பிரிடம் 251 போனுக்கு போட்டியாக மேலும் ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போன்!!

Freedom-651-spoof-websiteஉங்களுக்கு ஒரு நற்செய்தி. அதற்கு முன்னர் இந்த நற்செய்தியை முழுவதும் அனுபவிக்க நீங்கள் இதை முழுவதும் நம்பிக்கொண்டே படிக்க வேண்டும். இதற்குள் வேறு செய்தி தளங்களில் இந்த செய்தியை நீங்கள் பார்த்திருக்கலாம் என்றாலும் அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த செய்தியை முதலில் அறிந்து கொள்வது போன்ற வியப்புடனேயே படிக்க வேண்டும்.

ஏனெனில் இந்தியர்களாகிய நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள்.இப்போது தான் 251 ரூபாய்க்கு உலகின் மிக மலிவான ஸ்மார்ட்போன் உங்களுக்கு அறிமுகமாயிற்று.( அது கைக்கு வரும் போது எப்படி இருக்கும் எனும் கவலையை விட்டுத்தள்ளுங்கள்). -அதற்குள் அடுத்த மலிவு விலை ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது.

ஆனால் கொஞ்சம் ஏமாற்றம் தரும் வகையில் இந்த புதிய போன் 251 க்கும் குறைவாக அறிமுகமாகால் 651 ரூபாய்க்கு அறிமுகமாகி இருக்கிறது. போனின் பெயர் பிரிடம் 651.

இந்த போன் நீடித்து உழைக்குமா? என்ற கவலையே வேண்டாம். ஏனெனில் இந்த போன் அடுத்த பத்தாண்டுகளுக்கு பழுதாகாது – 2016 ம் ஆண்டு தான் இது உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதுவும் எப்படி தெரியாமா? டிரோன் எனப்படும் தானியங்கி குட்டி விமானங்களில் வந்து சேரும்.

இந்த போனை நம்பி ஆர்டர் செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பமும் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை.காரணம், இந்த போனை விற்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளமே ,இப்போது வாங்க வேண்டாம் ( டோண்ட் பை நவ்) என்று கேட்டுக்கொள்கிறது.

இதற்குள் உங்களுக்கு லேசாக சிரிக்க அல்லது நன்றாக சத்தம் போட்டு சிரிக்கித்தோன்றியிருந்தால் தாராளமாக சிரித்துக்கொள்ளுங்கள். இந்த புதிய ஸ்மார்ட்போனின் நோக்கமும் அது தான்.

ஆம், உலகின் மலிவு விலை ஸ்மார்ட்போன் எனும் வர்ணனையோடு அறிமுகமான பிரிடம் 251 போன், இது மோசடியா, மார்க்கெட்டிங் மாயாஜாலாமா எனத்தெரியாமல் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அந்த பரபரப்பில் இருந்து விடுபட உதவும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிடம் 251 போன் முயற்சியை நையாண்டி செய்யும் வகையில் பிரிடம் 651 எனும் பெயரில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய பிரிடம் 251 இணையதளம் போலவே இருக்கும் இந்த தளம் ஒவ்வொரு அம்சத்திலும் அழகான நையாண்டியை கொண்டிருக்கிறது. இதன் பின்னே உள்ள நிறுவனத்தின் பெயர் என்னத்தெரியுமா? டசண்ட் ரிங் எ பெல் லிட்! (Doesn’t Ring a Bell Pvt. Ltd. ) இந்த நிறுவனம் தன்னை எப்படி அறிமுகம் செய்து கொள்கிறது தெரியுமா? இன்னமும் துவக்கப்படாத நிறுவனம். ஆனால் இந்தியாவின் மிக வேகமாக வளரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்கிறது.

இந்த போன் எங்கே தயாராக இருக்கிறது தெரியுமா? செவ்வாய் கிரகத்தில்! அங்கு மட்டும் கிடைக்கும் பொருட்களை கொண்டு உருவாக இருப்பதால் தான் இந்த விலை. அதனால் தான் 2025 ல் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு சென்ற பிறகு அங்கிருந்த தயாராக உள்ளது. அதுவும் எப்படி தெரியுமா? சிவகாசியில் இருந்து 20 மில்லியன் ராக்கெட் ஆர்டர் செய்து அதன் மூலம் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த போனுக்கான சர்வீஸ் செண்டரை தேடி அலைய வேண்டாம். நேராக செவ்வாய்க்கு சென்றால் போதும். எப்படி இருக்கிறது! இப்படி ஒவ்வொரு அம்சமும் ரசித்து சிரிக்கும் படி அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தின் கீழே, இது ஒரு நையாண்டி முயற்சி, ஸ்மார்ட்போனை உருவாக்கம் நோக்கம் எங்களுக்கு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மற்ற சிறப்பம்சங்களை நீங்களே படித்துப்பாருங்கள்.

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு படி ராஜாராம் சேதுராமன் என்பவர் இந்த நையாண்டி தளத்தை அமைத்திருக்கிறார். இது அவரது டிவிட்டர் முகவரி: https://twitter.com/kotram. ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவர் பிலேசஸ்நியர்புனே எனும் வலைப்பதிவையும் நடத்தி வருகிறார்.

இணையதள முகவரி: http://www.freedom651.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

1 Comments on “பிரிடம் 251 போனுக்கு போட்டியாக மேலும் ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போன்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *