வெப்கேமில் சிக்கிய திருடன்

பொதுவாக நம்மூரில் விடுமுறைக்கு வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது பாதுகாப்பைற்காக அருகே உள்ள காவல் நிலையத்தில் த‌கவல் தெரிவிக்குமாறு சொல்வார்கள். அதனால் பயன் இருக்குமா என்பது வேறு விசஷயம்.நாமும் நம் திருப்திக்காக பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி வைப்போம்.

இவற்றோடு இனி வெப்கேமிராவையும் ஆன் செய்துவிட்டு செல்லலாம். அப்ப்டியாயின் எங்கிருந்தாலும் விட்டின் மீது ஒரு கண் வைத்திருக்கலாம். அப்படியே யாராவது தப்பித்தவறி திருடர்கள் நுழைந்தாலும் கண்டுபிடித்துவிடலாம்.

பொறி வைத்து எலியை பிடிப்பது போல வெப்கேமில் திருடனை பிடிப்பது எல்லாம் நட‌க்கிற கதையா என்று கேட்க வேண்டாம். அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனது வெப்கேம் மூலம் தனது வீட்டில் அத்துமீறி நுழைந்த திருடனை பிடித்திருக்கிறார்.

ஜீனே தாமஸ் என்பது அவரது பெயர். புளோரிடாவில் உள்ள பாயன்டன் கடற்கரையில் அவரது வீடு இருக்கிறது. அங்கிருந்து 20 மைல் தொலைவில் உள்ள அலுவலகத்தில் அவர் வேலை பார்க்கிறார்.

சமீபத்தில் அவர் அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு வீடு பற்றிய கவலை உண்டானது. உடனே இண்டெர்நெட்டுக்கு தாவி தனது வீட்டில் பொருத்தியிருந்த வெப்கேம் காட்சிகளை பார்க்கத்தொடங்கினார்.

வெப்கேமில் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. காரணம் விட்டில் யாரோ 2 ம‌ர்மாசிமிகள் நடமாடிக்கொண்டிருந்தனர்.அவர்களை உற்று கவனித்த ஜேனே அவசர போலிச்சாரை தொடர்பு கொண்டு த‌கவல் கொடுத்து உதவு கோரினார்.

போலிசார் வந்துசேரும் வரை வீட்டில் என்ன நடக்கிறது எனபதி கவனித்துக்கொண்டேயிருந்தார். திருடர்களில் ஒருவர் ஃபிரிட்ஜ்ஜிலிருந்து பாலாடைக்கட்டிகளை சாப்பிடுவதை பார்த்தார். அதன்பிறகு அவ‌ர்கள் மற்றொரு அறைக்கு செல்வதையும் பார்த்தார்.

பாவம் திருடர்க‌ள் தங்கள் கண்காணிக்கபடுவது தெரியமலே காரியத்தில் கண்னாக இருந்தனர்.

இதற்குள் போலிசார் அங்கு வந்து இருவரையும் கைதுசெய்து விட்டனர்.கூடவே கூட்டாளி இருவரையும் பிடித்தனர்.

ஜேனேவுக்கு இதில் பயங்கரமான மகிழ்ச்சி. தான் குடியிருந்த பகுதி திருட்டு பயம் கொண்ட இடம் என்பதால் அவர் பாதுகாப்பிற்காக வெப்கேமை வாங்கிபொருத்தினார்.

அப்போது கணவர் கூட வெப்கேமிற்கான செலவு வீண் என்று கூறியிருக்கிறார். ஆனால் வெப்கேம் திருடனை பிடிக்க உதவி வியப்பில் ஆழ்த்திவிட்டது.

இந்த சம்பவம் வெப்கேமின் அருமையை உணர்த்தியிருப்பதாக கருதலாம். இந்த சம்பவம் திருடர்களுக்கான எச்சரிக்கை என்றூம் கொல்லலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “வெப்கேமில் சிக்கிய திருடன்

  1. சுவாராசியமான தகவல்.. 🙂

    Reply
  2. நல்ல வேலைக்கு இப்போ இந்த வெப்கேம் உதவியிருக்கு.சரிதான்!ஆனால் இதைப்படித்து விட்டு வெறுபல குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கும் வகையில் வெப்கேமை உபயோகப்படுத்தினால் என்னல் செய்வது?
    கமலா

    Reply
  3. நல்ல வேலைக்கு இப்போ இந்த வெப்கேம் உதவியிருக்கு.சரிதான்!ஆனால் இதைப்படித்து விட்டு வெறுபல குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கும் வகையில் வெப்கேமை உபயோகப்படுத்தினால் என்னல் செய்வது?

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *