கோடை விடுமுறை என்றதும் சுற்றுலா பயணம் தான் கட்டாயம் நினைவுக்கு வரும். சுற்றுலா பயணம் எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அதில் நிச்சயம் விலங்கியல் பூங்காக்களும் ,வனவிலங்கு சரணாலயங்களும் தவறாமல் இடம்பெற்றிருக்கும். வனவிலங்கு பூங்கா என்றவுடன் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா வனவிலங்கு பூங்கா நினைவுக்கு வரலாம் . சரணாலயம் என்றவுடன் முதுமலை புலிகள் சரணாலயத்தில் துவங்கி தமிழகத்திலும், இந்தியா முழுவதும் உள்ள பல புகழ்பெற்ற சராணலயங்கள் நினைவுக்கு வரலாம். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் புகழ்பெற்ற வனவிலங்கு சரணாலயயங்களும் வனவிலங்கு பூங்காக்களும் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இத்தகைய வனவிலங்கு சரணாலயங்களுக்கு எல்லாம் ஜாலியாக ஒரு விசிட் அடிக்க முடிந்தால் எப்படி இருக்கும் ? இதற்காக அந்த நாடுகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை. இங்கிருந்தபடியே உலகில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களை எல்லாம் வெப்கேம் மூலம் பார்த்து ரசிக்கலாம் தெரியுமா? என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால் , இருந்த இடத்தில் இருந்தபடியே வெப்கேமிரா மூலமாக ஆப்பிரிக்காவிலும், ஆசிய நாடுகளிலும் உள்ள வனவிலங்கு சரணாலய விலங்குகளை பார்த்து ரசிக்கலாம்.
இதற்காக முதலில் வைல்டுஎர்த் ( http://lite.wildearth.tv/) இணையதளத்திற்கு செல்வோம் வாருங்கள். இந்த தளத்தில் நுழைந்ததுமே அதன் முகப்பு பக்கத்தில் விலங்குகளின் புகைப்படங்கள் கட்டம் கட்டமாக இருப்பதை பார்க்கலாம். ஒவ்வொரு படமும் ஒரு வனவிலங்கு வெப்கேமிற்கானது. மான்கள், கழுகுகள், யானைகள் என வரிசையாக இருக்கும் இந்த படங்களில் உங்களுக்கு விருப்பாமான விலங்கை கிளிக் செய்தால் போதும், நேராக அந்த விலங்கு உலாவிக்கொண்டிருக்கும் சரணாலயத்திற்கு போய்விடலாம். இதற்கென வந்து நிற்கும் இணைய பக்கத்தில் சராணலயத்தின் காட்சிகளை வெப்கேம் வழியே பார்க்கலாம். நேரடி காட்சிகளையும் பார்க்கலாம் ,இல்லை என்றால் பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் பார்க்கலாம். அதே பக்கத்திலேயே அந்த வெப்கேம் அமைந்துள்ள இடம் மற்றும் அதில் காட்சி தரும் விலங்கு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளாலாம். இந்த பக்கத்தில் இருந்தே சக வனவிலங்கு ஆர்வலர்களோடு பேஸ்புக் வழியாக அரட்டையிலும் ஈடுபடலாம்.
அமெரிக்காவின் பெனிசல்வேனியாவில் உள்ள மான்கள் துவங்கி ருமேரியாவின் காரனியில் உள்ள நாரைகள், தென்னாப்பிரிக்க யானைகள் ,கனடாவில் உள்ள வெள்ளை கழுகுகள் என பலவகையான வனவிலங்குகளை வெப்கேமில் பார்த்து ரசிக்கலாம். தென்னாப்பிரிக்காவில் பார்க்க கூடிய பென்குவின் பறவைகளையும் வெப்கேம் வழியே கண்டு களிக்கலாம்.
உண்மையில் இந்த இணையதளம் வைல்டுஎர்த்.டிவி தளத்தின் (http://www.wildearth.tv/ ) பேக் அப்பாக அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளை வெம்கேம் மற்றும் வீடியோ காட்சிகளாக வழங்கும் இணைய டிவியாக வைல்டுஎர்த தளம் விளங்குகிறது. இந்த தளத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் வெப்கேம் காட்சிகளை பேக் அப் தளத்தில் பார்த்துக்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் நேரடியாக இந்த தளத்திற்கே சென்று வனவிலங்கு கேமிரா காட்சிகளை பார்க்கலாம். முகப்பு பக்கத்தில் பிரபலமான வெம்ப்கேம்கள் மற்றும் நேரடி காட்சி தரும் வெப்கேம்களின் பட்டியல் இருக்கிறது.
என்ன வனவிலங்குகளை பார்த்து ரசிக்கும் ஆர்வம் வந்துவிட்டதா? அடுத்ததாக ஆர்கிவ் (http://www.arkive.org/ ) இணையதளத்திற்கு செல்லலாம் வாருங்கள். வைல்டுஸ்கிரீன் எனும் வனவிலங்கு நலனுக்கான தன்னார்வ அமைப்பால் நடத்தப்படும் இந்த தளத்தில் உலக வனவிலங்கு தொடர