கூகுலுக்கு போட்டியாக விளங்கக்கூடிய நோக்கத்தில் அறிமுகமாகும் தேடியந்திரங்கள் பொதுவாக மாற்று தேடியந்திரங்கள் என்று சொல்லப்படுகின்றன.
அவற்றில் சிலவற்றை அறிமுகம் செய்யலாம் என் திட்டமிட்டுள்ளேன்.முதல் தேடியந்திரம் ‘மெல்ஜு ‘.
உலகின் முன்ன்ணி தேடியந்தராமாவது இதன் நோக்கமாம். எங்களால் அது முடியுமா என முகப்பு பக்கத்தில் நம்மிடமே கேட்டு கருத்துச்சொல்ல கோரிக்கை வைக்கின்றனர்.
கூகுலுக்கு சவால் விடுவது சுலபமானது. அதில் வெற்றி பெறுவது அத்தனை சுலபம் இல்லை. இது வரை எந்த தேடியந்திரத்துக்கும் அந்த அதிசயம் சாத்தியமாகவில்லை.
கூகுலோடு மோத தயாராகியுள்ள மெல்ஜு தனது பலமாக கருதுவது முடிவுகளை முன்கூட்டியே காட்சிப்படுத்தி பார்க்கக்கூடிய அம்சத்தை தான்.
அதாவது மெல்ஜூவில் தேடுபோது கூகுலில் தேடுவது போலத்தான் இருக்கும். கூகுல் முகப்பு பக்கம் போலவே ஒரே ஒரு தேடல் கட்டம் தான் இருக்கிறது.
ஆனால் அதில் டைப் செய்த பிறகு தான் விஷயமே உள்ளது. அடுத்த கணம் திரை இரண்டு பகுதியாக பிரிந்து விடுகிறது. இடது பகுதியில் வழக்கமான தேடல் பட்டியல் இடம் பெறுகிறது. அருகே வலது பக்கத்தில், தேடல் பட்டியலில் உள்ள ஒவ்வொரு முடிவின் இணைய பக்கமும் இடம்பெற்றிருக்கும். தனித்தனியே ஒவ்வொரு முடிவாக கிளிக் செய்து பார்க்கும் தேவை இல்லாமல் பட்டியலை பார்க்கும் போதே அதில் உள்ள இணைய பக்கங்களை பார்த்து விடலாம்.
இதனால் நேரம் மிச்சமாகும் என்று மெல்ஜு சொல்கிறது. அதோடு மற்ற
தெடியந்திரத்தை விட இதில் அதிக பக்கங்களை பார்க்கத்தோன்றும் எனவே தேடல் முடிவு மேம்படும் என்றும் சொல்கிறது.
நிச்சயம் இது புதிய வசதி தான். ஆனால் இது மட்டுமே கூகுலை சாய்க்க போதுமா என்ன?
அது மட்டும் அல்ல ஏற்கனவே ஆஸ்க் டாட் காம் இதே போன்ற வசதியை பைனாகூலர் என்னும் பெயரில் வழங்கி வருகிறது.
மெல்ஜு தன்னை ஒரு மெட்டா தேடியந்திரம் என வர்ணித்துக்கொள்கிறது,அதோடு தன்னார்வ புரோகிராமர்களின் பங்களிப்பபால் மேலும் சிறப்புற திட்டமிட்டுள்ளது.
ஒரு மாற்றத்திற்கு முயன்று பார்க்கலாம்.
———-
link;
http://melzoo.com/en_US/search

0 Comments on “மாற்று தேடியந்திரம் –1”
Sridharan
Just I tried it now… Its very useful. Thanks !
Keep it up !!!
இதயநிலா
மிகவும் பிடித்தமான படைப்பு, இதயநிலாவின் வாழ்த்துக்கள்..