இணையவாசிகளின் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நீங்கள் விரும்பலாம், விரும்பாமல் போகலாம். ஆனால் அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஒன்று விக்கிபீடியாவை நீங்கள் தற்செயலாக பயன்படுத்தலாம் – எப்படியும், இணையத்தில் தகவல்களை தேடும் போது , உங்கள் குறிச்சொல் தொடர்பான விக்கிபீடியா பக்கம் வந்து நிற்கலாம். அல்லது நீங்களே விரும்பி விக்கிபீடியாவில் தகவல்களை தேடலாம். நம்பகத்தன்மை பற்றிய கேள்விகள், அதில் அரங்கேறும் திருத்தங்களின் அரசியல் ஆகியவற்றை மீறி விக்கிபீடியா மிகச்சிறந்த தகவல் சுரங்கம். அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்களின் பட்டியலில் அது ஆறாவது இடத்தில் இருப்பதற்கான காரணமும் அதுவே.
ஒரு முறை விக்கிபீடியாவை பயன்படுத்தினால் அதில் உள்ள ஏதவாது ஒரு அம்சம் உங்களை கவராமல் இருக்க வாய்ப்பில்லை. தகவல் களஞ்சியமாக விக்கிபீடியா பயன் மிக்கது என்றாலும் அதன் வடிவமைப்பு அத்தனை நேர்த்தியானது அல்ல. அதோடு விக்கிபீடியாவை பயனாளிகள் தங்கள் தேவைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள முடியாது. இந்த குறைகளுக்கு தீர்வு காணவும், விக்கிபீடியாவை மேலும் சிறந்த முறையில் பயன்படுத்தவும் வழிகள் இல்லாமல் இல்லை. உங்கள் விக்கி அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய சில வழிகளையும் விக்கி சார்ந்த சேவைகளையும் இங்கே பார்க்கலாம்.
எளிய ஆங்கித்தில்!
எப்போதாவது விக்கிபீடியா கட்டுரைகள் கடினமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா? கட்டுரையில் பயன்படுத்தப்படும் ஆங்கிலம் மற்றும் அதில் இடம்பெறும் கரடுமுரடான சொற்கள் இடையூறாக இருப்பதாக நினைத்திருக்கிறீர்களா? ஆம் எனில், கவலையேபடாதீர்கள், உங்களுக்காக என்றே எளிய ஆங்கில விக்கிபீடியா (http://simple.wikipedia.org/wiki/Main_Page ) இருக்கிறது. இங்கு விக்கிபீடியா கட்டுரைகளை எளிய ஆங்கிலத்தில் படிக்கலாம். அடிப்படையில் விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் தான் இங்கும் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாமே சிக்கல் இல்லாமல் எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. விக்கி கட்டுரைகளில் உள்ள கரடுமுரடான சொற்கள் நீக்கப்பட்டு அவற்றின் சாரம்சம் எளிதாக புரியும் வகையில் சிக்கலான விஷயங்கள் நீக்கப்பட்டு எளிதாக படிக்க கூடிய வகையில் திருத்தி எழுத்தப்பட்டுள்ளன. எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூலக்கட்டுரைகளையும் இங்கு சமர்பிக்கலாம். அடிப்படையான ஆங்கில சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விக்கிபீடியா கட்டுரைகள் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் எளிமையான வடிவில் வழங்கப்பட்டு வருகின்றன. 2003 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன. குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாதவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். இதே போலவே விக்கி அகராதியான விக்கிஷ்னரிக்கும் எளிய ஆங்கில வடிவம் இருக்கிறது – http://simple.wiktionary.org/wiki/Main_Page
செய்திகளை தொடர
செய்திகள் என்றதும் விக்கிபீடியா நினைவுக்கு வர வாய்ப்பில்லை. அதற்கு செய்தி தளங்களையோ அல்லது தேடியந்திரங்களையோ தான் தேடிச்செல்வோம். இருப்பினும் தவறவிட்ட முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள விக்கிபீடியா சிறந்த இடம் என்பது உங்களுக்குத்தெரியுமா? இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் , விக்கிபீடியா தளத்தில் , நீங்கள் எந்த மாதத்தின் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ , அந்த மாதத்தை விக்கிபீடியா தேடலில் கட்டத்தில் குறிப்பிட்டு தேடினால் , அந்த மாதத்தின் முக்கிய நிகழ்வுகளை எல்லாம

2 Comments on “விக்கிபீடியாவை மேலும் சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிகள்!”
yarlpavanan
பயன்தரும் தகவல்
cybersimman
நன்றி நண்பரே. தளங்களை பயன்படுத்தி பார்த்து அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.