வராலாறு அறிய அழைக்கும் இணையதளங்கள்!

வரலாறு அலுப்பூட்டுக்கூட்டும் விஷயமாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் வரலாறு சுவார்ஸ்யமானது மட்டும் அல்ல; முக்கியமானதும் கூட!. மனித குலத்தின் கடந்த கால நிகழ்வுகளை அறிந்து கொள்வது வாழ்க்கை பற்றிய புரிதலுக்கு உதவும். பொது அறிவு நோக்கிலும் வரலாற்றை அறிந்திருப்பது அவசியமானது.

பாடப்புத்தகங்களை மீறி வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் அதற்கு வழிகாட்டக்கூடிய இணையதளங்கள் இருக்கின்றன. இந்த இணையதளங்கள் வரலாற்று நிகழ்வுகளையும் , தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களையும் சுவாரஸ்யமாக முன் வைக்கின்றன. பக்கம் பக்கமாக படிக்க வேண்டிய தேவை இல்லாமல் ரத்தினச்சுருக்கமாக இவை வரலாற்று தகவல்களை அளிப்பதோடு, வரலாற்று தொடர்பான விளையாட்டுகளுடனும் கவர்ந்திழுக்கின்றன.

முதலில் பிபிசியின் வரலாற்று இணைதளத்தை பார்க்கலாம். உலகின் மிகச்சிறந்த செய்தி நிறுவனங்களின் ஒன்றாக விளங்கும் பிபிசி இணையதளத்தின் சார்பில் சுட்டிஸ்களுக்கு ஹிஸ்டரியை எளிதாக கற்றுத்தருவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள பகுது இது; http://www.bbc.co.uk/schools/primaryhistory/.
வரலாறு என்றவுடன் கிரேக்கமும் ,ரோமாபுரியும் தவறாமல் நினைவுக்கு வரும். கூடவே நம்முடைய சிந்து சமவெளி நாகரீகமும் மனதில் தோன்றும். கிரேக்கம் பற்றி அறிய வேண்டுமா? பண்டைய கிரேக்கம் தலைப்பில் கிளிக் செய்தால் , கிரேக்க வரலாறு துவக்கத்தில் இருந்து , அதன் வளர்ச்சி, எதென்ஸ் நகரின் சிறப்பு, ஒலிம்பிக் போட்டிகள், கிரேக்க போர்கள், கிரேக்க கடவுள்கள் என கிரேக்க வரலாற்றின் சுருக்கத்தை தெரிந்து கொண்டு விடலாம்.

இதே போலவே சிந்து சமவெளி தலைப்பை கிளிக் செய்தால் , நமது இந்தியாவின் வரலாற்று சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
பிரிட்டனை சேர்ந்த சார்லஸ் மேசன் என்பவர் தான் , சிந்து சமவெளி நாகரீகம் கண்டறியப்பட காரணமாக இருந்தவர். அவர் தான் 1826 ல் முதன் முதலில் ஹரப்பா நாகரீகத்தின் சுவடுகளான கட்டிடங்களின் மிச்சங்களை தனது பயணத்தின் போது கண்டறிந்தவர்.
ஏறக்குறைய 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பகுதியில் இருந்தவர்கள் அடுப்பை பயன்படுத்தி ரொட்டி சுட அறிந்திருந்தனர்.

எகிப்தியர்கள் போல பிரமிடுகள் மற்றும் சீனர்கள் போல சீனப்பெருஞ்சுவர் போன்ற அடையாளங்களை விட்டுச்செல்லாவிட்டாலும் சிந்து சமவெளி மக்கள் வர்த்தகம், விவசாயம் மற்றும் செங்கல் சுடுவது போன்ற கலைகளை விட்டுச்சென்றனர். இந்திய கலாச்சாரமும் இந்த நாகரிகத்தின் பரிசு தான்.
ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழும் முறையையும் சிந்து சமவெளி மக்கள் அறிந்திருந்தனர்.
இது போல சிந்து சமவெளி மக்களின் வாழ்க்கை தொடர்பான இன்னும் பல முக்கிய தகவல்களை இந்த தலைப்பின் கீழ் அறிந்து கொள்ளலாம். எல்லா விஷயங்களுமே 10-15 வரிகளில் சுருக்கமாகவும் சுவையாகவும் இருப்பதால், எளிதாக படித்து தெரிந்துகொண்டு அடுத்த அடுத்து என கிளிக் செய்து முன்னேறலாம். அருகிலேயே தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்புக்கும் ஏற்ற வரலாற்று விளையாட்டும் உண்டு. உதாரணமாக சிந்து சமவெளி பற்றி படிக்கும் போது அந்த கால வர்த்தகராக செயல்பட்டு வணிகத்தில் ஈடுபடலாம். இதே போல கிரேக்க நாயகனாக சாகச விளையாட்டிலும் ஈடுபடலாம்.
வைக்கிங்களின் வரலாறு ,உலக வரலாறு, உலகப்போர் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம். இவற்றில் உலக வரலாறு விளக்கப்பட்டிருக்கும் விதம் விஷேசமானது. வரலாற்றின் முக்கிய பொருட்கள் மூலம் இந்த விளக்கம் அமைந்துள்ளது.

ஹிஸ்டரிபார்கிட்ஸ் ( http://www.historyforkids.net/) வரலாற்று தகவல்களோடு வொர்க்‌ஷீட், வினாடி வினா மற்றும் விளையாட்டுகள் என சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. எகிப்து, சீனா, கிரேக்கம், ரோமாபுரி, ஆசியா, அமெரிக்கா என பல தலைப்புகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தலைப்பை கிளிக் செய்தால் துணைத்தலைப்புகளின் கீழ் விரிவாக வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஆசியா எனும் தலைப்பில் இந்திய வரலாறு பற்றி விரிவாக இடம்பெற்றுள்ளது.

இவை தவிர வரலாற்று வினாடி வினாக்களும், வொர்க்‌ஷீட்களும் இன்னும் சுவாரஸ்யத்தை அளிக்கின்றன.
இதே தலைப்பில் இருக்கும் மற்றொரு இணையதளம்: http://www.historyforkids.org/. வரலாற்று களஞ்சியமான இந்த தளத்தில் புராதன இந்தியா உட்பட பல தலைப்புகளை வரலாற்றை கொஞ்சம் ஆழமாகவே தெரிந்து கொள்ளலாம். இந்தியா பற்றி மட்டுமே பத்துக்கும் மேல்பட்ட தலைப்புகளும் அவற்றின் கீழ் பல துணைத்தலைப்புகளும் இடம் பெற்றுள்ளன. எல்லாமே கொஞ்சம் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன என்றாலும் படிப்பதற்கு எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் வரலாற்று கார்ட்டூன்களும் கவர்கின்றன. கணித மேதை பித்தகோரஸ், தத்துவஞானி பிளாட்டோ ஆகிய வரலாற்று நாயகர்களையும் அறிந்து கொள்ளலாம்.

வரலாறு தொடர்பான இன்னொரு சுவாரஸ்யமான தளம்: http://www.kidspast.com/.
இந்த தளத்தில் வரலாற்று தகவல்களும் உண்டு; வரலாறு தொடர்பான விளையாட்டுகளும் இருக்கிறது. வரலாற்று மேற்கோள்கள் இதன் தனிச்சிறப்பு. இதே போல வரலாற்று புள்ளிவிவரங்களும் தனியே கொடுக்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பல் பற்றிய தனிப்பகுதியும் இருக்கிறது.

இந்த இணையதளங்கள் நிச்சயம் வரலாற்றில் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வரலாற்று அறிவையும் வளர்த்துக்கொள்ள உதவும். இந்த பட்டியலில், வரலாற்று அகராதியையும் (http://www.historytoday.com/dictionary ) சேர்த்துக்கொண்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். பிரபலமான வரலாற்று இணையதளமான ஹிஸ்டரி டுடேவின் ஒரு அங்கமான இந்த அகராதி முக்கிய வரலாற்று பதங்களுக்கு அர்த்தம் தருகிறது.
——

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “வராலாறு அறிய அழைக்கும் இணையதளங்கள்!

  1. RAVICHANDRAN R

    அருமையான தகவல். மிக்க நன்றி.

    Reply
    1. cybersimman

      மகிழ்ச்சி.

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *