இது அம்மாக்களின் இஸ்டாகிராம்!
இணைய உலகில் லேட்டஸ்ட்டாக பிரபலமாகி இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம் இது; மை கிட் காண்ட் ஈட் திஸ் (https://instagram.com/mykidcanteatthis/ ). அம்மாக்களால் அம்மாக்களுக்காக உருவாக்கப்பட்டிருப்பது. ஆனால் அதை அம்மாக்கள் தான் பார்த்து ரசிக்க வேண்டும் என்றில்லை . அம்மாக்கள் இந்த பக்கத்தை பார்த்தால் ஆறுதல் அடைவார்கள் என்றாலும் தங்களை மறந்து சிரிக்க விரும்பும் யாரும் இதில் உள்ள புகைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.
இந்த பக்கத்தில் அப்படி என்ன இருக்கிறது? உணவு! விதவிதமான உணவு புகைப்படங்கள் தான் இந்த பக்கத்தில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இந்த உணவு படங்களை பகிர்ந்து கொள்ளும் அம்மாக்கள் அதனுடன் அந்த உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிட மறுப்பதற்கான காரணத்தையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
அம்மாக்கள் அருமையானது,சத்தானது என கருதும் உணவை குழந்தைகள் சாப்பிட மறுப்பதற்கு சொல்லும் காரணங்கள் தான் எத்தனை விதமானது. எத்தனை விநோதமானது. அத்தனையையும் இந்த புகைப்படங்களில் பார்த்து ரசிக்கலாம்.
சாம்பிளுக்கு சிலவற்றை பார்க்கலாமா?
இந்த ஜூஸ் ரொம்பவும் ஈரமாக இருக்கிறது- இது ஒரு குழந்தையின் மறுப்பு.
இந்த வாழைப்பழம் வேண்டாம். ஏனெனில் இதன் தோளை அம்மா உறித்துவிட்டார். அப்பா தான் உறித்திருக்க வேண்டும்- இது இன்னொரு குழந்தையின் மறுப்பு.
இந்த நூடுல் வேண்டாம், இது ரொம்ப நூடுலாக இருக்கிறது…
இந்த பிட்சா பிட்சாவால் செய்யப்படவில்லை…
இது என் தட்டில் இருக்கிறது. உன் தட்டில் இல்லை…
இப்படி தட்டில் இருக்கும் சாப்பாடு வேண்டாம் என்று சொல்வதற்கு குழந்தைகள் தான் எத்தனை கிரியேட்டிவான காரணங்களை எல்லாம் சொல்கின்றனர். இதை கேட்டு நொந்துப்போகும் அம்மாக்கள் இவற்றை புகைப்பட்த்தோடு இந்த தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் வழக்கப்படி உணவு படத்தை கிளிக் செய்து பகிர்ந்து கொண்டு, அதனுடன் உணவு மறுக்கப்படுபதற்கான காரணத்தை குறிப்பிட்டு வருகின்றனர். ஒவ்வொரு குறிப்பும், என் குழந்தை இதை சாப்பிட மறுக்கிறான் (“My Kid Can’t Eat This”) என பொருள் படும் ஹாஷ்டேகுடன் அமைந்துள்ளது.
இந்த படங்களை பார்க்கும் அம்மாக்கள், இந்த தினசரி போராட்டம் நம் வீட்டில் மட்டும் இல்லை என்று ஆறுதல் அடையலாம். அம்மாக்கள் மட்டும் அல்ல அப்பாக்களும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஹீதர் எனும் அம்மா இந்த இன்ஸ்டாகிராம் பக்க்த்தை துவக்கி இருக்கிறார். மூன்று குழந்தைகளின் அம்மாவான ஹீதர் தன் பிள்ளைகளை தினமும் சாப்பிட வைக்க படும் பாட்டை பதிவு செய்வதற்காக இந்த பக்கத்தை அமைத்த்தாக சொல்கிறார். உணவை வேண்டாம் என மறுப்பதற்காக குழந்தைகள் சொல்லும் காரணம் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பது முதல் வெகுண்டு எழச்செய்யும் வகையில் இருப்பதால் மற்ற அம்மாக்க்களின் அனுபவத்தையும் பகிரச்செய்திருக்கிறார்.
இன்னும் நூறு புகைப்படங்களை கூட தாண்டவில்லை, அதற்கு 76 ஆயிரம் பாலோயர்களுக்கு மேல் சேர்ந்துவிட்டனர். இதே பெயரில் பேஸ்புக் பக்கமும் இருக்கிறது.
அம்மாக்கள் ரசிப்பது சரி, பிள்ளைகள் இந்த பக்கத்தை பற்றி என்ன நினைக்கின்றனறோ!
—
தளம் புதிது; இந்த படம் எப்படி?
திரைப்பட ரசிர்களுக்கு ஐஎம்டிபி தளம் நன்கு பரிட்சயமானது தான். ஐஎம்டிபியில் எந்த திரைப்படம் பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்பதோடு அந்த படத்திற்கான ரசிகர்கள் ரேட்டிங்கையும் பார்க்கலாம். ஆனால் இந்த ரேட்டிங்கை படம் பார்ப்பதற்கான பரிந்துரையாக எடுத்துக்கொண்டால் பல நேரங்களில் நொந்துபோகலாம். ஏனெனில் சுமார் படங்களை ரேட்டிங் சூப்பர் என காட்டியிருக்கும். இதற்கு தீர்வாக திரைப்படத்தின் தரத்தை எடைப்போட்டு சொல்லும் இணையதளம் இருக்கிறது; http://pretentious-o-meter.co.uk/. இந்த தளத்தில் மனதில் உள்ள திரைப்படத்தை சமர்பித்தால் அந்த படத்தின் ஐஎம்டிபி ரேட்டிங்குடன், விமர்சகர்களின் கருத்தையும் ஒப்பிட்டுப்பார்த்து, மதிப்பீட்டை வழங்குகிறது. 0 முதல் 100 வரை கொண்ட அளவு மாணியில் படம் எப்படி என காட்டுகிறது. சிவப்பு நிறத்தில் மதிப்பெண் இருந்தால் படம் குப்பை. பச்சை என்றால் சூப்பர் படம். ஐஎம்டிபி மட்டும் அல்லாமல், திரைப்பட விமர்சன தளமான ராட்டஸ் டொமேட்டோஸ் தளத்தின் ரேட்டிங்குடனும் ஒப்பிட்டுப்பார்க்கலாம். நியால் பியார்ட் (Niall Beard) என்பவரின் படைப்பு இந்த தளம்!.
—-
செயலி புதிது ; அகில இந்திய வானொலி ஆண்ட்ராய்டு போனுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஆல் இந்தியா லைவ் எனும் இந்த செயலி மூலம் வானொலி செய்திகளை செல்போனிலேயே படிக்கவும் கேட்கவும் செய்யலாம். தேசிய,பிராந்திய செய்திகள் மற்றும் சிறப்பு செய்தி நிகழ்ச்சிகளும் உள்ளங்கையிலே வருகிறது. ஐபோன் மற்றும் விண்டோசுக்கான செயலிகளும் வர உள்ளன.
கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.parsarbharti.airnews&hl=en
—
இணைய குறிப்பு
பேஸ்புக் பயனாளிகளுக்கு அடிக்கடி வந்துசேரும் கேண்டி கிரஷ் விளையாட்டுக்கான அழைப்புகள் அலுப்பையும் எரிச்சலையும் அளிக்கலாம். இவற்றில் இருந்து விடுபட வேண்டுமா? பேஸ்புக் செட்டிங் பகுதிக்கு சென்று அதில் உள்ள பிளாகிங் வசதியில் இருந்து, பிளாக் ஆப் இன்வைட்டை கிளிக் செய்து அழைப்பு அனுப்பும் நண்பரின் பெயரை குறிப்பிட்டால் அதன் பிறகு அழைப்புகள் தொல்லை இல்லாமல் இருக்கலாம். இதே முறையில் குறிப்பிட்ட எந்த ஒரு செயலி அழைப்பையும் தடுத்து நிறுத்தலாம்.
கேள்வி பதில் தளமான குவோராவில் (http://www.quora.com/) எதைக்கேட்டாலும் பதில்(கள்) கிடைக்கும். ஆனாலும் கூட எந்த வேலையில் சேரலாம் என குவோராவில் ஆலோசனை கேட்பது புத்திசாலித்தனமல்ல. அமெரிக்க இளம் பொறியாளர் ஒருவர் பெரும் விலை கொடுத்து இதை கற்றுக்கொண்டிருக்கிறார்.
அந்த பொறியாளருக்கு உபெர் மற்றும் ஜெனிபிட்ஸ் என இரண்டு நிறுவனங்களிடம் இருந்து வேலைக்கான அழைப்பு வந்திருக்கிறது.உபெர் கோடிக்கணக்கில் சந்தை மதிப்பு கொண்ட ரைட் ஷேரிங் செயலி நிறுவனம். ஜெனிபிட்ஸ் ஸ்டார்ட்டப் ரகத்தை சேர்ந்தது. இரண்டில் எந்த நிறுவனத்தை தேர்வு செய்வது என பொறியாளருக்கு குழப்பம்.
இந்த குழப்பத்தை குவோரா தளத்தில் விளக்கி ஆலோசனை கேட்டிருந்தார். உபெர் மதிப்பு மிக்க நிறுவனம், ஜெனிபிட்ஸ் அப்படி அல்ல என கூறியிருந்தவர் உபெரில் வேலை பார்த்தால் பின்னாளில் கூகுள் அல்லது ஆப்பிள் நிறுவனங்களுக்கு தாவிவிட முடியும் என்றும் தனது எண்ணங்களை தெரிவித்திருந்தார். குழப்பத்தை குவோரா பயனாளிகள் தீர்த்து வைப்பார் என காத்திருந்தார்.
ஆனால் குவோரா சாதாரண கேள்வி பதில் தளம் அல்ல. எந்த கேள்விக்கும் துறை சார்ந்த வல்லுவர்கள் ,அதிகாரிகள் ஆகியோரும் ஆர்வத்துடன் பதில் அளிக்கும் துடிப்பான இணைய சமூகம் அது. பல நேரங்களில் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவன தலைவர்களே கூட பதில் அளிப்பதை பார்க்கலாம்.
பொறியாளர் விஷயத்திலும் இது தான் நடந்தது. அவரது வேலை குழப்பத்திற்கு ஜெனிபிட்ஸ் நிறுவன சி.இ.ஓ மற்றும் இணை நிறுவனரான பார்கர் கொனார்டே பதில் அளித்திருந்தார்.
நிச்சயமாக ஜெனிபிடிசில் சேர வேண்டாம், ஏனெனில் வேலைக்கான அழைப்பை திரும்ப பெற இருக்கிறோம் என்பது போல சற்றே காரமாக பதில் அமைந்திருந்தார்.
இந்த சம்பவம் உணர்த்தும் நீதி, புதிய வேலை பற்றிய எண்ணங்களை இணையத்தில் பகிராதீர். அது அசட்டுத்தனமாக அமையலாம்.
——-
நன்றி ;தமிழ் இந்து நாளிதழல் இளமை.நெட் பகுதிக்காக எழுதியது.
பிட்ஸ் & பைட்ஸ்
* சீனா இணைய அடிமைகள் நிறைந்த தேசமாக இருக்கிறது.சமீபத்தில் சீனா வாலிபர் ஒருவர் 14 நாட்கள் இடைவிடாது இணைய மையத்தில் கேம் ஆடி களைத்துப்போய் மயங்கி விழுந்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நாட்களில் குளிக்காமலும் ,அநேகமாக சாப்பிடாலும் இருந்தவர் மீட்க வந்த மருத்துவ குழுவினரிடம், என்னை தனியே விட்டு கம்ப்யூட்டரை ஆன் செய்யுங்கள் நான் இணையத்தில் உலாவ வேண்டும் என கூறியிருப்பது தான் இதைவிட கவலை அளிக்கும் விஷயம்.
* வீடியோ கேம் உலகில் கொடிகட்டிப்பறக்கும் நிடெண்டோ ஸ்மார்ட்போன் பக்கம் வருகிறது. படிப்படியாக ஐந்து மொபைல் கேம்களை உருவாக்க திட்டமிட்டிருந்தாலும், நிடெண்டோவின் கேம் சாதனங்களில் ஆடி மகிழக்கூடிய சூப்பர் மரியோ போன்றவற்றை போனில் ஆட முடியும் என எதிர்பார்ப்பதற்கில்லை.
* புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கான வலைப்பின்னல் சேவை பிளிக்கர் தன்னை புதுப்பித்துக்கொண்டுள்ளது. சமீபத்தில் அறிமுகமாகியுள்ள பிளிக்கர் 4.0 வெர்ஷனில் புகைப்படங்கள் தானாக பதிவேற்றப்பட்டும் வசதி மற்றும் அவை காலவரிசையில் அடுக்கப்படும் வசதி ஆகியவை இருக்கின்றன. இவற்றுடன் புகைப்படங்களுக்கான தேடல் வசதி அசத்தலாக இருப்பதாக பாராட்டப்படுகிறது. புதிய பிளிக்கரை முயன்று பாருங்களேன்!
* ஆப்பில் ஸ்மார்ட்வாட்சுக்கான செயலிகளை அறிமுகம் செய்வது தான் இப்போதைய டிரெண்ட். வோக்ஸ்வாகன் கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்வாட்ச் செயலி மூலம் பெற்றோர் பிள்ளைகளின் காரோட்டும் வேகத்தை கண்காணிக்க முடியுமாம்.
நம்மூரிலும் ஐசிஐசிஐ வங்கி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் வாட்ச் பயனாளிகளுக்கான ஐவியர் செயலியை அறிமுகம் செய்துள்ளது. எச்டிஎப்சி வங்கியும் ஸ்மார்ட்வாட்சுக்கான செயலியை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. (ஆப்பிள்)வாட்ச் வரும் பின்னே செயலி வரும் முன்னே போலும்!
* கூகுள் பிளேஸ்டோரில் புதிதாக வர இருக்கும் செயலிகளுக்கான முன்பதிவு வசதி அறிமுகமாகி உள்ளது. இதில் முன்பதிவு செய்து கொண்டால் செயலி ரிலிசாகும் போது நோட்டிபிகேஷன் செல் தேடி வரும். எப்படி?
* விண்டோஸ் 10 அறிமுகத்திற்காக பலரும் காத்திருக்க விண்டோஸ் இயங்குதள வரிசையில் இது தான் கடைசியாக இருக்கும் என்னும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அப்டேட் மற்றும் புதிய அம்சங்களை வெளியிடுவதில் மட்டும் மைக்ரோசாப்ட் கவனம் செலுத்தும்.
*இது வலைப்பதிவுக்கான பிரத்யேக பகுதி: