முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் பேஸ்புக் பயனாளிகள் தங்களை டைம்லைனில் ஜிப்களை பகிர்ந்து கொள்ளலாம்.
இணைய உலகில் வீடியோ பகிர்வு பிரபலமாக இருப்பது போலவே உருவ எழுத்துக்களான இமோஜி மற்றும் அசையும் சித்திரங்களான ஜிப்கள் பிரபலமாக இருக்கின்றன. ஒரு புகைப்படத்தில் பின்னணி நிலையாக இருக்க அதன் குறிப்பிட்ட பகுதி மற்றும் அசையும் வகையில் அனிமேஷனாக இருப்பது ஜிப் சித்திரங்களாக குறிப்பிடப்படுகின்றன.
ஜிப்கள் சுவாரஸ்யமானவையாகவும் அதே நேரத்தில் எரிச்சல் ஊட்டக்கூடியவையாகவும் கருதப்படுகின்றன. இணையத்தில் வைரலாக பரவி கவனத்தை ஈர்க்கும் ஆற்றலும் இவற்றுக்கு இருக்கின்றன.
ஜிப்கள் வேகமாக பிரபலமாக வரும் நிலையில் ஜிப்களை உருவாக்க புதிய வழிகளும் அறிமுகமாகி வருகின்றன. ஜிப்களுக்கு என்றே பிரத்யேக தேடியந்திரமாக ஜிப்பி ( ) இருக்கிறது. யூடியூப் வீடியோக்களில் இருந்து ஜிப்களை உருவாக்கும் வசதியும் கூட அறிமுகமானது. சமீபத்தில் ஜிமெயிலில் ஜிப்களை இணைக்கும் வசதியும் அறிமுகமானது.
எனினும் பேஸ்புக்கில் ஜிப்களை பகிரும் வசதி இல்லாமல் இருந்தது. காரணம் பேஸ்புக் நேரடியாக ஜிப்களை பகிர அனுமதி அளிக்கவில்லை. எனினும் ஜிப்பி போன்ற சேவையை பயன்படுத்தி தான் இதனை மறைமுகமாக செய்ய வேண்டியிருந்தது.
ஜிப்களை அனுமதித்தால் பேஸ்புக் பக்கத்தில் இவை அதிகம் தோன்றி கவனத்தை சிதறடிக்கலாம் என பேஸ்புக் கருதி வந்தது. ஆனால் இந்த நிலையை மாற்றிக்கொண்டு தற்போது ஜிப்களை பகிரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஜிப்பி போன்ற தளங்களில் உள்ள ஜிப்களின் இணைப்பு பேஸ்புக்கில் இணைப்பாக பகிரலாம்.
படிபடியாக அறிமுகம் செய்யப்படும் இந்த வசதி விரைவில் அனைத்து பயனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
——-