பூகம்பம் உலக்கிய நேபாளம் நிலைகுலைந்து நிற்கிறது. பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் மீட்புக்குழுவினர் இடுபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் நேபாளத்தில் பூகம்பம் தாக்கிய பகுதியின் புதிய செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
டிஜிட்டல் குளோப் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் பூகம்பத்தில் பாதிப்பை துல்லியமாக உணர்த்தி பதற வைக்கிறது. ஆனால் பூகம்ப பாதிப்பை உணர்த்துவது மட்டும் அல்ல இந்த படங்களின் நோக்கம். அந்த பாதிப்பை சரி செய்வதில் உதவி மீட்பு பணியில் கைகொடுக்கும் நோக்கத்துடன் இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
செய்ற்கைகோள் படங்களின் அருமை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். பூமியின் மேற்புற தோற்றத்தை பறவை பார்வையாக படம் பிடித்து காட்டும் இந்த படங்களில் கட்டிடங்கள் ,சாலைகள், மரங்கள் என எல்லாவற்றையும் துல்லியமாக பார்க்கலாம். அதோடு தேவையான இடங்களில் கிளிக் செய்து தோற்றத்தை பெரிதாக்கி கொள்ளலாம். வரைபடங்களை விட செயற்கைகோள் படங்கள் மேம்பட்டவை.மிகவும் பயனுள்ளவை. பேரிடர் பாதித்த இடங்களில் அருமையாக கைகொடுப்பவை.
பொதுவாக பேரிடர் பாதித்த பகுதிகளில் பாதிப்புக்களை தெரிந்து கொள்வதும், எந்த இடங்களில் உடனடி தேவை என்று கண்டறிந்து செயல்படுவதும் மிகவும் அவசியம். மீட்பு பணிகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க இது பேரூதவியாக இருக்கும். ஆனால் பேரிடர் பகுதிகளில் தகவல்களை பெறுவதும் ஒருங்கிணைப்பதும் சவாலானது.இதற்கு, உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு அவசியம். அதே போல தன்னார்வர்களின் பங்களிப்பும் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் உழைப்பு வீணாவதோடு பொன்னான நேரம் விரையமாகி உயிர் காக்கும் பணியில் காலதாமதம் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
பூகம்பம்,புயல் மழை என பேரிடர் பாதித்த எல்லா பகுதிகளிலும் காலம் காலமாக எதிர்கொள்ளும் சவால்கள் தான் இவை.
ஆனால் இந்த சவாலை எதிர்கொள்ள தொழில்நுட்பம் பலவிதங்களில் கைகொடுக்கிறது. செயற்கைகோள் படங்கள் இவற்றில் முக்கியமானவை.
பேரிடரிப் தீவிரத்தை புரிந்து கொள்ளவும், மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கவும் செயற்கைகோள் படங்களை கொண்ட துரிதமாக திட்டமிடலாம்.
இதை சாத்தியமாக்க தான் டிஜிட்டல் குளோப் நிறுவனம் நேபாளத்தின் செயற்கைகோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பூகம்பத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட படங்களுடன் பூகம்பம் உலுக்குவதற்கு முந்தையை நேபாளத்தின் படத்தையும் வெளியிட்டுள்ளது.
ஆக, இந்த இரண்டு படங்களையும் அருகருகே வைத்து ஒப்பிட்டுப்பார்த்தாலே போதும் பூகம்பத்தின் பாதிப்பு எந்த எந்த இடங்களில் எப்படி இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். உருகுலைந்து கிடக்கும் கட்டியங்கள், தரைமட்டமான குடியிருப்புகள், பெயர்ந்து கிடைக்கும் சாலைகள் ஆகியவற்றை இந்த ஒப்பீடு அடையாளம் காட்டிவிடும்.
இந்த ஒப்பீட்டை கொண்டு மீட்பு பணிகளுக்கான முன்னுரிமை கோரும் இடங்களை கண்டறியலாம். அதே போல மோசமான பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு செல்வதற்கான பாதையையும் தீர்மானிக்கலாம்.பேரிடர் குழுவினருக்கு இந்த தகவல் பேரூதவியாக இருக்கும்.
ஆனால் இந்த விவரங்கள் முதலில் அடையாளம் காணப்பட வேண்டும். இதற்கு உதவும் வகையில் டிஜிட்டல் குளோப் நிறுவனம் தனது டாம்நோட் எனும் வரைபடத்தின் மீது தகவல்களை டேக் செய்யும் சேவையிலும் நேபாளத்தின் செயற்கைகோள் புகைப்படத்தை வழங்கியுள்ளது. இந்த சேவையில் உள்ள படங்களின் மீது தன்னார்வலர்களும், பொது மக்களும் தங்களுக்கு தெரிந்த விவரங்களை டேக் செய்யலாம். பழைய மற்றும் புதிய படங்களை ஒப்பிட்டு குறிப்பிட்ட இடத்திலான பாதிப்பை அடையாளம் காட்டலாம். சேதமடைந்த கட்டிடங்கள், மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகள் , பாதிக்கப்பட்ட சாலைகள் ஆகியவற்றை இவ்வாறு புகைப்படம் மீது அடையாளம் காட்டலாம். ( டிஜிட்டல் குளோப் வர்த்தக நோக்கில் வழங்கும் இந்த சேவையை பேரிடர் பாதிப்பை கருத்தில் கொண்டு பொதுநல நோக்கில் திறந்தவெளி சேவையாக வழங்கியுள்ளது).
இவற்றை கொண்டு மீட்பு குழுவினர் தங்கள் உதவி தேவைப்படும் இடங்களை இன்னும் சிறப்பாக திட்டமிட்டு அந்த இடத்திற்கு செல்வதற்கான பாதையையும் தீர்மானிக்கலாம்.
ஏற்கனவே தன்னார்வலர்களும் பொதுமக்களும் பூகம்ப பாதிப்பு பற்றிய விவரங்களை டிவிட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொண்டு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். உதவிக்கான கோரிக்கைகளையும் இதே முறையில் வெளியிட்டு வருகின்றனர். களத்தில் உள்ளவர்கள் பாதிப்பு பற்றிய விவரங்களை செயற்கைகோள் வரைபடத்தில் அப்டேட் செய்வதன் மூலம் உயிர் காக்கும் உதவி இன்னும் துரிதமாக கிடைக்க டிஜிட்டல் குளோபின் இந்த சேவை கைகொடுக்கிறது.
டிஜிட்டல் குளோப்பின் இணைய பக்கம்: http://www.tomnod.com/campaign/nepal_earthquake_2015/map/3frxmy11
—