தளம் புதிது: புத்தக அறிமுக தளம்
புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள புதிய வழியாக அறிமுகம் ஆகி இருக்கிறது ஹைலிரெக்கோ (https://www.highlyreco.com/ ) இணையதளம்.
மிக எளிமையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம், தொழில்நுட்பத்துறையில் பிரபலமாக இருக்கும் வல்லுனர்கள் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களை தேடிப்பிடித்து பரிந்துரை செய்கிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் முதல் அவற்றில் முதலீடு செய்யும் வலுனர்கள் வரை பலரது வாசிப்புக்களை இந்த தளத்தின் மூலம் அறிமுகம் செய்துகொள்ளலாம் என்பதோடு படிக்க வேண்டிய முக்கிய புத்தகங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வலைப்பதிவு, பேஸ்புக் பக்கம், டிவிட்டர் என பல இடங்களில் பிரபலங்கள் பகிர்ந்து கொண்ட புத்தக வாசிப்பு தொடர்பான கருத்துக்களை தேடி எடுத்து அழகாக தொகுத்தளிப்பது இதன் தனிச்சிறப்பாக இருக்கிறது.
புத்தகங்களை அவற்றை வாசிக்கும் மனிதர்கள் மூலமாக அறிந்து கொள்ள வழி செய்வது இதன் நோக்கமாக இருக்கிறது.
—
செய்தி வாசிப்பு தெரியும். செயலி வாசிப்பு பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? நார்வே நாட்டில் 31 மணி நேரத்திற்கு செயலி வாசிப்பை மேற்கொண்டு அதை இணையம் மூலம் நேரடியாக ஒளிபரப்பவும் செய்திருக்கின்றனர்.
ஸ்மார்ட்போன்களில் பரவலாக பயன்படுத்தப்படும் செயலிகளில் இடம்பெற்றுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவை அடங்கிய ஆவணங்களை திரட்டி அவற்றில் இடம்பெற்றுள்ள வாசகங்களை தான் இந்த வாசிப்பின் போது தொடர்ச்சியாக படிக்கச்செய்திருக்கின்றனர். நார்வே நாட்டில் உள்ள சராசரி ஸ்மார்ட்போன் பயனாளிகள் பரலவால பயன்படுத்தும் 33 செயலிகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் விதிமுறைகளை வாசித்து முடிக்க 31 மணி நேரம் ஆகியிருக்கிறது. ஆர்வலர்கள் மற்றும் பயனாளிகளை கொண்டு இந்த வாசிப்பை நிகழ்த்தியுள்ளன. வார்த்தைகளில் கணக்கு பார்த்து இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வார்த்தைகளுக்கு மேல் வருகிறது.
இத்தனை வார்த்தைகளையும் படித்துப்பார்த்து புரிந்து கொள்வது சாத்தியமா? என யோசித்துப்பாருங்கள். அதனால் தான் செயலி பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த புதுமையாக முயற்சியை மேற்கொண்டு ,செயலிகளின் நிபந்தனைகள் படிப்பது எத்தனை கடினமானது என உணர்த்த முற்பட்டுள்ளனர்.
பொதுவாக ஸ்மார்ட்போன் பயனாளிகள் செயலிகளின் விதிமுறைகளை படித்துப்பார்க்காமலேயே அவற்றுக்கு உடன்படுபவதாக தெரிவித்து விடுகின்றனர். எனவே தாங்கள் எந்த நிபந்தனைகளுக்கு எல்லாம் உட்படுகிறோம் என்பதை அறிவதே இல்லை.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் உரிமையை வலியுறுத்தும் வகையில் நார்வே நாட்டு நுகர்வோர் அமைப்பு இந்த மராத்தான் செயலி வாசிப்பை நிகழ்த்தி, செயலிகளின் நிபந்தனை படிவங்கள் எத்தனை அபத்தமாக இருக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் நிற்கவில்லை, செயலி நிபந்தனைகள் சுருக்கமாக, தெளிவாக எல்லோரும் படித்து புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய: http://www.forbrukerradet.no/terms-and-conditions-word-by-word/“>http://www.forbrukerradet.no/terms-and-conditions-word-by-word/
—
இவர் இன்ஸ்டாகிராம் அம்மா
புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர் என்றால் போலந்து பெண்மணி அன்னா ரோஸ்வாட்ஸ்காவின் (https://www.instagram.com/kreatywniezakrecona/ ) இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீங்கள் பின் தொடரலாம்.
அன்னாவின் இன்ஸ்டாகிராம் இந்த பக்கத்தில் தனது இரண்டு குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். எல்லாம அவரே எடுத்த புகைப்படங்கள் என்பது மட்டும் அல்ல விஷயம். அந்த படங்கள் எடுக்கப்பட்ட விதம் தான் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. ஆம், அன்னா, பலவகையான காஸ்டியூம்களை தயார் செய்து அவற்றை தனது குழந்தைகளை அணிய வைத்து அந்த போஸ்களை படம் பிடிக்கிறார். இப்படி ஹாரிபார்ட்டரில் துவங்கி பலவகையான கதாபாத்திரங்களில் தனது குழந்தைகளை அவர் படம் பிடித்து பகிர்ந்து கொள்கிறார்.
இதற்காக என்று அழகான இடங்களை தேர்வு செய்து, படம் எடுக்கிறார். எழில் கொஞ்சும் பின்னணியில் மழலைகள் குழந்தை பருவத்தின் அப்பாவித்தனத்துடன் போஸ் கொடுக்கும் காட்சி நெஞ்சை கொள்ளை கொள்கிறது.
—
செயலி புதிது; கூகுள்
கூகுள் சமீபத்தில் பல புதிய அறிமுகங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டது. அவற்றில் , ஸ்பேஸ் செயலி ஸ்மார்ட்போன் மூலம் தகவல்களை சிறு குழுக்களுக்குள் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படக்கூடிய ஸ்பேஸ் செயலியை பயன்படுத்தி உங்களுக்கான பக்கத்தை உருவாக்கி , பயண விவரங்கள், திட்டங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாம். இந்த பக்கத்தை பற்றி நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு இமெயில் அல்லது செய்தி சேவை மூலம் தகவல் தெரிவித்து அழைப்பு விடுக்கலாம். கூகுள் தேடல் சேவை மற்றும் யூடியூப் ஆகிய வசதிகளை உள்ளடக்கிருப்பதால் தேவையான தகவல்களை எளிதாக எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட தலைப்புகளில் தகவல் பகிர்வு மற்றும் உரையாடலுக்கு எந்த சேவை உதவும் என கூகுள் தெரிவிக்கிறது. இந்த செயலிக்குள் தேடல் வசதியும் இருப்பதால் ஏற்கனவே பகிர்ந்து கொண்ட தகவல்களை எளிதாக தேடலாம்.
ஏற்கனவே கூகுள் பிளஸ் மற்றும் கூகுள் ஹாங்கவுட் போன்ற சேவைகள் உள்ள நிலையில் அதே வசதியை அளிக்க கூடிய இன்னொரு சேவை எதற்கு என்ற கேள்விகள் எழுந்தாலும் பயன்படுத்த எளிதான இந்த சேவை , உடனடியாக ஒரு குழுவை உருவாக்கி கொண்டு தகவல்களை பகிர்ந்து கொள்ள கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவைக்காக தனியே உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டாம் என்பது இன்னும் வசதி.
மேலும் தகவலுக்கு: https://get.google.com/spaces/

1 Comments on “செயலிகளை வாசித்தது நாங்கள்!”
vasanth
கவனிக்க வேண்டிய பதிவு. இணைய உலகில் கூறப்படுகின்ற பொய்களில் முதன்மையானது ” I have read the terms and conditions ” என்பதுதான். இது குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவை.