடு, ஜெமினி..) தேர்வு செய்யலாம்.
  • எளிது, மிக எளிது: உங்கள் அம்மா கூட ஏஐ ஏஜெண்டிடம் பணியை ஒப்படைத்து செய்து முடிக்க கட்டளை இட வழி செய்யும் வகையில் இந்த சேவை எளிதானது என பெர்ப்லக்சிட்டி நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.
  • ஏற்கனவே இந்நிறுவனம் காமெட் எனும் பெயரில் ஏஜெண்டிக் திறன் கொண்ட ஏஐ பிரவுசரை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • பெர்ப்லக்சிட்டி கம்ப்யூட்டர் சேவை பற்றி மேலும் அறிய: https://www.perplexity.ai/hub/blog/introducing-perplexity-computer

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *