நெட்சத்திரங்கள் புத்தகம் பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டதும் ஆர்வத்துடன் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றி உங்களில் சிலர் இமெயில் மூலம் கேட்டுள்ளீர்கள். சிலர் பின்னூட்டம் வாயிலாக கருத்தும் தெரிவித்துள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி. இனி நெட்சத்திரங்கள் பற்றி சில தகவல்கள்.
இணைய உலகின் புகழ் பெற்றவர்களின் வெற்றிக்கதைகளை விவரிக்கும் தொகுப்பு. இதில் 30 நெட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே சாமான்யர்கள் .இணையத்தின் ஆற்றலால் புகழ் பெற்றவர்கள். அந்த வகையில் இணைய முன்னோடிகள். இந்த புத்தக்த்திற்கான நெட்சத்திரங்க்ளை தேர்வு செய்வது சவாலாக இருந்தது. எனினும் இணைய பயன்பாடு, முன்னோடி அம்சம், தாக்கம், ஊக்கம் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு 30 பேரை தேர்வு செய்து அறிமுகம் செய்துள்ளேன். மறு அறிமுகம் அல்லது விரிவான அறிமுகம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த நெட்ச்த்திரம் யூடியூப் பேராசிரியரான வால்டர் லெவின் .புத்தகம் எழுதிக்கொண்டிருக்கும் போதே லெவின் பற்றி டிவிட்டரில் நான் பகிர்ந்து கொண்ட தகவல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. லெவின் தவிர கான் அகாடமியின் ச்ல்மான் கானும் எனக்கு பிடித்தவர். படித்துப்பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும்.
புத்தக் கண்காட்சிசியை முன்னிட்டு தயாராகி உள்ள புத்தகம் இது. எனது முதல் நூலான இணையத்தால் இணைவோம் -சைபர்சிம்மன் கையேடு -1 வெளியிட்ட மதிநிலையத்தின் விவேக் எண்டர்பிர்சஸ் இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. வாசக நண்பர்கள் சார்பில் மதி நிலையத்திற்கு என நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த புத்தகம் இணைய வெற்றியாளர்களின் கதைகள் மட்டும் அல்ல; ஒரு விதத்தில் இணைய வரலாற்றின் பிரதிபலிப்பு. இந்த புத்தகத்தை உருவாக்குவது சவலாக இருந்தது. இந்த அனுபவம் மற்றும் புத்தகத்தின் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன். புத்தத்தின் நாயகர்கள் நெட்சத்திரங்கள் பற்றி பகிரவும் பல விஷயங்கள் இருக்கின்றன.
நெட்சத்திரங்கள் தொடர்பான உங்களை கருத்துக்களை அறிய ஆர்வமுடன் இருக்கிறேன்.
புத்தகம் பற்றிய விவரங்களுக்கு ;
புத்தகத்தின் விலை ரூ. 130 ( 176பக்கங்கள்).
விவரங்களுக்கு ; Vivek Enterprises,
No.2/3, 4th Street,
Gopalapuram,
Chennai – 600 086.
Ph: 044-28111506
அன்புடன் சிம்மன்.