உலகம் விருப்பங்களால் மட்டும் ஆனதல்ல. இந்த உண்மையை இப்போது பேஸ்புக்கும் அங்கீகரித்திருக்கிறது. இதன் பயனாக பேஸ்புக் பயனாளிகள் இனி விருப்பம் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் இனி தாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதையும் வெளிப்படுத்தலாம். இதற்கு உதவும் வகையில் பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள ரியாக்ஷன்ஸ் வசதி பற்றி தான் இப்போது இணைய உலகில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக் உலகில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் லைக் வசதியின் நீட்டிப்பாக அறிமுகமாகி இருக்கும் இந்த வசதியின் பொருளாதார கோணம் பற்றி விவாதிக்கப்படுவதோடு உளவியல் மற்றும் மொழியியல் பார்வையிலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
பேஸ்புக் பயனாளிகளை பொருத்தவரை உலகம் விருப்பங்களால்,அதாவது லைக்களால் ஆனது என்பது தெரிந்த விஷயம் அல்லவா! பேஸ்புக்கில் நிலைத்தகவலை வெளியிட்டாலும் சரி, புகைப்படம் அல்லது வீடியோவை பகிர்ந்து கொண்டாலும் சரி, நண்பர்களும் ,நண்பர்களும் அதை லைக் செய்து ஆமோதிக்கலாம்.படித்ததும் பிடித்திருந்தால் அதை வரிகளாகவோ வார்த்தைகளாகவோ தெரிவிக்க வேண்டிய தேவை இல்லாமல்,இதற்காகவே இருக்கும் உயர்த்திய கட்டை விரல் ஐகானை கிளிக் செய்தால் போதும், பயனாளியின் விருப்பம் பதிவாகி பகிரப்படும்.
இந்த எளிமை லைக் செய்வதையும் ,லைக் செய்யப்படுவதையும் பேஸ்புக் கலாச்சாரமாகவே மாற்றியுள்ளது. லைக் செய்யுங்கள் என கோரிக்கை வைப்பதும், இத்தனை ஆயிரம் லைக்குகள் குவிந்தன என பெருமைபட்டுக்கொள்வதும் பேஸ்புக் மொழியாகி இருக்கிறது. பேஸ்புக் உலகில் பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்களின் செல்வாக்கும் லைக் எண்ணிக்கையால் தான் அளவிடப்படுகிறது. பிராண்ட்களும் இந்த எண்ணிக்கை விளையாட்டில் மகிழ்ச்சியோடு பங்கேற்கின்றன.
ஆனால் லைக் செய்வதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அது எளிதாக இருந்தாலும் எல்லா நேரங்களிலும் பொருத்தமானதாக இல்லை. அதிலும் குறிப்பாக வருத்தமான அல்லது சோகமான நிலைத்தகவல்களுக்கு லைக் செய்வது என்பது சங்கடமான அனுபவமாக மாறிவிடுகிறது.நெருக்கமானவர்களை இழந்த சோகத்தை வெளிப்படுத்தும் போது கூட நட்பு வட்டத்தில் பலரும் அதை லைக் செய்து தங்கள் ஆதரவை தெரிவித்த அபத்தம் பலமுறை அரங்கேறியிருக்கிறது. இவை விரும்பி செய்யப்பட்டவை அல்ல;எதையும் லைக் செய்யும் பழக்கத்தின் விளைவு இது!.
அதனால் தான் பேஸ்புக் பயனாளிகள் லைக் பட்டன் மட்டும் போதாது மாற்று பட்டன்களும் தேவை என கோரி வந்தனர். லைக் செய்வது போலவே டிஸ்லைக் செய்யவும் ஒரு பட்டன் வேண்டும் என்றும் கூட பயனாளிகள் வலியுறுத்தி வந்தனர்.
பேஸ்புக்கும் சரி அதன் நிறுவனர் ஜக்கர்பர்கும் சரி இந்த தேவையை உணர்ந்தே இருந்தனர். ஆனால் இதை நிறைவேற்றுவதில் தான் சிக்கல் இருந்தது.
விருப்பம் தெரிவிக்க லைக் சின்னம் இருக்கும் போது, அதற்கு எதிரான உணர்வுகளை தெரிவிக்கவும் ஒரு சின்னம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பானது தான். இந்த சின்னம் டிஸ்லைக் பட்டன் வடிவில் இருக்க வேண்டும் என்று பயனாளிகள் பலர் எதிர்பார்த்ததும் இயல்பானது தான். ஆனால் டிஸ்லைக் பட்டனை அறிமுகம் செய்வதால் ஏற்படக்கூடிய விபரீதங்களை பேஸ்புக் அறிந்திருந்தது. முதலில் இது பயனாளிகள் மத்தியில் டிஸ்லைக் யுத்த்தை ஏற்படுத்தும் அபாயம் இருந்த்து. எப்படியும் இத்தனை ஆயிரம் பேர் லைக் செய்தனர் என்று சொல்வது போல, இத்தனை பேர் டிஸ்லைக் செய்தனர் என்று சொல்வது விரும்பத்தக்கது இல்லை அல்லவா! மேலும் எதற்காக டிஸ்லைக் செய்கின்றனர் என்பதும் சிக்கலை ஏற்படுத்தலாம். மாஜி காதலன் அல்லது காதலி தங்கள் முன்னாள் துணையின் பக்கத்தை டிஸ்லைக் செய்து தொலை தரலாம். கருத்து மோதல் ஏற்படும் இடங்களில் டிஸ்லைக் தாக்குதலுக்கான ஆயுதமாகலாம்.
அதோடு, ஒருவர் குறிப்பிட்ட தலைப்பை டிஸ்லைக் செய்தால், அந்த தலைப்பை டிஸ்லைக் செய்கிறாரா? அல்லது அது பற்றி நண்பர் தெரிவித்த கருத்தை டிஸ்லைக் செய்கிறாரா? என்று தெரியாத குழப்பமும் உண்டாகலாம். இவை தவிர வர்த்தக நிறுவனங்களின் பிராண்ட்களை டிஸ்லைக் செய்து அதிருப்தி தெரிவித்தால் என்ன செய்வது?
இப்படி பல வித பாதிப்புகளை யோசித்துப்பார்த்து பேஸ்புக் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் தயங்கியது. கடந்த ஆண்டு, பேஸ்புக் பயனாளிகள் மத்தியிலான டவுன் ஹால் கூட்டத்தில் உரையாடிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் , லைக் பட்டன் தவிர வேறு பட்டன்கள் தேவை என்பதை ஒப்புக்கொண்டாலும் ,டிஸ்லைக் பட்டனாக அது இருக்காது என கூறியிருந்தார்.
அதன் பிறகு பேஸ்புக் இது தொடர்பாக நிறைய யோசித்து, லைக் பட்டனுக்கான நீட்டிப்பை வழங்க தீர்மானித்தது. இது தான் ரியாக்ஷன்ஸ் வசதியாக அறிமுகமாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னரே இது பற்றி அறிவித்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் மத்தியில் இதை வெள்ளோட்டம் பார்த்து அவர்கள் கருத்துக்களின் அடிப்படையில் இப்போது இந்த வசதி தீர்மானிக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியில் லைக் செய்யலாம். லைக் தவிர ஐந்து விதமாக கருத்தை வெளிப்படுத்தலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு விதமாக சித்திர வடிவம் (எமோடிகானஸ்) இருக்கும். இவ்வாறு பயனாளிகள், அன்பு, வியப்பு,கோபம்,சிரிப்பு, சோகம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தலாம். லைக் சின்னத்தை கிளிக் செய்யும் போது விரும்பினால் இந்த வசதியை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.
இப்படி விதவிதமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் வசதி பயனாளிகள் இதுவரை எதிர்கொண்டு வந்த போதாமையை ஓரளவு போக்கியிருப்பதாக கருதப்பட்டாலும், உண்மையில் இதனால் பேஸ்புக்கிற்கே அதிக ஆதாயம் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.
பேஸ்புக் விளம்பரங்கள் மூலம் தான் வருவாயை அள்ளிக்குவிக்கிறது. பயனாளிகள் நிலைத்தகவல்களுக்கு ஏற்ப அது பொருத்தமான விளம்பரங்களை இடம்பெற வைக்கிறது. இந்த புரிதலை மேலும் ஆழமாக்கி கொள்ள பேஸ்புக் முயற்சி செய்து வரும் நிலையில், கருத்து தெரிவிப்பவர்கள் லைக் செய்யும் வித்த்தை வைத்தே அதனால் அவர்கள் விருப்பு, வெறுப்புகளை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என கருதப்படுகிறது. உதாரணத்திற்கு குறிப்பிட்ட நிறுவன செய்தி தொடர்லாக ஒருவர் ’கோபம்’ தெரிவித்திருந்தால் அவரது டைம்லைனில் அந்த நிறுவனம் தொடர்பான செய்தியை தவிர்த்துவிடலாம். அதே நேரத்தில் இன்னொருவர் நேசிப்பை வெளிப்படுத்தி இருந்தால் அவரது டைம்லைனில் அந்த பொருள் தொடர்பான செய்தியை அதிகமாக்கலாம். இப்படி பயனாளிகளின் மன உணர்வுகளை மேலும் சரியாக அறிந்து கொண்டு அவர்கள் டைம்லைனில் செய்திகளையும், விளம்பரங்களையும் இடம்பெறச்செய்வது சாத்தியமாகும் என்பதால் பேஸ்புக்கிற்கு இது பெரும் சாதகமாக அமையும் என கருதப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க மொழியில் வல்லுனர்கள் உண்மையில் இப்படி லைக் மூலம் கருத்து தெரிவிப்பது, அந்த வசதியை மேலும் விரிவு படுத்தியிருப்பது என்பது மனித மனம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தையே கட்டுப்படுத்தி மாற்றி அமைக்க்கூடியது என அச்சம் தெரிவித்துள்ளனர். மனித உணர்வுகள் ஒவ்வொன்றும் நுட்பமானவை,அவற்றை சித்திர எழுத்து வடிவத்திற்குல் சுருக்கப்பார்ப்பதே தவறானது என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேர் பேச்சில் வார்த்தைகளில் மட்டும் மல்லாமல் உடல் அசைவு, கண் பார்வை என பலவிதங்களில் உணர்வுகளை வெளிப்படுத்தப்பட்டு புரிந்து கொள்ளப்படும் நிலையில், வெறும் ஆறு வித லைக் சின்னங்களில் அவற்றை முடக்கப்பார்ப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.
——-
நன்றி; தமிழ் இந்திவில் எழுதியது.