சட்ட மேதை அம்பேத்கர் 124 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுல் தனது முகப்பு பக்கத்தில் லோகோவில் அம்பேத்கர் உருவம் தோன்றும் வகையில் டூடுல் சித்திரத்தை உருவாக்கியுள்ளது.
முன்னனி தேடியந்திரமான கூகுள், முக்கிய தினங்கள் மற்றும் மேதைகளின் பிறந்தநாள் ஆகிய நிகழ்வுகளின் போது தனது முகப்பு பக்கத்தில் உள்ள லோகோவில் அவர்களை போற்றும் வகையில் சித்திரங்களை வெளியிடுவது வழக்கம். கூகுல் டூடுல் என இவை பிரபலமாக குறிப்பிடப்படுகின்றன.
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என போற்றப்படுபவரும், சமூக நீதிக்காக போராடியவருமான பி.ஆர்.அம்பேத்கரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் தனது லோகோவில் அம்பேத்கர் உருவப்படம் இடம்பெற்ற டூடுல் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
கூகுள் எழுத்துக்களின் நடுவே அம்பேத்கரின் உருவம் தோன்றுவது போல இந்த டூடுல் அமைந்துள்ளது. இந்த டூடுல் மீது கிளிக் செய்தால் அம்பேத்கர் தொடர்பான தேடல் முடிவுகள் இடம்பெற்ற இணைய பக்கத்திற்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் டூடுல் பற்றி விவரமறிய: http://www.google.com/doodles
———
கூகுள் டூடுல் பற்றிய முந்தைய பதிவுகள் சில: http://cybersimman.com/category/search/page/12/