உங்கள் திறன் அறிய ஒரு இணைய சோதனை

தொழில்நுட்ப உலகில் மல்டிடாஸ்கிங் எனும் பதம் பிரபலமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவதை இது குறிக்கிறது. இணையத்தில் உலாவிக்கொண்டே பின்னணியில் பாட்டு கேட்பது, அலுலலக சகாவுடன் உரையாடியபடி கையில் செல்போனில் வாட்ஸ் அப் செய்திகளுக்கு பதில் அளிப்பது துவங்கி பல உதாரணங்களை மல்டிடாஸ்கிங்கிற்கு சொல்லலாம்.
நம்மில் பலரும் கூட இப்படி மல்டிடாஸ்கிங் மன்னர்கள் என காலரை தூக்கி விட்டுக்கொள்ள தயாராக இருக்கலாம்.
ஆனால், உண்மையிலேயே இந்த வகை திறமை சாத்தியமா? அதாவது ஒரே நேரத்தில் பலவேலைகளை திறம்பட செய்வதை தொழில்நுட்பம் மூலம் கைவரப்பெற்றிருக்கிறோமா? இதற்கான பதில் மல்டிடாஸ்கிங் பிரியர்களுக்கு ஏமாற்றம் தரலாம். இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளை திறம்பட செய்வது பெருமாலானோருக்கு சாத்தியம் இல்லை என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்கா பேராசிரியர் டேவிட் ஸ்டிரேயர் இந்த ஆய்வை நடத்தியுள்ளார்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்ய முடிவதாக பலரும் நினைக்கலாம் தான். ஆனால் விஷயம் என்ன என்றால் அப்படி செய்யும் வேலைகளின் செயல்திறன் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அந்த வகையில் பார்த்தால் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த ஆற்றல் இருப்பதாகவும் எஞ்சிய 98 சதவிதம் பேர் ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போது வேறு வேலையை செய்தால் எதாவது ஒன்றில் சொதப்பி விடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த 2 சதவீதம் பேர் சூப்பர் டாஸ்கர்கள் என வர்ணிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே ஒரு முறை இது தொடர்பான ஆய்வு நடைபெற்ற நிலையில் பேராசிரியர் ஸ்டிரேயர் மீண்டும் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார். பழைய ஆய்வில் பங்கேற்ற சூப்பர் டாஸ்கர்களில் 5 பேரும் மூன்று புதியவர்களும் புதிய ஆய்வில் பங்கேற்றுள்ளனர். இவர்களைத்தவிர மேலும் 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆய்வின் போது பங்கேற்பாளர்கள் திரையில் தோன்றும் கட்டத்தையும் அதில் மாறிக்கொண்டிருக்கும் நிறத்தையும் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் ஆடியோவில் கேட்கும் குறிப்புகளையும் காதில் வாங்கி கொள்ள வேண்டும். பின்னர் ஆடியோ குறிப்பை நினைவில் நிறுத்தி கட்டங்களின் நிலையை சரியாக சொல்ல வேண்டும்.
இந்த சோதனையில் 2 சதவீதம் பேர் மட்டும் திறம்பட செயல்பட்டுள்ளனர். மற்றவர்கள் குழம்பி தவித்துள்ளனர்.
இதற்கு பேராசிரியர் சொல்லும் விளக்கம் பலவேலை திறன் பெற்றவர்களின் மூளை செயல்படும் விதம் மாறுபட்டதாக இருக்கிறது என்பதாகும். சோதனையின் போது பங்கேற்பாளர்களின் மூளை செயல்பாட்டை ஆய்வு செய்து இந்த முடிவை முன்வைத்துள்ளார்.
இந்த கருத்தை சோதிக்க விரும்பினாலும் சரி அல்லது உங்கள் மல்டிடாஸ்கிங் திறனை சரி பார்க்க விரும்பினாலும் சரி அதற்கு ஆன்லைன் சோதனை இருக்கிறது. சில்வர் பே லேப்ஸ் நிறுவனம் உருவாக்கிய அந்த சோதனையில் ஆரம்பத்தில் ஒரு கட்டம் தோன்றும். கூடவே அதில் உள்ள எழுத்திற்கான ஆடியோ பதிவு கேட்கும். இரண்டையும் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்ததாக இன்னொரு கட்டம் இன்னொரு எழுத்து தோன்றும். அதற்கான ஆடியோ கேட்கும். பின்னர் முன்னர் மூன்றாவதாக தோன்றும் கட்டத்தில் இடம்பெறும் எழுத்தும் கேட்கும் ஒளியும் ஏற்கனவே பார்த்ததும் கேட்டதும் தானா என உறுதிபடுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு கட்டமாக முன்னேற வேண்டும்.
ஆன்லைன் சோதனைக்கு: http://www.soakyourhead.com/dual-n-back.aspx

இலவச வை-பை வரைபடம் ( செயலி புதிது)

புதிதாக எந்த இடத்திற்கு செல்லும் போதும் அங்கு வை-பை வசதி அருகாமையில் எங்கு இருக்கிறது தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். அதோடு அந்த வை-பை இணைப்பு இலவசமானதா என்று தெரிந்து கொள்ள முடிந்தால் அது போனஸ் மகிழ்ச்சியாகும். வை- பை மேப்பர் செயலி இந்த அற்புதத்தை (!) சாத்தியமாக்குகிறது. ஐபோனுக்கான இந்த செயலியை போனில் வர வைத்தால் , பயனாளியின் இருப்பிடம், வை-பை ரேடியோவை ஸ்கேன் செய்து அருகே உள்ள இலவச வை-பை வலைப்பின்னலை அடையாளம் காட்டுகிறது. பயனாளிகள் தாங்கள் அறிந்த இலவச வை-அப் சேவைகளையும் இதில் பதிவேற்றலாம் என்பதால் அந்த தகவல்களையும் வரைபடத்தில் பார்க்கலாம். உலகம் முழுவதும் முக்கிய நகரங்கள் உள்ளிட்ட ஆயிரகணக்கான நகரங்களில் செயல்படுகிறது. பயன்படுத்திய சேவை பற்றிய கருத்துக்களையும் தெரிவிக்கலாம். ஆண்ட்ராய்டு வெர்ஷனும் வர உள்ளது.துல்லியமானது என்று சொல்ல முடியாது என்றாலும் வழிகாட்டி நோக்கிலானது.
தரவிறக்கம் செய்ய: http://wifimapper.com/

தளம் புதிது ; சிறந்த மெயில்

சிறந்த இமெயில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. இந்த இலக்கணப்படி இமெயிலை அனுப்ப வழிகாட்டும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த பட்டியலில் ’கிரேட் இமெயில் காபி’ தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த தளத்தில் மிகச்சிறந்து என கருதப்படக்கூடிய மெயில்களின் நகல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மெயில்களை மாதிரியாக வைத்துக்கொண்டு செயல்படலாம். உள்ளடக்கத்திற்கு மட்டும் அல்லாமல், வடிவமைப்பிற்கும் இந்த மெயில்கள் வழிகாட்டியாக இருக்கின்றன. மெயில்களை ரகம்வாரியாக தெடவும் செய்யலாம். நல்ல இமெயில்களை சமர்பிக்கவும் செய்யலாம்.

இணையதள முகவரி: http://greatemailcopy.tumblr.com/

கேட்ஜெட் புதிது; துயிலெழுப்பும் வாசனை

காலையில் தூக்கத்தில் இருந்து சரியான நேரத்தில் கண் விழிக்க எச்சரிக்கை தேவையா? கையில் இருக்கும் ஸ்மார்ட்போனிலேயே அலாரம் வைத்துக்கொள்ளலாம். இதற்காக என்றே அலாரம் செயலிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அப்படி இருக்க, இதற்காக என்றே ஒரு தனி சாதனத்தை வடிவமைத்திருக்கிறார் பிரான்ஸ் வாலிபர் கிலாமே ரோல்டண்ட் (Guillaume Rolland). சென்சார்வேக் எனும் இவரது சாதனத்தில் என்ன விஷேசம் என்றால் இதில் ஒலிகள் வராது மாறாக நறுமனம் உண்டாகும். அதாவது, ஒருவர் காபி பிரியர் என்றால் இந்த சாதனத்தில் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் அதன் மணம் தோன்றும்படி செய்து கொள்ளலாம். ஆக, காலையில் அந்த நேரத்தில் அலாரம் ஒலிப்பதற்கு பதில் சும்மா கும் என்று காபி மணம் வீசி துயிலெழுப்பும். இப்படி விருப்பமான பல நறுமணங்களை அமைத்துக்கொள்ளலாம். கூகுள் நிறுவனத்தின் விஞ்ஞான போட்டிக்காக சமர்பிக்கப்பட்ட இந்த சாதனம் இப்போது கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் நிதி உதவி கோரி வந்திருக்கிறது.- http://sensorwake.com/en/

ஆப்பிள் பெண்மணி எங்கே?

ஆப்பிள் அபிமானிகளைப்பொருத்தவரை அதன் பழைய கம்ப்யூட்டர்கள் எல்லாம் தூக்கி எறிந்துவிடக்கூடியவை அல்ல. அவை எல்லாம் கலெக்டர்ஸ் ஐடெம். அதிலும் ஆரம்ப கால ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவை எல்லாம் பொக்கிஷம் தான். இப்படி பொக்கிஷமாக கருதப்படும் ஆரம்ப கால ஆப்பிள் கம்ப்யூட்டரை தான் அமெரிக்க பெண்மணி ஒருவர் அதன் அருமை தெரியாமல் மறுசுழற்சி மையத்தில் பழைய குப்பைகளோடு கொடுத்து சென்றிருக்கிறார். கலிப்போர்னியாவில் அமைந்துள்ள கிளின் பே ரிசைக்லிங் மையம் எனும் அந்த அமைப்பும் உடனே இந்த குப்பைகளை பிரித்து பார்க்காமல் கிடப்பில் போட்டுவிட்டது. பின்னர் எடுத்து பார்த்த போது தான் அதில் மிகவும் அரிதான ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் இருப்பது தெரிய வந்தது. ஆப்பிள் நிறுவனர்கள் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வாஸ்னியோக் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு கைப்பட உருவாக்கப்பட்ட இந்த கம்ப்யூட்டர்கள் மொத்தமே 200 அளவில் தான் தயாரிக்கப்பட்டன. இவற்றில் மிகச்சில மட்டுமே மிஞ்சியிருப்பதாக கருதப்படுகிறது. இவற்றில் ஒன்றான இந்த அரிய கம்ப்யூட்டரை மறுசுழற்சி மையம் சேகரிப்பாளர் ஒருவரிடம் 2 லட்சம் டாலர்களுக்கு விற்றுள்ளது. மையத்தின் கொள்கை படி இதன் மூலம் கிடைத்த தொகையை ( ஒரு லட்சம் டாலர்) ஒப்படைப்பதற்காக அந்த பெண்மணியை தேடிக்கொண்டிருக்கிறது. இதற்காக வீடியோ பதிவு ஒன்றையும் உருவாக்கி தனது தளத்தில் வெளியிட்டுள்ளது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *