இந்த தளம் இசை கால இந்திரம்!

விரும்பின இசையை கேட்டு ரசிக்க புதிய வழியை மட்டும் அல்ல புதுமையான வழியை அறிமுகம் செய்திருக்கிறது தி நாஸ்டால்ஜியா மிஷின் இணையதளம்.  அப்படி இந்த தளம் என்ன செய்கிறது என்று கேட்டால் ,காலத்தால் பின்னோக்கி அழைத்துச்சென்று அந்த காலத்தி இசையை கேட்டு லயிக்க வைக்கிறது. அந்த வகையில் இது சாதாரண இணையதளம் அல்ல, இசைக்கான கால இயந்திரம்.

இப்போது இசைப்பிரியர்களுக்கு இந்த தளம் என்ன செய்கிறது என்பது இசை மின்னலாக தோன்றியிருக்குமே !

சிறு வயதிலோ அல்லது இளம் பருவத்திலோ கேட்டு ரசித்த பாடல்கள் எல்லோர் மனதிலும் இருக்கும் அல்லவா? இந்த பாடல்களை கேட்கும் போதே அந்த கால நினைவுகளில் மூழ்கிவிடலாம். இந்த பிளேஷ்பேக் அருமையான அனுபவம் . இதே அனுபவத்தை தான் இந்த இணையதளம் வழங்க முற்படுகிறது.  இதன் முகப்பு பக்கத்தின் மையத்தில் உள்ள கட்டத்தில் கடந்த காலத்தில் நாம் விரும்பும் ஆண்டை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதும் இந்த தளம் அந்த காலத்தில் பிரபலமான போக்காக இருந்த பாடல்களை பட்டியல் போட்டு காட்டுகிறது.

ஒவ்வொருவரும் அவர்களுக்கு விரும்பிய ஆண்டை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த கால இசை நினைவுகளில் மூழகலாம். அருமையான இணைதளம் இல்லையா? என்ன ஒரே குறை , எல்லா பரிந்துரைகளுமே பாப் பாடல்கள் மற்றும் மேற்கத்திய மெட்டுகள் தான். நம்மூர் இசையையும் சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும். அல்லது நம்மூர் இசை தளங்கள் இதே போன்ற சேவையை முயற்சிக்கலாம். 70 களை கிளிக் செய்து இளையராஜாவின் அன்னக்கிளியை கேட்பதோ 60 களை கிளிக் செய்து டிஎம்.எஸ் ஹிட்களை கேட்பதோ சுகமாக இருக்கும்  அல்லவா?

இசை நினைவில் மூழ்க; http://thenostalgiamachine.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *