உங்களுக்கு ஹேக்கிங் செய்யத்தெரியாவிட்டால் என்ன? நீங்கள் விரும்பினால் ஒரு இணையதளத்தின் தோற்றத்தை மாற்றலாம் தெரியுமா? அந்த இணையதளத்தின் தலைப்பை திருத்தலாம் . புகைப்படங்களை மாற்றலாம். – ஷர்ட்யுஆரெல் ( http://shrturl.co/) இணையதளம் இவை எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது .
அடிப்படையில் இந்த இணையதளம் எந்த ஒரு இணையதளத்தின் போலி வடிவத்தையும் உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. எப்படி ? நீங்கள் மாற்ற விரும்பும் தளத்தின் இணைய முகவரியை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு சமர்பிக்கப்பட்ட இணையதளத்தின் நகல் தோற்றத்தை இது உருவாக்கித்தருகிறது. இந்த நகல் தோற்ற தளம் திருத்தங்களை செய்யக்கூடியது. ஆக, அதில் உள்ள தலைப்புகளையோ ,புகைப்படங்களையோ நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
திருத்தங்களை செய்த பின், மாறிய தோற்றத்தின் இணைய முகவரியை பெற்று நண்பர்களுடன் பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். தளத்தின் தோற்றத்தை பார்த்தால் பார்த்து பழகிய பிரபலமான தளம் போல இருக்கும். ஆனால் அதன் உள்ளடக்கமோ மாறி இருக்கும்.
பொதுவாக ஒரு இணையதளத்தின் உள்ளே அத்துமீறி உள்ளே நுழைந்து அதன் உள்ளடக்கத்தை மாற்றுவது ‘டிஃபேசிங்’ என்று சொல்லப்படுக்கிறது. இணைய தளம் மீது கரை பூசுவது அல்லது அசிங்கப்படுத்துவது என பொருள். இந்த அத்துமீறிய செயல் ஹேக்கிங்கில் ஒரு வகை . அரசியல் நோக்கம் முதல் வில்லங்கமான நோக்கம் வரை பல்வேறு காரணங்களுக்காக இப்படி இணையதளங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்படுவதுண்டு.
இப்போது ஹேக்கிங் செய்யமாலேயே எந்த ஒரு இணையதத்தின் தோற்றத்தையும் மாற்ற ஷர்ட்யூஆரெல் வழி செய்கிறது. ஆனால் ஹேக்கிங் போல மூல தளத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதன் நகல் தோற்றத்தில் தான் மாற்றங்கள் செய்யப்படுகிறது.
இந்த சேவையை பலவிதங்களில் பயன்படுத்தலாம். விளையாட்டாகவும் பயன்படுத்தலாம். வில்லங்கமாகவும் பயன்படுத்தலாம். வில்லங்கமாக பயன்படுத்தினால் விபரீதத்திற்கு நீங்களே பொறுப்பு. வில்லங்கமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு தளங்கள் மீதோ , நிறுவன தளங்கள் மீதோ கை வைக்காமல் இருப்பது நல்லது. மாற்றாக சொல்ல நினைக்கும் செய்தியை ஆச்சரயம் கலந்த சுவாரஸ்யத்துடன் சொல்ல இந்த வசதியை பயன்படுத்தலாம்.
அதே போல இணையதள வடிவமைப்பில் ஆர்வம் உள்ளவர்கள் இணையதள தோற்றம் தொடர்பான உதாரணங்களுக்கு இந்த சேவையை பயன்படுத்தலாம்.
——-
இணையதள முகவரி: http://shrturl.co/
————-
பி.கு:</strong> இந்த வகையான இணைய சேவைகள் இணையத்தின் வழக்கமாகவே இருக்கிறது. இணைய கோபத்தை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கும் இதே போன்ற சேவை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.
மேலும் இது போலவே , பிரபல செய்தி தளங்களின் தோற்றத்தில் நாம் விரும்பும் செய்திகளை இடம் பெற வைக்ககூடிய சுவாரஸ்யமான இணையதளமும் இருக்கிறது. அந்த இணையதளம் பற்றி அறிய விரும்பினால், சிறந்த இணையதளங்கள் பற்றிய விரிவான அறிமுகங்களை கொண்ட எனது புத்தகமான ’இணையத்தால் இணைவோம் ’ வாங்கிப்பாருங்கள்; https://www.nhm.in/shop/100-00-0002-219-9.html
விளையாட்டக பயன்படுத்தக்கூடிய இணைய சேவை.

1 Comments on “இணையதளங்களை திருத்துவோம் வாருங்கள்”
yarlpavanan
பயனுள்ள தகவல் பகிர்வு