டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிஜிட்டல் லாக்கர் வசதி முக்கிய ஆவணங்களுக்கான பாதுகாப்பு பெட்டகமாக திகழ்கிறது. சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இனி கையில் எடுத்துச்செல்லும் அவசியத்தை குறைத்து, அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்து பாதுகாப்பதுடன் , டிஜிட்டல் வடிவிலேயே பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான வசதியை அளிக்கிறது அரசின் டிஜிட்டல் லாக்கர் திட்டம். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆன் -லைன் பாதுகாப்பு பெட்டக வசதி டிஜிலாக்கர் எனும் பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜூலை 1 ம் தேதி முதல் தேசிய அளவில் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வங்கிகளில் லாக்கர் வசதியை பயன்படுத்துவது போல இணையத்தில் இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியை பயன்படுத்தலாம். அரசு நிர்வாகத்தை மேலும் எளிமையாக்கி ,காகித ஆவணங்கள் பயன்பாட்டின் சுமையை குறைக்கும் நோக்கத்துடன் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த டிஜி லாக்கர் அமைகிறது. டிஜி லாக்கரில் ஒவ்வொரு குடிமகனும் தனக்கான லாக்கரை உருவாக்கி கொள்ளலாம். இந்த லாக்கரில் சான்றிதழ்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்கலாம். அதோடு அரசால் வழங்கப்படும் டிஜிட்டல் வடிவிலான ஆவணங்களையும் இதில் சேமித்து வைக்கலாம்.
டிஜிட்டல் லாக்கர் ஒருவரது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டது. பொதுமக்கள் டிஜிட்டல் லாக்கர் அல்லது டிஜிலாக்கர் இணையதளத்தின் மூலம் தங்களுக்கான லாக்கர் வசதியை உருவாக்கி கொள்ளலாம்.இதற்கு ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் தொடர்பு கொண்ட செல்போன் எண் அவசியம். ஆதார் எண்ணை இணையதளத்தின் லாகின் பகுதியில் சமர்பித்து தங்களுக்கான கணக்கை துவக்கலாம். அதன் பிறகு ஒருமுறை பாஸ்வேர்டு செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த பாஸ்வேர்டு மூலம் லாக்கரை துவக்கி கொள்ளலாம். அதன் பிறகு பயனாளிகள் தங்களுக்கான பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம்.
லாக்கரை அமைத்த பிறகு அதில் சான்றிதழ்களை பதிவேற்றி சேமிக்கலாம். பேன் கார்டு, பள்ளி, கல்லூரி சான்றிதழ், பாஸ்போர்ட்,அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இதில் சேமிக்கலாம். சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அல்லது பிடிஎப் கோப்பாக பதிவேற்றலாம். அதன் பிறகு சான்றிதழ்களை சமர்பிக்க விரும்பினால் லாக்கரில் இருந்தே இமெயில் மூலம் டிஜிட்டல் வடிவில் அனுப்பி வைக்கலாம். இதன் மூலம் கைகளில் சான்றிதழ்களை எடுத்துச்செல்வதை தவிர்க்கலாம். சான்றிதழ் தொலைந்து போய்விடும் எனும் கவலை இல்லாமலும் இருக்கலாம்.
இவை தவிர பல்வேறு அரசு அமைப்புகளால் டிஜிட்டல் வடிவில் வழங்கப்படும் ஆவணங்களையும் இதில் சேமித்து வைக்கலாம். ஆவணங்களை இணைய கையெழுத்திட்டு பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.
பொதுமக்களுக்கு டிஜிட்டல் சேமிப்பு வசதியை அளிப்பதுடன், காகித பரிமாற்றத்தை குறைத்து அரசு நிர்வாகத்தையும் வேகமாக்க இது உதவும் என்று கருதப்படுகிறது.
டிஜிட்டல் லாக்கர் வசதியை பயன்படுத்த; https://digilocker.gov.in/
–
சைபர்சிம்மன்