இணையத்தின் முதல் முகவரியும் ,இமோஜியும்

கொஞ்சம் வரலாற்றுடன் துவங்கலாம். சமீபத்தில் சிம்பாலிக்ஸ்.காம் தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடியது. சிம்பாலிக்ஸ்.காம் சாதாரண இணையதளம் இல்லை. இணைய வரலாற்றின் மைல்கல் இணையதளங்களில் ஒன்று. இது தான் இணைய உலகின் பழமையான முகவரி. அதாவது இணைய உலகின் முதல் டாட்.காம் முகவரி.1985 மார்ச் மாதத்தில் சிம்பாலிக்ஸ் நிறுவனம் இந்த முகவரியை பதிவு செய்தது. அப்போது வலை (www) இன்னமும் அறிமுகமாகி இருக்கவில்லை என்பதை நினவில் கொள்ள வேண்டும். ஆம்,இமெயிலும் , இணையமும் வலையை விட மூத்த கண்டுபிடிப்புகள். வலை 1989 ல் தான் உதயமானது.
சிம்பாலிக்ஸ் நிறுவனம் லிஸ்ப் எனும் பெயரில் கம்ப்யூட்டர்களை தயாரித்து வந்தது.இந்த கம்ப்யூட்டருக்கு என்று லிஸ்ப் எனும் பெயரில் தனியே புரோகிராமிங் மொழியும் இருந்தது. வர்த்தக பயன்பாட்டுக்கான கம்ப்யூட்டர்களில் இது தான் முன்னோடி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிம்பாலிக்ஸ் நிறுவனம் 1993 ல் திவாலாகிவிட்டது. சிம்பாலிக்சின் கம்ப்யூட்டர்கள் இன்றளவும் சில அமெரிக்க அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது. சிம்பாலிக்ஸ்.காம் இணைய முகவரியை பொறுத்தவரை 2009 ல் அது ஆரோன் பெய்ஸ்டெட் (Aron Meystedt ) எனும் இணைய முனைவோரால் வாங்கப்பட்டுவிட்டது. இது போன்ற தனிச்சிறப்பு மிக்க இணைய முகவரிகளை வாங்கி வைத்துக்கொள்வது தான் ஆரோனின் வேலையாக இருக்கிறது. இணைய வரலாற்றின் இருப்பிடமாக இந்த தளத்தை பராமரிக்கப்போவதாக ஆரோன் கூறியிருந்தாலும் இந்த தளம் பெரிய அளவில் புதுப்பிக்கப்படாமலே இருக்கிறது. ஆனாலும் கூட இணையத்தின் முதல் முகவரி மறைந்து போகாமல் பயன்பாட்டில் இருப்பதே நல்ல விஷயம் தான்!.

சிம்பாலிக்ஸ் முகவரி: http://symbolics.com/

பாடகியின் புத்திசாலித்தனம்!

இணைய முகவரிகள் தொடர்பாக இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. பிரபல பாப் பாடகியும் நடிகையுமான டெய்லர் ஸ்விப்ட் சமீபத்தில் தனது பெயரில் இரண்டு புதிய முகவரிகளை வாங்கியிருக்கிறார். அந்த முகவரிகளின் இறுதிப்பகுதியை தெரிந்து கொண்டால் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும்.பார்ன் மற்றும் .சக்ஸ் என முடியும் முகவரிகள் தான் அவை. பார்ன் என்பது ஆபாச உள்ளடக்கத்தை குறிக்ககூடியது. .சக்சும் அதே ரகம் தான். எதற்கு இந்த முகவரிகள்? இவற்றை ஏன் பாடகி வாங்க வேண்டும் ?
இணைய முகவரிகள் என்றாலே டாட்.காமும் , டாட்.நெட்,டாட்.ஆர்க் போன்று முடியும் வகையில் இருந்தது எல்லாம் ஒரு காலம். இந்த முகவரிகளை நிர்வகிக்கும் ஐகான் அமைப்பு இணைய வளர்சிக்கு ஏற்ப புதிய டொமன்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் புதிதாக அலையென நூற்றுக்கணக்கில் முகவரிகள் அறிமுகமாக இருக்கின்றன. நகரங்களின் பெயரில் முடியும் முகவரிகள் எல்லாம் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் தான் .பார்ன் மற்றும் .சக்ஸ்.
முகவரியை பார்த்தாலே உள்ளடக்கத்தை தெரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்கலாம் என்று இந்த முகவரிகளுக்கான தேவை பற்றி ஐகான் விளக்கம் அளித்துள்ளது. அது சரி, பாட்கி ஸ்விப்ட் ஏன் இவற்றை வாங்க வேண்டும்? என்ன இருந்தாலும் டெய்லர்ஸ்விப்ட்.பார்ன் என படிப்பது நன்றாகவா இருக்குகிறது?
நல்ல கேள்வி தான், ஸ்விப்ட் இந்த முகவரியை வாங்கிய காரணம் அவரது முன்னெச்சரிக்கை தான். ஒருவேளை வேறு யாரேனும் இணைய கில்லாடிகள் ஸ்விப்டின் பிரபலத்தை பயன்படுத்திக்கொள்வதற்காக இந்த முகவரியை பதிவு செயது அதில் ஆபாச தகவலை போட்டு இணைய போக்குவரத்தை ஈர்த்து காசு பார்க்கலாம் அல்லவா? அப்படி எதுவும் நடக்காமல் இருக்க தான் ஸ்விப்ட் தானே முதலில் அந்த முகவரிகளை வாங்கு முடக்கிவிட்டார்.இதே போல பிரபலமானவர்கள் மற்றும் வர்த்தக நிறுவன்ங்கள் பெயரிலான முகவரிகள் தவறான நோக்கில் பதிவு செய்யப்படுவதை தவிர்க்க ஐகான் இவை பொதுச்சந்தையில் அறிமுகமாகும் முன்னறே இவற்றை பிரபலங்கள் வாங்கிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதை தான் ஸ்விப்ட் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனமும் .ஆபிஸ் முகவரியை தனது பெயருடன் இணைத்து வாங்கி வைத்திருக்கிறது. ஜூலை மாதம் முதல் இந்த புதிய முகவரிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.
இணைய முகவரி விஷயத்தில் இத்தகைய முன்னெச்சரிக்கை அவசியம் என்பதை நிச்சயம் டெட் க்ருஸ் ஒப்புக்கொள்வார். க்ருஸ் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் முதலில் களமிறங்கியிருப்பவர். ஆனால் அவரது பெயரிலான டாட்காம் முகவரி அவரது வசம் இல்லை. tedcruz.com எனும் அந்த முகவரி வேறு ஒருவரால் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு அந்த தளத்தில் பாரக் ஒபாமா ஆதரவு கருத்துக்கள் இடம்பெறச்செய்யப்பட்டுள்ளது.இதனால் டெட்க்ரூஸ் குழு டாட்.ஆர்க் முகவரியை பயன்படுத்துகிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் இணையம் முக்கிய ஆயுதமாக இருக்கும் நிலையில் ஒரு வேட்பாளர் பெயரிலான இணைய முகவரி இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?

டெட்க்ருஸ் இணைய முகவரி: http://www.tedcruz.com/

என்ன படம் பார்க்கலாம்!

அடுத்த என்ன திரைப்படம் பார்க்கலாம் ? இந்த கேள்வி உங்கள் மனதில் இருந்து அதற்கான பதிலை இணையத்தில் தேட விரும்பினால் வாட்ச் திஸ் (http://watchthis-mrlapinou.rhcloud.com/ ) இணையதளம் உங்களை அழைக்கிறது.
இந்த தளத்தில் நுழைந்து இதே கேள்வியை கேட்டால் அதற்கான அழகான் பரிந்திரையையும் முன் வைக்கிறது. எனக்கான படத்தை சொல் என்று கட்டளையிட்டால் போதும் இந்த தளம் பொறுப்பாக ஒரு திரைப்படத்தை பரிந்துரைக்கிறது.
அதற்கு முன்னர் உங்கள் எதிர்பார்ப்பை தெளிவாக உணர்த்துவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. திரைப்படங்களுக்கான ஐஎம்டிபி தளத்தில் அளிப்படும் ரேட்டிங்கில் 1 முதல் 10 வரை பெற்றவற்றில் எந்த ரேட்டிங் பெற்ற படங்கள் தேவை என குறிப்பிடலாம். அடுத்ததாக எந்த ஆண்டு காலத்தில் வெளியான படம் வேண்டும் எனறும் குறிப்பிடலாம். இரண்டுக்குமே நகர்த்தக்கூடிய கர்சர் போன்ற அளவுகோள் இருக்கின்றன.
இரண்டையும் தேர்வு செய்த பிறகு என்ன வகையான திரைப்படம் என்பதையும் தெளிவுபடுத்திவிடலாம். இதற்காக காமெடி,ஆக்‌ஷன், காதல்,அனிமேஷன் ,சுயசரிதை என திரைப்படங்களின் வகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதிலும் கிளிக் செய்து கோரிக்கையை சமர்பித்தால் உங்களுக்காக திரைப்படம் பரிந்துரைக்கப்படுகிறது.
பரிந்துரையில் திரைப்படம் தொடர்பான சுருக்கமான அறிமுகத்துடன் ஐஎம்டிபி தளத்தில் அந்த படம் தொடர்பான தகவல் அடங்கிய் இணையபக்க இணைப்பும் இடம்பெற்றுள்ளது.
இந்த பரிந்துரை பிடிக்கவில்லை அல்லது இன்னும் மேம்பட்ட பரிந்துரை தேவையா? வேறு படத்தை பரிந்துரைக்குமாறு மீண்டும் கோரலாம்.
திரைப்பட தகவல்களுக்கான அட்சயப்பாத்திரமாக விளங்கும் ஐஎம்டிபி தளத்தின் விவரங்கள் அடிப்படையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.ஒரு வித்த்தில் ஐஎம்டிபி தளத்தைவிட இது சுவாரஸ்யமாக இருக்கிறது. தெரிந்த படங்களுக்கான விவரங்கள் தேட ஐஎம்டிபி அருமையான தளம். ஆனால் வாடச் திஸ் தளம், திரைப்படம் தொடர்பான பரிந்துரைகளுக்கு ஏற்றதாக இருக்கிறது. திரைப்பட ரசிகர்கள் பார்க்க வேண்டிய படங்களை தெரிந்து கொள்வதற்கான நல்ல இணையதளம். ஹாலிவுட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் . நம்மூர் படங்களும் இது போன்ற இணையதளம் வேண்டும் எனும் ஏக்கமும் ஏற்படலாம்.

அசத்தல் ஆப்கள்

இணையதளம் போலவே இப்போது ஆப்ஸ் எனப்படும் செயலிகளிம் பிரபலமாக இருக்கின்றன. செயலிகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்வது கொஞ்சம் சவாலானது தான். இதற்கும் எண்ணற்ற வழிகள் இல்லாமல் இல்லை.அந்த வகையில் உங்கள் செயல்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவும் அருமையான செயலிகளை பட்டியலிட்டு அழகான வரைபட சித்திரமாக (இன்போகிராபிக்) வெளியிட்டுள்ளது டாப் ஆப்ஸ் இணையதளம். நினைக்கும் செயல்களை தள்ளிப்போடாமல் முடிக்க தூண்டும் செய்து முடி செயலிகள் முதல் பல முக்கிய செயலிகள் இந்த பட்டியலில் இருக்கின்றன. (http://www.topapps.net/android/productive-app.html/ ) இதே போன்ற பட்டியலை http://www.tomsguide.com/us/pictures-story/588-best-productivity-apps.html தளமும் அளிக்கிறது.

கேட்ஸ் நோட்ஸ்

கொஞ்சம் சீரியசான விஷயங்களை படிக்கும் ஆர்வம் இருந்தால் கேட்ஸ் நோட்ஸ் வலைப்பதிவை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். கேட்ட பெயராக இருக்கிறதே என நினைத்தால் உங்கள் யூகம் சரி தான் – இது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சின் இணையதளம். உலக மகா கோடீஸ்வரரான கேட்ஸ் மைக்ரோசாப்டின் தினசரி பொறுப்பில் இருந்து விடுபட்டு நன்கொடை மற்றும் சேவை பணிகளில் கவனம் செலுத்து வருகிறார். மூன்றாம் உலக நாடுகளுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய முயற்சிகளை ஆதரிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் கேட்ஸ் தான் முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் குறித்து இந்த தளத்தில் அடிக்கடி எழுதி வருகிறார். சமீபத்தில் இந்த தளத்தில் கேட்ஸ் முதலீட்டு மகாராஜா வாரன் பப்பே பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் எல்லோரும் படிக்க வேண்டும் என தான் கருதும் அம்சத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன் கேட்ஸ் இந்த தளத்தில் மனித கழிவில் இருந்து தண்ணீரை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை உற்சாகமாக அறிமுகம் செய்திருந்தார். இந்த முறையில் தயாரான தண்ணீரை கேட்ஸ் குடித்து காட்டியது தான் இதன் ஹைலைட்! அந்த வீடியோவை இப்போதும் பார்க்கலாம்.

பில் கேட்ஸ் இணையதளம்: http://www.gatesnotes.com/

கேட்ஜெட் புதிது!

வார வாரம் புதிய ஸ்மார்ட்போன்களும் ,டேப்லெட்களும் அறிமுகமாகி கொண்டிருக்கிறன. ஆனால் புதிதாக அறிமுகமாகி இருக்கும் டேப்லெட் மிகவும் விஷேசமானது மட்டும் அல்ல, லட்சிய நோக்கிலானது. இந்த டேப்லெட்டை டாக்டர்ஸ் வித்தவுட் பார்ட்ரஸ் எனும் சர்வ்தேச மருத்துவ அமைப்பிற்காக கூகுள் நிறுவனம் உருவாகி கொடுத்துள்ளது. சோனி எக்ஸ்பிரியா சாதனத்தின் மேல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக உருவாக்கியுள்ள இந்த டேப்லெட்டை கிளவுஸ் மாட்டிய கைகளாலும் இயக்கலாம்.குளோரின் கலைவையில் தோய்த்து எடுத்தாலும் இதை பயன்படுத்த முடியும். எபோலா நோயின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் சியாராலியோன் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் டாக்டர்கள் நோய் தொற்றை தவிர்க்க உடல் முழுவதும் பாதுகாப்பு கவசம் அணிந்து செயல்பட வேண்டியிருக்கிறது. நோயாளிகள் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள தொலைவில் இருக்கும் குழுவை நோக்கி உரக்க குரல் கொடுக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். குறிப்புக்காக பயன்படுத்தும் காகிதம் மூலம் கூட எபோலா பரவலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை. ஆனால் இதன் காரணமாக டாக்டர்களின் செயல்பாடு பாதிக்கப்படுவதை கருத்தி கொண்டு , அவர்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களை திரட்டுவதற்காக இந்த டேப்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தான் நோட்புக்

எதற்கும் ஸ்மார்ட்போனை பயன்படுத்த பழகிவிட்டோம். குறிப்பெடுப்பதற்கு கூட ஸ்மார்ட்போன்களில் ஏகப்பட்ட செயலிகள் இருக்கின்றன. டைப் செய்யலாமல் ஸ்டைலஸ் கொண்டும் போன் திரையில் எழுதிக்கொள்ளலாம் தான். ஆனால் சிலர் என்னதான் இருந்தாலும் காகிதத்தில் குறித்து வைப்பது போல் வராது என நினைக்கலாம். இவர்களுக்கு எல்லாம் குறிப்பேடு தான் ஏற்றது. இருந்தாலும் குறிப்பேடுகளில் எழுதியவற்றை டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்து நினைத்த நேரத்தில் பயன்படுத்த முடியாது என்பது பெருங்குறை. இதற்கு தீர்வாக ராக்கெட்புக் எனும் புதிய குறிப்பேடு புத்தகம் அறிமுகமாகி உள்ளது. இந்த குறிப்பேடு இருவேறு உலகமும் இணைந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இது அடிப்படையில் காகித குறிப்பேடு. ஆனால் இதில் குறித்து வைக்கும் விஷயங்களை டிஜிட்டல் வடிவில் இணையத்திலும் சேமித்துக்கொள்ளலாம்.
புளுடூத் போன்ற எந்த இணைப்பும் இல்லாமல் இந்த மாயத்தை ராக்கெட்புக் சாத்தியமாக்குகிறது.
சாதாரண காகித குறிப்பேடு போலவே இதில் தகவல்களை குறித்து வைக்கலாம். எழுதியவுடன் உங்கள் போனின் காமிராவை இதன் மீது காட்டினால் போதும், அந்த பக்கம் தானாக ஸ்கேன் செய்யப்பட்டு உங்களுக்கான டிராப்பாக்ஸ் போன்ற கிளவுட் சேவைகளில் சேமிக்கப்பட்டுவிடும். தேவையான டிஜிட்டல் சேவைகளுக்கான ஐகான்கள் ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் தேவையானதை மைபூசி அடையாளம் காட்டினால் போதும் செயலி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளலாம். ஆக, காகித நோட்டை பயன்படுத்தியது போலவும் இருக்கும், அதே நேரத்தில் அவற்றை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.
ராக்கெட்புக் திட்ட்த்திற்காக தற்போது இணையம் மூலம் கிரவுட்சோர்சிங் முறையில் நிதி திரட்டப்படுகிறது.
ராக்கெட்புக் இணைய பக்கம்: https://www.indiegogo.com/projects/rocketbook-cloud-integrated-microwavable-notebook

இப்படியும் எதிர்ப்பு

ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச் அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. ஆப்பிள் வாட்ச் எப்படி இருக்கும் என்பது தொடர்பான பல்வேறு கருத்துக்கள் ஆர்வத்துடன் அலசப்படுவதற்கு மத்தியில் இதன் தங்க மாதிரிக்கு பத்தாயிரம் டாலருக்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது கேலிக்கும் விமர்சனத்திற்கும் இலக்காகி உள்ளது. இந்த விமர்சனத்தை இணைய கலைஞர் ஒருவர் புதுமையான கலைப்படைப்பு மூலம் வெளிப்படுத்த தீர்மானித்திருக்கிறார் தெரியுமா? அமெரிக்காவில் வசிக்கும் சீனப்பெண்மணியான குவின்மின் லியூ எனும் அந்த கலைஞர், ‘நீங்கள் 18 கே ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சை வாங்கியிருந்தால் அல்லது வாங்க இருந்தால் நீங்கள் பணக்கார்ர் மற்றும் தீங்கானவர்” என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி அளிக்கிறோம், எங்களுக்கு அதை நன்கொடையாக வழங்குங்கள். எல்லாவற்றுக்கும் மேல் உலகில் வாட்ச் எதற்கு ? என்றும் அவர் கேட்டுள்ளார். அப்படியே பில் கேட்சை உங்களுக்கு பழக்கம் என்றால் அவரிடம் சொல்லி ஒரு ஆப்பிள் வாட்சை வாங்கி பரிசளிக்க சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார்.
கொடையாக அளிக்கப்படும் வாட்ச்களை கொண்டு ஒரு நிகழ் கலை படைப்பை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார்.
இதற்காக என்று அவர் கூகுள் படிவத்தில் அழகாக ஒரு விண்ணப்ப படிவத்தையும் உருவாக்கி இருக்கிறார்.
ஆப்பிள் வாட்சை விமர்சித்து கவனம் தேடும் முயற்சி என கூறப்பட்டாலும் குவின்மின் லியூ இதை மறுக்கிறார். ஒரு கலைஞராக தொழில்நுட்பம் மற்றும் விலை குறித்து தான் கவலைப்பட்டாக வேண்டும் என்று கூறியுள்ளவர் 2012 ல் ஐபேட் வாங்குவதற்காக சீன வாலிபர் ஒருவர் தனது சிறுநீரக்த்தை விற்றதை குறிப்பிட்ட இத்தகைய தாக்கத்திற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பிருக்கிறார்.

கூகுள் விண்ணப்ப படிவம்; https://docs.google.com/forms/d/1G5QXU62clhF25KqCqRtcFRmQS-NTZvvB_zHK5onmkjs/viewform

இமோஜி போல வருமா?

இணைய வெளியில் சமீப காலமாக ஹிலாரி கிளிண்டன் பெயர் தான் அதிகம் அடிபட்டிக்கொண்டிருக்கிறது. எல்லாம் அவர் அமைச்சராக இருந்த காலத்தில் இமெயில் பயன்படுத்திய விதம் தொடர்பான சர்ச்சையின் பயன் தான். ஹிலாரி 200 4 முதல் 2009 வரை வெளியுறவு அமைச்சராக இருந்தார். அந்த காலத்தில் அவர் அரசு இமெயிலை பயன்படுத்தாமல் தனிப்பட்ட மெயிலை பயன்படுத்தியதை பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் கண்டறிந்து அம்பலமாக்கியது. அமைச்சராக இருந்தவர் தனிப்பட்ட மெயிலை பயன்படுத்தியது, தகவல் பரிமாற்ற விவரங்களை ஆவனப்படுத்த வேண்டும் எனும் வலியுறுத்தும் விதிமுறைக்கு விரோதமாக அமைந்திருப்பதால் ஹிலாரி விமர்சனத்திற்கு இலக்கானார். இதனிடையே ஹிலாரி தனிப்பட்ட மெயிலை பயன்படுத்தியது மட்டும் அல்லாமல் அவரது பெயரிலேயே ஒரு மெயில் சர்வரையும் வைத்திருந்ததை செய்தி தளம் ஒன்று அம்பலமாக்கியது.
அரசு பணிக்காக ஒரு மெயில் தனிப்பட்ட மெயிலுக்காக ஒரு மெயில் என வைத்துக்கொள்ளும் சங்கடத்தை தவிர்க்கவே ஒரே மெயிலாக தனிப்பட்ட மெயிலை பயன்படுத்தினேன் என ஹிலாரி கொடுத்த விளக்கத்தை பலரும் ரசிக்கவில்லை. இந்த சர்ச்சையில் இருந்து தப்புவதற்காக ஹிலாரி பதவிக்காலத்தில் பெற்ற பணி தொடர்பான மெயில்களை 30,000 பக்கங்களில் அச்சிட்டு கொடுத்த்து தனிக்கதை.
இந்த இமெயில் சர்ச்சை , 2016 ல் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரியின் கனவை பாதிக்குமா ? என்னும் விவாதம் அமெரிக்காவில் சூடாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரபலமான நியூயார்க்கர் பத்திரிகை இந்த விவகாரம் தொடர்பான முகப்பு கட்டுரைய வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரையில் என்ன விஷேசம் என்றால் இது முழுக்க முழுக்க இமோஜிகளால் அமைக்கப்பட்டிருப்பது தான். ஐகான்கள் மூலம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உதவும் காட்சி மொழியாக இருக்கும் இமோஜிகள் இக்கால தலைமுறை மத்தியில் பிரபலமாக இருப்பது தெரிந்தவிஷயம் தான்.
இந்நிலையில் நியூயார்க்கர் ஹிலாரியின் முகத்தை பல்வேறு வடிவிலான இமோஜிகளாக வரைந்து அட்டை படமாக வெளியிட்டிருந்தது. பார்க்க சுவாரஸ்யமாக இருந்ததோடு கேலியும் கிண்டலும் கலந்து விமர்சனரீதியாக நச்சென கருத்தும் தெரிவித்திருந்தது.
இந்த அட்டைபடத்தை உருவாக்கி கலைஞர் பேரி பிளிட் , எழுத்துகளால் எழுதப்பட்டிருப்பதை ஒருவரால் எப்படி புரிந்து கொள்ள முடியும் எனத்தெரியவில்லை என குறிப்பிட்டு, அகர எழுத்துக்களுக்காக நான் வருந்துகிறேன் என சற்றே கிண்டலுடன் இமோஜி புகழ் பாடியிருக்கிறார். இமோஜியில் எழுதப்பட இருக்கும் முதல் நாவலுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளவர் கடைசியாக ஹிலாரி பெயரையும் சேர்த்திருக்கிறார்.
இந்த அட்டைப்படம் அருமையாக இருப்பதோடு நியூயார்க்கரின் கடந்த கால இதழ்களில் தொழில்நுட்ப பாதிப்பு தொடர்பான அட்டை படங்களும் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. அத்தனையும் அருமையாக இருக்கிறது.

நியூயார்க்கர் அட்டைப்படம்: http://www.newyorker.com/culture/culture-desk/cover-story-2015-03-30

—–
தினமணி.காமில் எழுதும் நெட்டும் நடப்பும் பத்தியின் முதல் பகுதி;

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *