அமெரிக்க சொர்கபுரி என்பது பலரது எண்ணம். இருக்கலாம்! நம்மவர்களில் பலரும் அங்கு மேற்படிப்பிற்கும், மேல் வாழ்க்கைக்கும் ( அங்குயே குடிபெயர்தல்) விரும்புகின்றனர். ஆனால் அமெரிக்கா பிழைக்க்செல்லவும் அங்கேயே தங்கிவிடவும் மட்டும் ஏற்ற தேசம் அல்ல; அந்நாடு சுற்றுலா நோக்கிலும் அருமையான பிரதேசம். அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க சுற்றுலா இடங்கள் அநேகம் இருக்கின்றன. ஆனால் பிரான்சும் ,இத்தாலியும், ஸ்பெயினும் சுற்றுலாவுக்காக அறியப்படும் அளவுக்கு அமெரிக்க அறியப்படவில்லை.
அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க அப்படி என்ன இருக்கிறது ? என்று கூட நீங்கள அப்பாவிதனமாக கேட்கலாம். இந்த கேள்விக்கு அழகாக பதில் அளிக்கிறது அட்ராக்ஷன்ஸ் ஆப் அமெரிக்கா இணையதளம். அமெரிக்காவில் இருக்கும் 50 மாநிலங்களிலும் பார்க்க வேண்டிய இடங்களை இந்த இணையதளம் அழகாக பட்டியல் போட்டு காட்டுகிறது. உலகிலேயே மிகவும் மாறுபட்ட நிலப்பரப்பை கொண்ட பெரிய நாடு என்ற முறையில் அமெரிக்காவில் நியூயார்க்கின் வானுயர் கட்டடம் முதல் அலாஸ்கா, அரோசோனாவின் இயற்கை எழில் பகுதிகள் அவரை பார்க்க வேண்டிய இடங்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது எனும் அறிமுகத்துடன் இந்த தளம் ஒவ்வொரு மாநில அழகையும் அறிமுகம்செய்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் பார்க்க வேண்டிய பத்து இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. 50 மாநிலங்களும் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த மாநில பட்டியலின் கீழ் அமெரிக்காவில் பார்க்க வேண்டிய பத்து இடங்கள் என்பது போன்ற பொதுவாக பட்டியல் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவுக்கு செல்பவர்கள் மட்டும் அல்ல அங்கேயே கிரீன் கார்டு வாங்கி செட்டிலானவர்கள் கூட இந்த தளத்தை பார்த்து பயன்பெறலாம்.
இந்த தளமே சிறப்பாக இருக்கிறது. இதில் இன்னொரு நல்ல விஷய்ம் என்ன என்றால் பட்டியலில் அடையாளம் காட்டப்படும் எல்லா இடங்களுக்கும் தனியே இணையதளம் இருக்கிறது. எனவே கூடுதல் விவரன்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவை சுற்றிப்பார்க்க: http://www.attractionsofamerica.com/