டிஜிட்டல் இந்தியா திட்டம் என்ன சாதிக்கும்?

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் இந்தியா திட்டம் கருத்தளவில் நோக்கும் போது தேசத்தையே மாற்றி அமைக்க கூடிய நவீன அம்சங்களை கொண்ட மகத்தான திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தின் நோக்கம் , இதனால் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் இதை நிறைவேற்றுவதில் உள்ள சவால்கள் பற்றி ஒரு பார்வை;

எல்லாமே டிஜிட்டலுக்கு மாறிக்கொண்டிருக்கும் காலம் இது. கேமிரா டிஜிட்டலாக மாறிவிட்டது. திரைபடங்களிலும் படச்சுருளும்,படப்பெட்டியும் விடைபெற்று ஹார்ட்டிஸ்க்கும், செயற்கைகோள் ஒளிபரப்பும் வந்திருக்கிறது. பணத்திலும் டிஜிட்டல் மணி வந்துவிட்டது. தொலைபேசி கட்டணம், மின்கட்டணம் எல்லாவற்றையும் இணையம் மூலமே செலுத்தும் வசதி பிரபலமாகி இருக்கிறது. இணையம் மூலம் பொருட்களை வாங்கும் மின்வணிகம் சக்கைப்போடு போடுகிறது.
சேவைகள் எல்லாம் டிஜிட்டல் மயமாகி வரும் போது அரசு நிர்வாகம் மட்டும் நவீனமயமாகாமல் இருந்தால் எப்படி? இந்த கேள்விக்கான பதிலை தான் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு டிஜிட்டல் இந்தியா திட்டமாக முன்வைத்திருக்கிறது. மோடியால் ஜூலை 1 ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் டிஜிட்டல் வாரம் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டிருக்கிறது.

4.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு, 1.5 கோடி பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு, 8.5 கோடி பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு ஆகியவை இந்த திட்டத்தின் மூலம் சாத்தியமாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி வர்த்தக நிறுவனங்களும் இந்த திட்டத்தில் பங்கேற்பதாக ஆவலுடன் அறிவித்துள்ளன.
சான்றிதழ்களை பாதுகாக்க டிஜிட்டல் பாதுகாப்பு வசதி, கிராமங்களுக்கு பிராட்பேண்ட் நெடுஞ்சாலைகள், வயர்லெஸ் இணைய வசதி, இணையம் மூலம் அரசு சேவைகள், இணைய கல்வி, இணையம் வழி மருத்துவம் என்றெல்லாம் பேசப்பட்டு வியக்கவும், மலைக்கவும் வைக்கின்றன. இதனிடையே ஸ்மார்ட் நகரங்கள் பற்றியும் பேசப்படுகின்றன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இவை எல்லாம் சாத்தியமா? என்ற கேள்வி ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் இவை எல்லாம் என்ன என்ற குழப்பமும் சாமானியர்கள் மனதில் எழாமல் இல்லை.

டிஜிட்டல் இந்தியா என்றால் என்ன? பார்க்கலாம்!
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்று வர்ணிக்கலாம். ஒற்றை வரியில் சொல்வதானால் நாட்டை டிஜிட்டல்மயமாக்கி அதன் பயன்களை பொதுமக்கள் பெற வழி செய்வது என்று கூறலாம்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதி பயன்பாட்டை அளிப்பது , அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி மக்களிடம் கொண்டு செல்வது மற்றும் மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் வழங்குவது ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இவற்றின் மூலம் அரசு சேவைகளையும், செயல்பாடுகளையும் டிஜிட்டல் முறையில் மாற்றி முழுமையான மின் நிர்வாகத்தை கொண்டு வருவதையும் அரசு தனது இலக்காக கொண்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு துறைக்கான திட்டமாக இல்லாமல் எல்லா துறைகளையும் நவீனமயமாக்கி எதிர்காலத்திற்கு ஏற்றதாக மாற்றும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமாக இது அமைந்துள்ளது. சுருக்கமாக சொன்னால் தேசம் முழுவதையும் டிஜிட்டல் முறையில் இணைத்து தகவல் பரிமாற்றம் முதல் சேவைகள் வரை எல்லாவற்றையும் திறன் மிக்கதாக ஆக்குவது.
அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி,மக்களுக்கான டிஜிட்டல் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதை இந்த திட்டத்தின் ஆதார நோக்கம். மின் நிர்வாகம் என குறிப்பிடப்படும் டிஜிட்டல் சேவைகளை மையமாக கொண்ட செயல்பாடுகளை கொண்டு வந்து அரசு சேவைகளை மேம்படுத்துவதும் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது. அரசு நிர்வாகத்தில் பொதுமக்கள் பங்களிப்பை அதிகமாக்க வழி செய்வதுடன் வளர்ச்சியை ஊக்குவித்து ,வேலை வாய்ப்பை பெருக்குவதும் இதன் நோக்கங்களாக குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் வசதியை அளிப்பது, குறிப்பாக கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் வசதியை கொண்டு செல்வது என்றெல்லாம் பேசப்படுகிறது. அரசு அலுவலகங்களில் காகிதமில்லா சேவைக்கு வழி வகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராட்பேண்ட் நெடுஞ்சாலைகள், டிஜிட்டல் லாக்கர், அனைவருக்கும் தொலைபேசி, மின் நிர்வாகம், இணையம் மூலம் சேவைகள், அனைவருக்கும் தகவல் வசதி, ஐ துறை வேலை வாய்ப்பு ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
அதிவேக இணைய இணைப்பை சாத்தியமாக்கும் பிராட்பேண்ட் இணைய வசதியே பிராட்பேண்ட் நெடுஞ்சாலை என குறிப்பிடப்படுகிறது. பாரத் நெட் எனும் பெயரில் 2.5 லட்சம் கிராமங்கள் இந்த நெடுஞ்சாலையில் இணைய உள்ளன.
டிஜிட்டல் லாக்கர் வசதி சான்றிதழ் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பதற்கானது.மின் நிர்வாகத்தில் முக்கியமான அம்சம் இது. ( பார்க்க பெட்டிச்செயதி).
இணைய கல்வி என்பது இணையம், ஸ்மார்ட்போன் மற்றும் செயலிகள் மூலம் கல்வி அளிப்பது. தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு கூட இந்த முறையில் கல்வி அளிக்கலாம். குக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு கூட இது பயனளிக்கும்.
இணைய கல்வி போலவே இணைய தொழில்நுட்பம் மூலம் மருத்துவ வசதிகளை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இந்த சேவை வழங்கப்படும்.
வை பை இணைய வசதி மையங்களை உருவாக்குவது , அடுத்த கட்ட இணைய கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவையும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

அரசு சேவைகளை பொதுமக்கள் டிஜிட்டல் முறையில் பெறுவதை முழு அளவில் சாத்தியமாக்க இவற்றின் மூலம் அரசு விரும்புகிறது. அரசு அலுவலகங்களில் சேவைக்காக மணிக்கணக்கில் காத்திருக்க நேராமல் எல்லாவற்றையும் மவுஸ் கிளிக்கில் பெற முடிவதை உறுதி செய்யும் மின் நிர்வாகம் மூலம் இது சாத்தியமாகும். அரசு ஆவணங்கள் முதல் தகவல்கள் ,சேவைகள் எல்லாம் இணையம் மூலம் மூலமே அணுக முடியும். இது பொதுமக்களுக்கு சேவைகளை எளிதாக கிடைக்கச்செய்வதோடு அரசு அலுவலகங்களிலும் சுமையை குறைத்து செயல்திறனை அதிகமாக்கும்.
அந்த வகையில் அரசு செயல்பாடு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெறுவதற்காக மைகவ் எனும் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் அரசு சேவைகள் பற்றி தகவல் அறிய முடிவதுடன் அரசுக்கு ஆலோசனை அளிக்கவும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு செயல்பாடு தொடர்பான கருத்துக்களை பொதுமக்கள் இந்த செயலி மூலம் தெரிவிக்கலாம் என்பது உண்மையில் நல்ல விஷயம். ஆனால் இது ஒருவழி பாதையாக இல்லாமல், மக்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டால் சிறப்பாக இருக்கும்.
முக்கியமாக டிஜிட்டல் வசதிகளை பெறுவதில் நகரங்களுக்கும் கிராங்களுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிராட்பேண்ட் நெடுஞ்சாலைகள் போன்றவை இதற்கு உதவும். இந்த திட்டத்தில் மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன. இணையத்துடன் இணைக்கப்பட்ட பொருட்களும் இதில் முக்கிய அங்கம் வகிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது தொழில்நுட்பம் சார்ந்த புதிய வகை சான்றிதழ் படிப்புகள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகளும் அறிமுகமாகும். மேலும் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தகுதியான ஊழியர்களும் தேவைப்படுவார்கள். இது கோடிக்கணக்கில் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இணைய வசதி மேம்படுத்தப்படும் போது சிறுநகரங்களில் கூட பிபிஓ மையங்கள் அமைக்கப்படும் வேலை வாய்ப்பு பெருகும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆக கருத்தளவில் பார்க்கும் போது இந்த திட்டம் தேசத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரக்கூடியதாக இருக்கிறது. இணைய பயன்பாட்டிலும் நவீன தொழில்நுட்பத்திலும் வல்லவராக இருக்கும். பிரதமர் மோடி இப்படி ஒரு திட்டத்தை வகுத்திருப்பதில் வியப்பில்லை. தேசத்தை முன்னேறுவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் அவர் சரியாக வியூகம் அமைத்திருக்கிறார்.ஆனால், இதை செயல்படுத்தும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது.
கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது இந்தியா ஒளிகிறது எனும் விளம்பர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது . பொருளதாரம் தேங்கிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பிரச்சாரம் உண்மையில் எதிர்மறையான பயனை அளித்து ஆட்சியில் இருந்து பாஜக அகற்றப்பட்ட்து. ஆனால் இந்த முறை டிஜிட்டல் இந்தியா திட்ட்த்தை சிறப்பாக செயல்படுத்தினால் உண்மையிலேயே இந்தியா ஒளிரும் வாய்ப்பிருக்கிறது.

———-
நன்றி ; வணிகமணி இதழுக்காக எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

1 Comments on “டிஜிட்டல் இந்தியா திட்டம் என்ன சாதிக்கும்?

  1. இராமலிங்கம்

    Comment…டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் அங்கத்தினராக நான் விரும்புகிறேன்

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *