விளம்பரங்களை தடுக்கும் புதிய பிரவுசர்

braveஇணைய உலகில் மீண்டும் பிரவுசர் யுத்தம் உருவாக எந்த அளவு வாய்ப்பிருக்கிறது என்று தெரியவில்லை.இணையத்தில் நெட்ஸ்கேப் கோலோச்சிய காலத்தில் மைக்ரோசாப்ட் எக்ஸ்புளோரரை அறிமுகம் செய்ததால் பெரும் போட்டி ஏற்பட்ட நிலையில் இருந்து இணயய உலகம் வெகுவாக மாறிவிட்டது.பிரவுசர்களும் வெகுவாக முன்னேறி வந்துவிட்டன.

ஒற்றை பிரவுசர் ஆதிக்கம் செலுத்தும் சூழல் இப்போது இல்லை.இணையவாசிகள் தங்கள் தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது.ஆனாலும் கூட,பிரவுசர்களின் போக்கை மாற்றி அமைக்ககூடிய கருத்தாக்கம் கொண்ட புதிய பிரவுசர்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன.

இந்த வகையில் புதிதாக பிரேவ் எனும் பெயரில் பிரவுசர் அறிமுகமாகியுள்ளது.கடந்த ஆண்டு அறிமுகமான விவால்டி புதிய பிரவுசரை விட, பிரேவ் பிரவுசர் அறிமுகமாகும் போதே அதிக கவனத்தையும்,விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறன. முதல் காரணம் பிரேவ் பிரவுசரின் பின்னே உள்ள நிறுவனர். இரண்டாவது காரணம் அதன் பின்னணியில் உள்ள கோட்பாடு.

பிரேவ் பிரவுசரை உருவாக்கியுள்ளவர் பிரெண்டன் ஐச் (Brendan Eich).இவர் வேறு யாருமில்லை.இணைய உலகின் பிரபலமான பிரவுசராக இருக்கும் பயர்பாக்சின் பின்னணியில் உள்ள மொசில்லா அமைப்பின் இணை நிறுவனர்.அது மட்டும் அல்ல பிரவுசர் செயல்பாடுகளுக்கு முக்கியமாக அமையும் ஜாவா ஸ்கிரிப்டை உருவாக்கியவர்.எதிர்பாராத சர்ச்சை காரணமாக மொசில்லா அமைப்பில் இருந்து விலக நேர்ந்த ஐச்,இப்போது பிரேவ் சாப்ட்வேர் எனும் நிறுவனத்தை உண்டாக்கி அதன் மூலம் அதே பெயரில் புதிய பிரவுசரை அறிமுகம் செய்துள்ளார்.

ஏற்கனவே உள்ள குரோமியம் பிரவுசர் அமைப்பை அடிப்படையாக கொண்டு ,இணையம் மற்றும் மொபைலில் செயல்படக்கூடிய இந்த பிரவுசர், விளம்பரங்களை தடுக்கும் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தான் ஆதார பலமாக முன்வைக்கப்படுகிறது.இதன் காரணமாக இணையவாசிகள் விளம்பர ஊடுருவல் இன்றி இணையத்தில் உலாவலாம் என்பது மட்டும் அல்ல, இதுவே பிரவுசரின் செயல்பாட்டை மேலும் விரைவாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.விளம்பரங்கள் மட்டும் அல்ல இணையவாசிகள் செயல்பாடுகளை பின் தொடரும் குக்கி சாப்ட்வேர் பொறிகளையும் நீக்குகிறது.

விளம்பரங்கள் நீக்கப்படுவதால் இணையதளங்கள் வழக்கமான பிரவுசகளில் தோன்றுவதை விட 60 சதவீதம் விரைவாக தோன்ற வாய்ப்பிருப்பதாக ஐச் தெரிவித்திருக்கிறார்.

பிரவுசர் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் புதுமை இல்லை என்றாலும் கூட,விளம்பரத்தை தடுக்கும் தன்மையே இதன் முக்கிய பலமாக அமைந்துள்ளது.இணைய உலகில் விளம்பரங்களை தடுக்கும் மென்பொருள்கள் இப்போது பிரபலமாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இவை ஆட் பிளாக்கர்ஸ் என்று குறிப்பிடப்படுகின்றன. இவை இணையவாசிகளுக்கு விளம்பரங்களில் இருந்து விடுதலை அளித்தாலும்,இணையதள நிறுவனங்களுக்கான வருவாயை அடைக்கும் வழியாக அமைவதால் சர்ச்சைக்கும் இலக்காகி இருக்கின்றன.

இந்த பின்னணியில் விளம்பரங்களை தடுப்பதை மட்டுமே முக்கிய கருத்தாக்கமாக பிரேவ் பிரவுசர் கொண்டுள்ளது. பிரேவ் பிரவுசர் விளம்பரங்களை தடுப்பதுடன் நிற்கப்போவதில்லை. நீக்கப்படும் விளம்பரங்களை தனது சொந்த பதில் விளம்பரங்களால் பதிலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

விளம்பரங்களுக்கு பதில் வேறு விளம்பரங்களா? அது என்ன நியாயம் என்று கேட்கலாம். பிரேவ் தரப்பில் இதற்கான நியாயம் முன்வைக்கப்படுகிறது. வழக்கமான விளம்பரங்கள் போல இந்த விளம்பரங்கள் ஊடுருவும் தன்மை கொண்டிருக்காது மற்றும் இணையவாசிகளை பின் தொடரும் தன்மை கொண்டிருக்காது எனும் விளக்கம் தான் அந்த நியாயம்! அதாவது பொதுவாக செய்யப்படுவது போல இணையவாசிகள் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் எதையும் சேகரிக்காத வகையில் புதிய விளம்பரங்கள் அமைந்திருக்கும்.

மாறாக இணையவாசிகளின் பயன்பாட்டு தன்மை அடிப்படையில் பொருத்தமான விளம்பரங்கள் தோன்றுமாறு செய்யப்படும்.பிரவுசர் செயல்பாட்டை மெதுவாக்கும் மற்றும் இணையவாசிகளின் அந்தரங்கத்தை ஊடுருவும் விளம்பரங்களுக்கு விடை கொடுத்து விட்டு,அதே நேரத்தில் புதிய விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை இணையதளங்களுடன் மற்றும் இணையவாசிகளுடன் பகிர்ந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆம்,இணையவாசிகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப அவர்களுக்கும் ஏதேனும் வித்ததில் பலன் அளிக்கப்படும்.இதற்கு முதல் கட்டமாக குறிப்பிட்ட அளவு பயனாளிகளை சென்றடையவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விளம்பர தடுப்பு சேவைகளில் வருவாய் இழப்பே பெரிய குறையாக இருக்கும் நிலையில், மாற்று விளம்பரங்கள் மற்றும் அனைத்து தரப்பினருடன் வருவாய் பகிர்வு ஆகிய அம்சங்களை கொண்டிருப்பதால் தான் பிரேவ் பிரவுசர் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது.மேலும் என்கிரிப்ஷன் சார்ந்த செயல்பாடும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் இது மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது.

இவையே பிரவுசர் உலகில் புதிய போக்காக பிரேவ் அமையுமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நிற்க, பேஸ்புக் தரப்பிலும் அதன் செயலிக்கான புதிய பிரவுசர் ஒன்று சோதனை முறையில் உருவாக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட சில பயனாளிகள் மத்தியில் பரிசோதித்து பார்க்கப்படும் இந்த பிரவுசர் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பயனாளிகள் வெளியேறாமலேயே இணையத்தில் உலாவ வழி செய்யும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பயனாளிகள் இணையத்தை பயன்படுத்தினாலும் தன்னை விட்டு வெளியேறாமலொ இருக்க வேண்டும் என பேஸ்புக் விரும்புவதை இது காட்டுகிறது.

இந்த பிரவுசர் பொது பயன்பாட்டிற்கு வரும் வாய்ப்பு இருக்கிறதா? அப்படியே வந்தாலும் வெற்றி பெறுமா? வெற்றி பெற்றால் என்ன நிகழும்? போன்ற பல கேள்விகள் எழுகின்றன. விஷயம் என்ன என்றால் ஏதோ ஒரு வகையில் இணைய உலகில் மீண்டும் பிரவுசர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது தான். வர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தன்மை அடுத்த பெரிய தொழில்நுட்பமாக அமையும் என்று கூறப்படும் நிலையில் மெய்நிகர் தன்மை கொண்ட பிரவுசர் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருவதையும் நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

பிரேவ் பிரவுசர் பற்றிய விவரம் அறிய:https://www.brave.com/

——

whatbrதளம் புதிது;பிரவுசர் அறிவோம்!

கூகுள் குரோம்,ஆப்பிள் சபாரி,ஓபரா, பயர்பாக்ஸ் என பலவகையான பிரவுசர்கள் இருப்பது போலவே பிரவுசர்களை அடிப்படையாக கொண்டு சில சுவாரஸ்யமான இணையதளங்களும் இருக்கின்றன. வாட்பிரவுசர் ( https://whatbrowser.org/) எனும் இணையதளம் நீங்கள் இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் பிரவுசர் என்ன என்பதை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. எந்த பிரவுசரை பயன்படுத்துகிறோம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்குமே என்று நீங்கள் நினைக்கலாம். உண்மை தான்,எல்லா பயனாளிகளுமே தாங்கள் பயன்படுத்தும் பிரவுசரை அறியாமல் இருக்க முடியாது தான். ஆனால் பிரவுசர்கள் அடிக்கடி மேம்படுத்தப்பட்ட வரும் நிலையில் அவற்றில் பலவித வர்ஷன்கள் இருக்கலாம் அல்லவா? இந்த இணையதளம் ஒருவர் பயன்படுத்தும் பிரவுசர் எந்த வர்ஷனை சேர்ந்தது என்றும் சொல்கிறது. தேவை எனில் மாற்று பிரவுசர்களை பயன்படுத்தும் வாய்ப்பையும் பரிந்துரைக்கிறது. பிரவுசர் பற்றிய எளிய அறிமுகமும் இருக்கிறது.
பிரவுஸ் ஹாப்பி இணையதளம் (http://browsehappy.com/ ) அனைத்து வகையான பிரவுசர்களையும் பட்டியலிட்டிருப்பதுடன் அவற்றை சமீபத்திய வர்ஷனை டவுண்லோடு செய்து கொள்ளவும் வழி செய்கிறது. ஆக நீங்கள் பிரவுசரை அப்டேட் செய்ய விரும்பினால் இந்த தளத்திற்கு விஜயம் செய்தால் போதும் அதை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.பிரவுசர்களின் வர்ஷன் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

mimicker_alarm_app_screenshots_2_ndtv
செயலி புதிது; அலாரம் செயலியில் மேலும் ஒரு புதுமை

ஸ்மார்ட்போன் பயனாளிகளை தூக்கத்தில் இருந்து எழுப்ப உதவும் அலாரம் செயலிகளுக்கு குறைவில்லை.இருந்தாலும் சின்ன சின்ன புதுமைகளுடன் புதிய அலாரம் செயலிகள் அறிமுகமாகி கொண்டு தான் இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது மைக்ரோசாப்டும் தன் பங்கிற்கு ஒரு அலாரம் செயலியை அறிமுகம் செய்துள்ளது. பயிற்சி ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் செயல்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் கேரேஜ் திட்டத்தின் கீழ் , மிமிக்கர் அலாரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களுக்கான வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி,விளையாட்டு அடிப்படையில் செயல்படுகிறது. அதாவது கண் விழிக்குமாறு இந்த செயலி குரல் கொடுத்த்தும் இதை நிறுத்த வேண்டும் என்றால் கேம் விளையாட வேண்டும். குறிப்பிட்ட போசில் சுயபடம் எடுப்பது,குறிப்பிட்ட வண்ணத்திலான பொருளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட மூன்று விதமான விளையாட்டுகள் இருக்கின்றன. இவற்றை வெற்றிகரமாக விளையாடி முடித்தால் மட்டுமே செயலி அமைதியாகும். இல்லை என்றால் மீண்டும் எச்சரிக்கை செய்யத்துவங்கும்.
வீடியோ கேமிற்கு பழக்கப்பட்ட தலைமுறையை தூக்கத்தில் இருந்து கண் விழிக்கச்செய்யவும் அதே முறையை பயன்படுத்த முயற்சிப்பது நல்ல உத்தி தான் இல்லையா?

தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.microsoft.mimickeralarm

1-plane
வீடியோ புதிது; ஜன்னல் ரகசியம்

விமானங்களை பார்த்திருப்பீர்கள். விமானங்களை கவனித்திருக்கிறீர்களா?ஆம் எனில், அதன் ஜன்னல்கள் வட்ட வடிவில் அமைந்திருப்பது ஏன் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கலாம். இந்த கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் ரியல் இஞ்சினியரிங் யூடியூப் சேனல் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோவில் விமான ஜன்னல்கள் வழக்கம் போல சதுரமாக இல்லாமல் வட்ட வடிவில் இருப்பதற்கான விஞ்ஞான பூர்வ காரணங்கள் எளிதாக புரியும் வகையில் சுவாரஸ்யமாக விளக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் வடிவமைக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் அதன் கேபின் பகுதி அழுத்தம் மற்றும் வெளிப்புற பகுதியின் அழுத்தம் இடையிலான வேறுபாட்டை சமாளிக்க சதுர வடிவிலான ஜன்னல்கள் இடையூறாக கருதப்பட்டன. இதன் விளைவே வட்ட வடிவிலான ஜன்னல்கள்.
மேலும் விரிவான விளக்கத்தை அறிய: https://www.youtube.com/channel/UCR1IuLEqb6UEA_zQ81kwXfg/feed

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *