இந்தியா இப்போது சாட்ஜிபிடி தேசம். இதற்கு முன் கூகுள் நாடு. அதாவது, சாட்ஜிபிடிக்கான அதிக பயனாளிகளை கொண்ட நாடு. அதன் இரண்டாவது பெரிய சந்தை என்றும் சொல்கின்றனர்.
போட்டி சேவைகளான, கிளாடு, ஜெமினி உள்ளிட்ட சாட்பாட்களை பயன்படுத்துபவர்கள் அநேகம் உண்டென்றாலும், சாட்ஜிபிடி தான் பெரும்பாலான இந்தியர்களின் முதன்மைத் தேர்வு. அதோடு, சாட்ஜிபிடி மீது தனி ஈடுபாடும் நம்பிக்கையும் இருப்பதாக கொள்ளலாம்.
இந்தியர்கள் சாட்ஜிபிடியை அத்தனை எளிதில் சந்தேகிக்கவோ, கேள்வி கேட்கவோ செய்யமாட்டார்கள் என்று தோன்றுகிறது.
ஆனால், அதன் முதன்மை சந்தையான அமெரிக்காவில் அப்படி இல்லை, அங்கு சாட்ஜிபிடி மீது பலரும் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் சாட்ஜிபிடியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அதோடு, இன்னும் பலரையும் சாட்ஜிபிடியில் இருந்து விலகுங்கள் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக என்றே, குவிட்ஜிபிடி எனும் பெயரில் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தளம், சாட்ஜிபிடியை விட்டு விலகுவதற்கான காரணங்களை வலியுறுத்துவதோடு, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளது. இதன் விளைவாக 2.5 மில்லியன் பயனாளிகள் சாட்ஜிபிடிக்கு குட்பை சொல்லியிருப்பதாகவும் அந்த தளம் தெரிவிக்கிறது.
இதனிடையே, அமெரிக்காவில் ஓபன் ஏஐ அலுவலகம் எதிரிலேயே அதற்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கிறது. இணைய மொழியில் சொல்வது என்றால், சாட்ஜிபிடிஐ கேன்சல் செய்ய முயற்சிக்கின்றனர்.
இதை எல்லாம் வைத்துக்கொண்டு, அவ்வளவு தான் சாட்ஜிபிடி கதை முடிந்தது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது என்றாலும், அந்நிறுவனம் மீது பரவலான அதிருப்தியும், வலுவான எதிர்ப்பும் இருக்கிறது என்பது நிஜம்.
ஏன் இந்த வெறுப்பும், எதிர்ப்பும் என்றால், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஆதரவான அரசியல் நடவடிக்கை குழுவுக்கு, சாட்ஜிபிடி தாய் நிறுவனம் ஓபன் ஏஐ தலைவர் நிதி அளித்தது மற்றும், அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசி.இ விவகாரத்தில் குடியேறியவர்களை கண்காணித்து அறிவதற்கான தேடலில் ஓபன் ஏஐ நுட்பம் பயன்படுத்தப்பட்டதும் என அறிய முடிகிறது. இது தொடர்பான குவிட்ஜிபிடி தளம் விரிவான விளக்கம் அளிக்கிறது.
இந்த காரணங்களினால், டிரம்பின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு துணை போக ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு நாம் நிதி அளிக்க வேண்டுமா எனும் கேள்வியோடு பலரும் தன்னிச்சையாக துவக்கிய மையமில்லா இயக்கமாக குவிட்ஜிபிடி அமைந்துள்ளது.
இதனிடையே, ஏஐ பாதுகாப்பு தொடர்பான சர்ச்சையும், அதிருப்திக்கு வலு சேர்த்துள்ளது. ஏஐ பாதுகாப்பு தொடர்பான சர்ச்சையில்முன்னணி ஏஐ நிறுவனம் ஆந்த்ரோபிக், அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை ஒப்பந்தமே வேண்டாம் என தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவிட்டது.
எதிர்பாராத தவறான பயன்பாட்டிற்கு எதிரான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இல்லாமல் தனது ஏஐ மாதிரி கிளாடை அமெரிக்க ராணுவ பயன்பாட்டிற்கு தர முடியாது என ஆன்ந்த்ரோபிக் துணிந்து கூறிவிட்டது. ஏற்கனவே ஏஐ பாதுகாப்பை முக்கிய கோட்பாடாக கொண்ட நிறுவனம் என்பதால், இந்த விவகாரத்தில் அதன் உறுதிய அமெரிக்கர்கள் பாராட்டுகின்றனர்.
இதே விவகாரத்தில் சாட்ஜிபிடியின் ஓபன் ஏஐ நிறுவனம், இதே உறுதியை வெளிப்படுத்தாமல் சமரசம் செய்து கொண்டு, அமெரிக்க ராணுவ பயன்பாட்டிற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்தவர்கள், வேண்டாம் சாட்ஜிபிடி என சொல்லத்துவங்கியுள்ளனர்.
ஆந்த்ரோபிக்கும் தன் பங்கிற்கு, கிளாடு மெமரி சேவையை இலவசமாக வழங்குவதாக, சாட்ஜிபிடியில் இருந்து வெளியேறுபவர்களை வரவேற்கும் வகையில் அழைத்துள்ளது. சாட்ஜிபிடி சாட் வரலாற்றையும் அவர்கள் உடன் கொண்டு வர இந்த ஏற்பாடு.
அது மட்டும் அல்ல, ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் நிலைப்பாடு தொடர்பாக ஆந்த்ரோபிக் நிறுவனர் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்துள்ளார்.
இன்னொரு தகவல் படி பார்த்தால், ஆந்த்ரோபிக் விவகாரத்தில் சாம் ஆல்ட்மெனின் வியூக நகர்வு இருக்கலாம் என்பது போல பேசுகின்றனர். ஆக, இந்த பிரச்சனை ஏஐ பாதுகாப்பை மையமாக கொண்டது என்றாலும், இதன் பின், இரு ஏஐ நிறுவனங்களின் போட்டி இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த விவகாரத்தை இது இன்னமும் தீவிரமாக்குகிறது.
வருங்காலத்தில் இன்னும் பல திசைகளில் இது வளரலாம். ஏஐ பாதுகாப்பு தொடர்பான கேள்விகளும் இன்னும் தீவிரமாகலாம்.
அமெரிக்கா மட்டும் அல்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த எதிர்ப்பு பரவியிருக்கிறது. முக்கிய வல்லுனரான ரோட்ஜர் என்பவர் இந்த விவகாரம் தொடர்பாக தனியே கட்டுரைகள் எழுதி பொது தலையங்கமாக வெளியிட்டிருக்கிறார்.
இன்னும் கவனிக்க வேண்டிய பல் அமசங்கள் இருக்கின்றன.
–
சாட்ஜிபிடிக்கு எதிராக போர்க்கொடி ஏன் என விளக்கும் வீடியோ.
—