இணையம் மூலம் பொருட்களை வாங்குவது எளிதாக இருக்கிறது. சிறிய நகரங்களில் கூட இந்த முறை வேகமாக பிரபலமாகி வருகிறது. ஆனால் ஆன் -லைனில் ஷாப்பிங் செய்யும் போது கவனமாகவும் இருக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் ஷாப்பிங் செய்ய மட்டும் அல்ல,இணைய ஷாப்பிங் மூலம் கிடைக்க கூடிய பலன்களை அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ளவும் இந்த கவனம் உதவும். ஆன் -லைனில் ஷாப்பிங் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில:
தள்ளுபடி தேடல்
இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்குவதற்கு முன்னர் முதலில் அந்த பொருட்களுக்கான தள்ளுபடி இருக்கிறதா என தெரிந்து கொள்ளுங்கள். பல தளங்கள் தள்ளுபடி கூப்பன் போன்றவற்றை அளிக்கின்றன. விலை குறைப்பு போன்ற சலுகைகளும் இருக்கலாம். இதை முதலிலேயே தெரிந்து கொள்ள முடிந்தால் அதற்கேற்ப நீங்கள் வாங்கும் பொருளை திட்டமிடலாம். தள்ளுபடி கூப்பன் போன்றவை பற்றி தகவல்கள் தரும் இணையதளங்கள் பல இருக்கின்றன. நீங்களே கூட கூகுளில் தேடிப்பார்ககலாம். தள்ளுபடி மட்டும் அல்ல கேஷ்பேக் போன்ற சலுகைகளும் தொடர்ந்து அறிவிக்கப்படுவதால் அவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும்.
விலை ஒப்பிடு
நீங்கள் வாங்க விரும்பும் பொருள் வேறு ஒரு இ-காமர்ஸ் தளத்தில் அதை விட குறைந்த விலையில் கிடைக்கலாம். எனவே பொருளை வாங்குவதற்கு முன் , இணையத்தில் அந்த பொருளுக்கான விலையை ஒப்பிட்டு பார்த்துக்கொள்வது நல்லது. புத்தகங்கள் முதல் ஸ்மார்ட்போன் வரை பல விதமான பொருட்களுக்கான விலைகளை ஒப்பிடும் சேவையை அளிக்கும் இணையதளங்கள் இருக்கின்றன;
விலை வலை உஷார்
நீங்கள் இணையத்தில் அடிக்கடி பொருட்களை வாங்குபவர் எனில் டைனமிக் பிரைசிங் உத்தி பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இணையவாசிகளின் வாங்கும் பழக்கத்தின் அடிப்படையில் பொருட்களின் விலை நிர்ணயிக்கும் வழ்க்கத்தை பல இ-காமர்ஸ் தளங்கள் கடைபிடிக்கின்றன.இந்த உத்தியே டைனமிக் பிரைசிங் என குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் தளத்தில் காண்பிக்கப்படும் விலை நபருக்கு நபர் மாறுபட வாய்ப்பிருக்கிறது என்பதாகும். இந்த வலையில் சிக்குவதை தவிர்க்க நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரில் உள்ள குக்கிஸ் எனப்படும் கண்காணிப்பு சாப்ட்வேர்களை நீக்கவும்.
வாங்கும் முன் தாமதம்
தேவையான பொருட்களை பார்த்ததும் உடனே வாங்க வேண்டாம். அதை ஆர்டர் செய்யாமல் உங்களுக்கான விருப்ப பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும். இதன் விளைவாக குறிப்பிட்ட அந்த இணையதளம் உங்களுக்கு தள்ளுபடி சலுகை மூலம் அளித்து ஈர்க்க முன்வரலாம்.
பாதுகாப்பு
பொருட்களை வாங்க கிரிடிட் கார்டு மூலம் ,அல்லது மொபைல் வாலெட் வாயிலாக இணையம் மூலமே பணம் செலுத்துவதாக இருந்தால், குறிப்பிட்ட அந்த தளம் பாதுகாப்பானதா என்பது உறுதி செய்து கொள்ளவும். அதே போல பாதுகாப்பு இல்லாத வை-பை வசதி மூலம் இணையத்தை அணுகும் போது கிரிடிட் கார்டு விவரத்தை சமர்பிக்க வேண்டாம். பொருட்களை வாங்கும் முன், அந்த பொருளுக்கான திரும்பி செலுத்தும் விதிமுறைகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.