இது வேலைவய்ப்புக்கான புதிய இணையதளம் என்றாலும் அமெரிக்காவை மையமாக கொண்டது.எனவே இங்கு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பயன்படாது.ஆனாலும் கூட இந்த தளத்தை அதன் புதுமையான கருத்தாக்கத்திற்காக தெரிந்து கொள்ளலாம்.இணையதள உருவாக்கத்தில் புதுமை அம்சம் தான் மையமாக இருக்கிறது என்பதற்கும் இந்த தளம் அழகிய உதாரணம்!
லஞ்ச்கிருட் ( Lunchcruit ) எனும் அந்த இணையதளம் வேலை தேடுபவர்களையும், வேலைக்கு பொருத்தமான திறமைசாலிகளை தேடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களையும் இணைத்து வைக்கிறது.இது வழக்கமாக எல்லா வேலை வாய்ப்பு தளங்களும் செய்வது தான் – ஆனால் லன்ச்கிருட் தளத்தில் வேறுபாடு என்ன என்றால் இது நேரக்காணலுக்கான சந்திப்பை ஏற்பாடும் செய்யும் விதம் கொஞ்சம் சுவாரஸ்யமானது மற்றும் சுவையானது என்பது தான்.ஆம்,உண்மையிலேயே சுவையாகவே இந்த தளம் மூலம் வேலைவாய்ப்பை பெறலாம்.ஏனெனில் இந்த தளம் வேலை வாய்ப்பு சந்திப்புகளை மதிய உணவுடன் தான் ஏற்பாடு செய்து தருகிறது.
இலவச மதிய உணவு கிடையாது என பொருள் படும் பிரபலமான ஆங்கில பழபொழி ஒன்று உண்டு.அதை அப்படியே தலைகீழாக்கி, இலவச மதிய உணவு கிடையாது என்று யார் சொன்னது என கேட்டு நிறுவனங்களுடன் இலவச மதிய உணவு சாப்பிட அழைப்பு விடுக்கிறது இந்த இணையதளம்.
அதாவது விண்ணப்பங்கள் பரிசீலனை,பயோடேட்டா படலம்,நேர்க்காணல் கேள்விகள் எல்லாம் இல்லாமல்,ரிலாக்சான சூழலில் மதிய உணவு சுவைத்தபடி, நிறுவன அதிகாரி மற்றும் வேலை வாய்ப்பை நாடுபவர் சந்தித்துப்பேச வழி செய்து தருகிறது.இந்த சந்திப்பின் போது,நிறுவன தரப்பில் தங்களது எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளை நடபான முறையில் உணர்த்தி வந்திருப்பவர் அதற்கு பொருந்துவாரா என தெரிந்து கொள்ளலாம்.வேலை வாய்ப்பை நாடுபவரோ, நிறுவனத்தின் தன்மை ,அதன் திட்டங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டு அதில் உள்ள வேலைவாய்ப்பு தனக்கு பொருத்தமாக இருக்கமா என தெரிந்து கொள்ளலாம்.இதை மதிய் உணவுக்கு நடுவிலான உரையாடல் மூலம் செய்து கொள்ளலாம்.
இரு தரப்பிற்கும் ஏற்புடையதாக இருந்தால் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.இல்லை என்றால் கையை குலுக்கி விடைபெறலாம்.
வேலைவாய்ப்புக்கான தேடலில் உதவும் இணையதளங்களும் சேவைகளும் எண்ணற்றவை இருந்தாலும்,இவற்றை மீறி பொருத்தமான நபர்களை தேடுவதும் சரி,பொருத்தமான வேலையை தேடுவதும் சரி இருதரப்பினருக்குமே சிக்கலாக தான் இருக்கிறது.பல நேரங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் பரிந்துரை மூலம் தான் நல்ல தொடர்புகளும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
இந்த அம்சத்தை அடிப்படையாக கொண்டு தான் லஞ்ச்கிருட் செயல்படுகிறது.இது நிறுவனங்களை தொடர்பு கொண்டு அவற்றின் சார்பில் மதிய உணவு சந்திப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறது.வேலை வாய்ப்பை நாடுபவர்கள் இந்த அழைப்புகளில் தேடிப்பார்த்து தங்களுக்கு பிடித்தமான வாய்ப்புகள் இருந்தால்
விண்ணப்பிக்கலாம்.அதைப்பார்த்து நிறுவனம் அழைத்தால் மதிய விருந்துக்கு செல்லலாம்.அந்த சந்திப்பு வேலைவாய்ப்புக்கு வித்திடுவதாக அமையலாம்.இல்லை என்றாலும் கூட சுவாரஸ்யமான சந்திப்பாக துறை சார்ந்த தகவல்களை அளிக்க கூடியதாக இருக்கலாம்.மதிய விருந்தில் பங்கேற்க எந்த நிபந்தனையும் இல்லை.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் அறிமுகமாகி மற்ற நகரங்களுக்கும் இந்த தளம் விரிவடைந்து வருகிறது.கண்டா நாட்டிற்கும் விரிவாக உள்ளது.
வேலைவாய்ப்பு தேடலுக்கான போரடிக்கும் முறையை மாற்றி அதில் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கொண்டு வந்துள்ள இந்த தளத்தை வில்லியம் சூ மற்றும் டோம் பேட்ரிக் ஆகிய நண்பர்கள் துவக்கியுள்ளனர்.
என்ன இப்படி ஒரு வேலைவாய்ப்பு தளம் நம்மூரிலும் இருக்கலாம் என்று தோன்றுகிறதா? ஏன் நீங்களே கூட இதை ஆரம்பிக்கலாமே – இது ஸ்டார்ட் அப்களின் காலமாச்சே!
இணையதள முகவரி: http://lunchcruit.com/
——
இதன் நிறுவனர்கள் பற்றி பாஸ்ட்கம்பனியின் அருமையான கட்டுரை:http://www.fastcompany.com/3043768/most-creative-people/now-on-the-career-menu-free-lunch-with-a-side-of-dream-job