இரட்டைக்குழந்தைகளுக்கு பெற்றோராக இருந்தால் எல்லா இடங்களிலும் அவர்கள் மீது கவனம் ஏற்படுவது இயல்பானது தான். ஆனால் ஆஸ்திரேலிய இளம் அம்மா ஒருவர் தனது இரட்டை குழந்தைகளால் இணையம் முழுவதும் புகழ்பெற்றிருக்கிறார்.கூடவே சர்ச்சைக்கும் இலக்காகி இருக்கிறார். இதற்கு காரணம் இரட்டை குழந்தைகள் பற்றி வழக்கமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் அவர் மொத்தமாக பதில் அளிக்கும் வகையில் சுவாரஸ்யமான முறையில் செயல்பட்டது தான்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் 26 வயதான ஆனி நோலன் மூன்று குழந்தைகளுக்கு தாய். மூவரில் இருவர் இரட்டையர்கள்.
டெல்பி மற்றும் செஸ்கி எனும் பெயர் கொண்ட இந்த இந்த பெண் குழந்தைகள் இரட்டையர்களுக்கான இலக்கணப்படி அச்சு அசல் ஒன்றாகவே இருப்பார்கள். ஆக, எங்கே சென்றாலும் இந்த இரட்டைக்குழந்தைகளின் உருவ ஒற்றுமை கவனத்தை ஈர்த்து அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும். இரட்டையரை பார்த்து விட்டு சும்மா இருக்க முடியுமா? அது தான் சிலர், ஆனியிடம் இரட்டைக்குழந்தைகள் பற்றி ஆர்வத்துடன் கேள்வி கேட்பார்கள்.
இவர்கள் இரட்டையர்களா? எனபதில் துவங்கி குழந்தைகளின் உருவ ஒற்றுமை தொடர்பான கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இது போன்ற நேரங்களில் ஆனி போன்ற அம்மாக்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடத்தை புரிந்து கொள்ளலாம். எந்த இடத்திற்கு சென்றாலும் ஒரே மாதிரியான கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் பதில் சொல்ல வேண்டியிருப்பது ஒரு நேரத்தில் இல்லாவிட்டாலும் ஒரு நேரத்தில் அலுப்பை ஏற்படுத்த தானே செய்யும்.
இது போன்ற ஒரு தருணத்தில் தான் ஆனி, இந்த கேள்விகளுக்கு எல்லாம் மொத்தமாக பதில் அளிப்பது என தீர்மானித்தார்.
ஆனி ஒரு வலைப்பதிவாளரும் என்பதால், இந்த பதில்களை அழகாக தயாரித்தார். ” ஆம்,இவர்கள் என் குழந்தைகள் தான், ஆம் இவர்கள் இரட்டையர்கள் தான், ஆம் இருவரும் பெண் குழந்தைகள் தான், இல்லை அவர்கள் ஒரே மாதிரி இல்லை, ஆம் , அவர்கள் ஒரே மாதிரி தோன்றுவது உண்மை தான், ஆனால் அவர்கள் ஒரே மாதிரி இல்லை என எனக்குத்தெரியும், … உங்கள் குடும்பத்தில் இரட்டையர்கள் உண்டா நல்லது… என்பது போல அமைந்திருந்த அந்த பதிலை இரண்டு துண்டு காகிதத்தில் எழுதி இரண்டு குழந்தைகளின் ஆடைகள் மீதும் ஓட்டிவிட நினைத்தார். இனி யார் கேள்வி கேட்டாலும் இதைப்பார்த்து பதில் தெரிந்து கொள்ளட்டும் என்பது போல இவ்வாறு செய்ய இருந்தவர், கடைசி நேரத்தில் அந்த யோசனையை கைவிட்டு விட்டார்.
ஆனால் இந்த குறிப்புச்சீட்டுடன் குழந்தைகளை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொண்டார். இரட்டைக்குழந்தைகளின் தாய் என்ற முறையில் ஓயாமல் கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் உருவாக்கிய அறிக்கை இது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இரட்டையர்களின் அம்மாக்கள் மட்டுமே எதிர்கொள்ளக்கூடிய இந்த சங்கடத்தையும், இதற்கு அழகான பதிலடி மூலம் முற்றுப்புள்ளி வைப்பதற்கான இந்த முயற்சியை பார்த்த பலரும் இதை ரசித்து மகிழந்தனர். குறிப்பாக ஏற்கனவே இரட்டைக்குழந்தைகளுக்கு தாயாக இருந்து இதே போன்ற அனுபவத்தை எதிர்கொண்ட அம்மாக்கள் பலர், மிகவும் ரசித்தனர். இதை படிக்கும் போதே என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என அவர்களில் பலரும் தெரிவித்திருந்தனர் என்றால் இன்னும் சிலரோ நாங்களும் கூட இதோ போல பதில் அளிக்க நினைத்திருக்கிறோம் என்று கூறியிருந்தனர். அவ்வளவு தான் இந்த புகைப்படமும் அதன் குறிப்பும் இணையத்தில் வைரலாக பரவி லட்சக்கணக்கானோரால் பார்த்து ரசிக்கப்பட்டது.
பெரும்பாலானோர் இந்த பதிலை ரசித்தாலும் சிலர் கடுப்பாகிவிட்டனர். அவர்களில் சிலர் அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்ததுடன் ஆனிக்கும் கொலை மிரட்டலும் விடுத்திருந்தனர். ஆனி இவற்றை பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.
ஆனால் ஒரு சிலர் தங்கள் வேதனையை பதிவு செய்திருந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் குழந்தைகளி பறி கொடுத்த சிலர் , ஆனியின் பதில் குறித்து மனக்கசப்பை வெளிப்படுத்தியிருந்தனர். குழந்தை இருப்பதே ஒரு வரம் இல்லையா? என அவர்கள் கேட்டிருந்தனர்.
ஆனியால் இந்த குரல்களை அலட்சியப்படுத்த முடியவில்லை. எனவே தனது செயலுக்கு விளக்கம் அளித்து ஒரு பதிவை எழுதினார்.( டைம் பத்திரிகையில் அது வெளியானது).
அந்த பதிவில், இரட்டை குழந்தைகள் மீது பொது மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பு மற்றும் சுவாரஸ்யம் குறித்த அனுபவத்தை தன்னைப்போன்ற சக அம்மாக்களுடன் நகைச்சுவையாக பகிர்ந்து கொள்ளவே இந்த பதிலை தயாரித்ததாகவும் , எவரையும் புன்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கூறியிருந்தார்.
குழந்தைகள் பற்றி நாள் முழுவதும் பேசும் அளவுக்கு அவர்களை தான் நேசித்தாலும், இரட்டையர்கள் பற்றி ஒரே மாதிரியான கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கும் போது நொந்துபோகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உணர்வையே நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டதாக கூறியவர் இதனால் வேதனையடைந்தவர்களிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார்.
இரட்டைக்குழந்தைகளுக்கு தாயாக இருப்பது குறித்து மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வதாக குறிப்பிட்டிருந்தவர், அவர்கள் பற்றி உங்களுக்கு எல்லாமும் தெரியவேண்டும் என்றால் தயங்காமல் என்னிடம் கேளுங்கள் என்றும் முடித்திருந்தார்.
ஆனியின் வலைப்பதிவு;http://www.uncannyannie.com.au/
——